விருச்சிகம்:
இதுவரை உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்போது உங்களுடைய விரய ஸ்தானமான பனிரண்டாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இதையே ஏழரைச் சனி என்று குறிப்பிடுவர். பனிரண்டாமிடம் என்பது விரய ஸ்தானமாகும். அங்கு சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. மன மகிழ்ச்சி இருக்காது . படுத்தல்கள் இருக்கத்தான் செய்யும். விரயச் சனியானவர் உங்களை அலைக்கழித்து தொல்லைப்படுத்துவார்.
ஒருவர் உழைத்தால் முன்னேற்றம் காணலாம். உழைப்புக்கு அதிபதிதான் சனிபகவான். ஆனால், அவர் வீற்றிருக்கும் இடம் விரய ஸ்தானம் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே விரயச்சனி எந்த விதத்திலும் லாபத்தைக் கொடுக்கமாட்டார். எதைத் தொட்டாலும் நஷ்டத்தையே ஏற்படுத்துவார். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டாது. சில சமயம் சிறிதளவு பலன் கிட்டும். வேறு சில சமயங்களிl உங்கள் உழைப்பின் பயனை வேறு யாராவது அனுபவிப்பார்கள்.
ஏழரைச் சனியின் மூன்று பகுதிகளில் இப்போது முதல் பகுதி ஆரம்பமாகியிருக்கிறது. இரண்டரை ஆண்டுகள் நடக்கப் போகும் விரயச்சனியாகும், இது.
இந்தக் காலத்தில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், படிப்புக்கேற்ற வேலையாக இருக்காது. குறைந்த சம்பளத்திலான வேலையாக இருக்கும். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்குரிய சந்தர்ப்பம் அமையாது. அல்லது தாமதமாக அமையும். அப்படியே அமைந்தாலும் உடனே லாபம் கொட்டத் தொடங்காது. மார்க்கெட்டில் காலூன்றவே வெகு காலம் பிடிக்கும். மிகக் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். நீண்ட காலம் பொறுத்திருக்கவேண்டும். வருமானத்தைத் தேடிக் கொடுக்கும், எந்த வேலையிலும் போதுமான அபிவிருத்தியும் ஆதாயமும் இருக்காது. தொட்டது தொட்டபடியே இருக்கும். விட்டது விட்ட இடத்திலேயே நிற்கும். உங்களுடைய எண்ணங்களும் நோக்கங்களும் , செயல்களும் சரியான பாதையில் செல்லாமல், அடிக்கடி திசை மாறிச் செல்லும். செலவுகள் அனைத்தும் ஒருமடங்குக்கு இரு மடங்காகும். அவசிய செலவுகள், அவசர செலவுகள், மருத்துவச் செலவுகள், தண்டச் செலவுகள் இவை அனைத்தும் மாறி மாறி ஏற்படும். ஆனால் அதிகம் பயந்து கலங்க வேண்டிய அவசியம் இல்லை. பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தால், எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம்.
மனைவியின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. அடிக்கடி தொல்லை கொடுக்கும் என்பதோடு மருத்தவச் செலவுகளும் ஏற்படும். மனதில் இனம் புரியாத கவலை இருந்துகொண்டே இருக்கும். சனிபகவான் ஆறாமிடத்தைப் பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சரீர செக்கப் தேவைப்படும்போது, நோய் முற்றும்வரை காத்திருக்காமல் உடனுக்குடன் செய்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். நீர்கட்டி, மூட்டுவலி, நரம்பு, கர்ப்பப்பைக்கு அறுவை சிகிச்சை இப்படி ஏதாவது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கவே செய்யும்.
கல்வி சம்பந்தப்பட்ட வகையில் சனியின் மந்தமான போக்கின் மூலம் குறைந்த மதிப்பெண்தான் எடுக்க முடியும். உயர்கல்விக்குத் தடை ஏற்படும். பகுதிநேரப் படிப்பாவது ஓரளவுக்கு கை கொடுக்கும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு கட்டாயம் தோல்வியில் முடியும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் நிந்தனை உங்களுக்கு ஏற்படும். அவர்களது கோபத்துக்கு ஆளாவதை முற்றிலும் தவிர்க்கவும்; முடிந்தால், திருப்திப்படுத்துங்கள்.
இனி சனியின் பார்வை பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனிபகவான் தன்னுடைய 3,7, 10-ம் பார்வையினால், உங்களுடைய தன-குடும்ப- வாக்கு ஸ்தானம்; பகை- ரோக – கடன் ஸ்தானம்; பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.இந்தப் பார்வைகள் மூலம் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
முதலில் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுடைய தன – குடும்ப-வாக்கு ஸ்தானத்தில் பதிவதால், எப்போதுமே பணப் பற்றாக்குறை இருக்கும். அப்படியே பணம் சிறு அளவு பணவரவு கிடைப்பதாக இருந்தாலும் பலவித சிக்கல்களுக்குப் பிறகே கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் வழிகள் அனைத்தும் அடைபட்டுக் கிடக்கும். தடைகள் தாமதங்கள் அனைத்தும் குறுக்கிடும். கொடுக்கல்-வாங்கலில் தேக்கம் ஏற்படும். குடும்ப நிர்வாகத்தில் குளறுபடி ஏற்படும்.
நாக்கிலும் வாக்கிலும் சனி பதிந்திருப்பதால், உங்களிடமிருந்து தேவையற்ற வார்த்தைகள் வெளிப்படும். உங்கள் வார்த்தைகள் உங்களையும் மீறி வெளிப்படும். குதர்க்கமாகப் பேசுவது தேவையற்றது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அனாவசிய வார்த்தை ஜாலங்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். யாருக்கும் உங்கள் பேச்சு ரசிக்காது. உங்களையும் கோமாளியாக்கி, மற்றவர்களின் மனதையும் குத்திக் கிழிக்கும் பேச்சை யார்தான் ரசிப்பார்கள்? போலி சத்தியம் செய்வது, சவால் விட்டுப் பேசுவது ஆகியவையே இப்போது உங்களிடம் அதிகம் காணப்படும்.
சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களுடைய பகை-ரோக- கடன் ஸ்தானத்தில் பதிவதை உங்களுக்கு நல்லது என்று கூறலாம். உங்களுக்குப் பகையாளியாக இருப்பவர்களின் மீது உங்கள் [பார்வை பதிவதால், பகைவர்கள் மனம் மாறி, உங்கள் நட்பை நாடி வருவார்கள். உங்களுக்கு ஏற்படும் நோய்கள்மீது சனியின் பார்வை பதிவதால், நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஒடும். அதேபோல கடன்களைச் சமாளிக்கும் அளவு கைக்கு பணம் வந்து சேரும்.
சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால், உங்கள் தகப்பனாருடைய உடல்நலம் பாதிக்கப்படும். உங்களுடைய தகப்பனாருக்கு பாதிப்பும் அவருடைய பொறுப்புகளில் சிரமங்களும் ஏற்படும். நீங்கள் மனைவி மக்களின் வசதியைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். உற்றார் -உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பாடு படுவீர்கள். ஆனால், நீங்கள் நினைத்தபடி எதுவும் நடக்காது. எல்லாவற்றிலும் சனி பகவானின் குறுக்கீடு இருக்கும்.
இனி சனி பகவானின் வக்கிர சஞ்சார பலன்களைப் பார்க்கலாம் இந்த இரண்டரை ஆண்டில் சனி பகவான் மூன்று முறை வக்கிர சஞ்சாரம் செய்கிறார்.
(1). 9.2.12. முதல் 24.6.12. வரையிலான 4 மாதம் 15 நாட்கள்:
தொடர்ந்து பல வகையிலும் வியங்கள் ஏற்பட்டாலும் எப்படியாவது நீங்கள் எல்லா வகையான விரயச் செலவுகளையும் சமாளிக்கும் வண்ணம் எப்படியாவது வருமானம் வந்துகொண்டிருக்கும். எதிர்பாராத வகையில் ஆதாய வரவுகள் ஏற்படும். விரும்பும் பொருட்களையும் வாங்க முடியும்.
பேச்சில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.. நாவடக்கம் அவசியம் என்பதை ஏற்கெனவே பலமுறை சொல்லிவிட்டோம். யாரிடம் பேசினாலும் அவர்களுக்குரிய மரியாதையைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிடவேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் தரத்தையும் குறைக்கும். வாய்ச்சண்டை பெரிய அடிதடியில் கொண்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவத்ற்கில்லை. எனவே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால், முடிந்தவரை அவற்றை தவிர்ப்பது நல்லது. பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தது போல நடித்து அந்த இடத்தை விட்டு தள்ளிப் போய்விட்டால், நீங்கள் சண்டையையும் தவிர்த்தது போலாகிவிடும். உங்கள் தன்மானமும் காப்பாற்றப்பட்டுவிடும். சிறுசிறு திட்டங்களை ஓரளவுக்கு நிறைவேற்றிக்கொள்ளமுடியும். ஆனால் பெரிய திட்டங்களாகப் போட்டுவிட்டால் நிறைவேறாமல் போகும். இந்த நேரத்தில் யாரிடம் உதவி கேட்டாலும் கிடைக்காது. ஏனென்றால், வெளிவட்டாரச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது.
கலைஞர்களுக்கு ஆரோக்கியம் பாதிப்படையும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலையில் தவறு ஏற்பட்டு மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றும். குடும்பத்தில் செலவுகளைக் குறைக்க முயன்று தோற்றுப் போவீர்கள். உறவினர் வருகையால் புதுக் குழப்பங்கள் தோன்றும்.
(2). 16.2.13முதல் 12.7.13. வரையிலான 4 மாதம் 26 நாட்கள்:
இப்போது சனி பகவான் இரண்டாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வம்பு, சண்டையை வரவழைத்துக்கொள்வீர்கள். ஆனால், பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாகவே முடிவடையும். கடமைகளும் காரியங்களும் உங்கள் முன் நிறைந்து கிடப்பதால், செலவுகள் எக்கச்சக்கமாக எகிறும். ஆனாலும் அத்தனை செலவுகளையும் சமாளிக்கும் வண்ணம் உங்களுக்கு வருமானம் வந்துவிடும். வாகனத்திலிருந்து கீழே விழுதல், எதிலாவது இடித்துக்கொண்டு ரத்தக்காயம் ஏற்படுவது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றாலும் ஏற்படும் அசௌகரியங்கள் உடனுக்குடன் நீங்கிவிடும். உங்களுக்கு சில விபரீத எண்ணங்கள் தோன்றும். அவற்றின் மூலம் பல சிக்கல்கள் தோன்றும். உங்கள் தகுதிக்கு கீழே உள்ளவர்களுடன் நட்பு கொள்வீர்கள். அவர்களின் மூலம் உங்களுக்கு சில லாபங்கள் தோன்றினாலும், மற்றவர்கள் உங்களை குறைத்து மதிப்பிடுவீர்கள். கலைஞர்கள் அகம்பாவமாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு வேலையைச் செய்து முடிப்பதற்குள் படாதபாடுபடுவீர்கள். தொழில், வியபாரத்தில் மிக அதிகமாக உழைத்து குறைவான லாபத்தை பார்க்கவேண்டியிருக்கும். தினமும் கணவன்- மனைவி சண்டை தொடர்கதை போலாகிவிடும். தாய்-தந்தைக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.
(3). 3.3.14. முதல் 23.7.14.வரையிலான 4 மாதம் 20 நாட்கள்:
இப்போது சனி பகவான் மூன்றாம் முறையாக வக்கிர சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலத்தில், திடீர் திடீரென்று சோர்ந்து போவீர்கள். எந்தக் காரியத்தை எடுத்துக் கொன்டாலும் செய்யமுடியாதது போல் பலம் குன்றிப் போவீர்கள். தளர்ச்சியும் தன்னம்பிக்கையின்மையும் ஏற்படும். செலவுக்கு பணம் கிடைக்காது போகும். கடன் வாங்கினால் அசலையும் கொடுக்கமுடியாமல் வட்டியையும் கொடுக்கமுடியாமல் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். ஒரு பங்கு வருமானம் வந்தால் இரு பங்கு செலவு ஏற்படும். கடமைகளில் தவறுகள் ஏற்படும். உங்கள் இலக்கு அடிக்கடி தவறிப் போகும். நல்ல முடிவுகள் எடுக்க முடியாமல் மனம் தடுமாறும். வேகமாக செயல்படுவதுபோல தோன்றினாலும், நீங்கள் மிகவும் தாமதமாகத்தான் எதையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த படாதபாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில், அலைச்சல், அலைக்கழிப்புகள் போன்றவையே மிஞ்சும். கலைஞர்களுக்குப் போட்டியைச் சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும். குடும்பத்தில் அடிக்கடி பூசலகள் ஏற்படும். குடுபத்தினரின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்று குறை கூறுவார்கள்.
மொத்தத்தில் விரயச்சனி காலத்தில் பொருள் நஷ்டம், பண நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. கூடுதல் உழைப்பை தானம் செய்து ஓரளவுக்காவது வருமானத்தைப் பார்க்கலாம். சேமிப்பு என்று எதுவும் வேண்டாம்; செலவுகளைச் சமாளித்தாலே போதும் என்றாகிவிடும்.
பரிகாரம்:
1.. சனியால் ஏற்படும் தொல்லைகள் தீர சனியின் குருவான கால பைரவருக்கு அஷ்டமி திதிக்களில் உளுந்து வடைமாலை சாற்றி வணங்கிடவும்.
2. மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று தோஷ பரிகாரங்களை உரிய முறையில் செய்து கொள்ளவும்.
3. பிரதோஷ காலத்தில் யோக நரசிம்மரை பக்தி சிரத்தியுடன் வழிபடவும்.
4, பிரதி சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு 9 முறை வலம் வந்து வணங்கவும்.
5. திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம் முதலிய இடங்கலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரரை தரிசித்து பரிகார வழிபாடுகளைச் செய்யவும் .
வாழ்க வளமுடன்!
Tags : sani peyarchi palangal 2011 for the rasi viruchiga rasi
சனி பெயர்ச்சி பலன்கள் 2011, விருச்சிக ராசி,விருச்சிக ராசி ,சனி பெயர்ச்சி பலன்கள் 2011,விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள்,சனி பெயர்ச்சி பலன்கள் 2011, 2011 ராசி பலன், viruchigam + rasi palan, rasi palan +viruchiga rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + viruchagam rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + viruchigam, sani peyarchi palangal 2011, அர்ச்சனை, குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன், சனிப்பெயர்ச்சி, திருநள்ளாறு, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பெண், பெயர்ச்சி, மதுரை,விருச்சிக ,விருச்சிகம், விருச்சிக ராசி, விருச்சிக ராசி பலன்கள் , விருச்சிகம் ராசி, ராகு, ராசி, ராசி பலன்கள், வேலை, திருநள்ளாறு, குச்சானூர், ஏரிக்குப்பம்,கால பைரவ,ஏழரைச் சனி,விரயச்சனி, சனியின் பார்வை
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments