1. மேஷம்:
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். நற்பலன்களைக் கொடுக்கவேண்டிய யோகம்தான் என்றாலும் குருவின் மாறுபட்ட நிலைகளால், நற்பலன்களை நீங்கள் முழுதுமாக அனுபவிக்க முடியாமல், இருந்தீர்கள். குருவின் நல்ல நிலைகள்கூட உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. குரு அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்ததால், உங்களால், எந்த நற்பலனையும் முழுதுமாக அடைய முடியாமல்தான் போனது. இப்போது, இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதை அவ்வளவு நல்லதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். உங்களூக்கு சனிப் பெயர்ச்சியால், பாதிப்புகள் நேரிடினும், அதனின்று மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு, கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால், சனியின் தாக்கம் தற்காலிகமாக இருக்குமேயல்லாது, பெரிதாக அமையாது. ராசிக்குரிய களத்திர வீட்டில், உச்ச நிலையில் பெயர்ந்த சனி, ராசிக்குரிய ஜீவன ஆதாயத்தை அளித்து மகிழ்வார். மிகுந்த பாதக விளைவுகளையும் கொடுத்து உங்களை அலைக்கழிக்கவும் செய்வார். மனைவியுடன் கருத்து வேற்றுமை, தொழில் பார்ட்னரால், சங்கடங்கள் ஏற்படும். தொழில் பார்ட்னரோடு தீராப்பகை ஏற்பட்டு பெருத்த பண நஷ்டத்தை ஏற்படுத்தும். வர்த்தக ஆதாயங்களில் இழப்பு, சொத்துக்களின் உரிமை பாதிப்பு , மனையாள் நோய் பாதிப்பு, மாரக கண்டங்கள் போன்ற நிலைகளில் சனி பிரச்சினைகளைத் தோற்றுவிப்பார். மொத்தத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் விட்டுக்கொடுத்துப் பழகவும். அக்கம்பக்கம் அனுசரணையாக இருந்துகொள்ளவும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்திலும் மன நலத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுடன் சண்டைகள், வாக்குவாதங்கள் வராமல் பார்த்துக்கொள்ளவும். திருமணம் செய்ய நினைப்பவர்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவது நல்லது. ஆனால், குருபார்வை இருப்பதால், ஓரளவுக்கு நல்லது. குரு பார்வை மூலமாக தந்தை வழியில் சொத்துக்களினால், நன்மை ஏற்படலாம். தொழில் வகையில் கவனம் தேவை. தொழிலை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது. லாப வகையில் கவனமாக இருந்துகொள்ளவும். வீண்வம்புகள், வழக்குகள் வராமலும் , வாகனங்களால், சிறு விபத்துக்கள் வராமலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் விரயச் செலவுகள் ஏற்படும். பண வரவுகளும் ஏற்படும். உடனே எப்படியாவது சேமித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், வீணாகக் கரைந்துவிடும். பேச்சு வார்த்தைகளை தேவையோடு பேசவும். இல்லையேல், ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்ள நேரும். கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், நிலம், வீடு, வாகனம் வாங்குதல் முதலியவற்றிலும் கவனம் தேவை. உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் நலம் சிறக்கும்.
சனிபகவானின் கெட்ட பார்வைகளில் ஒன்று நேர்ப் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உங்களிடமிருந்து சுறுசுறுப்பு மறைந்துவிடும். தாமதமாக முடிவெடுப்பீர்கள். அதிலும் குழப்பமான முடிவுகளையே எடுப்பீர்கள். வருமானம் செய்வதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
உங்களுக்கு சப்தமத்தில் வந்திருக்கும் சனி பகவான், உங்கள் ராசிக்கு 1,4,9-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். 1-ம் இடத்துப் பார்வையால், எப்போதும் நெஞ்சில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். வியாதியினால் துன்பப்படாமல் இருக்க போதுமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கைகளையும் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் தவறாது கடைப்பிடித்து வந்தால் மட்டுமே, நோய் நிவாரணங்களை அடைய முடியும். உடன் பிறந்தவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டியிருக்கும். பேசும் வார்த்தைகள் சரளமாக இருக்காது.
சனியின் 4-ம் இடத்துப் பார்வையினால், சில சுகங்களை இழக்க நேரும். பெற்றோர்கள் சொத்துக்களைப் பெறுவதில் தடை ஏற்படும். சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் தாயார் உடல்நிலை மோசமடையும். சொத்துக்கள் வாங்கினாலும் அதிலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரும். பேசும் வார்த்தைகளினால் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரும்.
சனியின் 9-ம் இடத்துப் பார்வை தந்தையின் உடல்நலத்தைக் கேள்விக்குறியாக்கும். மனக்கசப்பு, கருத்து வேறுபாடுகள், காரியத் தடைகள், பொது சேவையில் தெய்வ காரியங்களில் நிந்தனை ஏற்படுதல் ஆகியவை ஏற்படும். தொழில் பளு கூடி, பெரும்பாலோர் திணறவும், மற்றும் அயர்ச்சி, பின்னடைவு, தோல்வியில் துவளுதல் போன்றவை ஏற்படும். ஆனால், குருபகவானின் பார்வையால், கெடு பலன்கள் குறையலாம்; அல்லது நல்லதாகவேகூட நடக்கும்.
மேற்கூறிய கெடுபலன்கள் ஏகத்துக்கும் கலக்கமடைய வைத்திருந்தால், நீங்கள் அதிகமாக பயம் கொள்ளத் தேவையில்லை. குருவின் சஞ்சாரம் கை கொடுக்கும்.
இந்த இரண்டரை வருட சனி சஞ்சார காலத்தில் மூன்று முறை சனி வக்கிர கதியில் சஞ்சரிப்பார். அப்போது இரட்டிப்பு கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
சனியின் வக்கிர காலங்கள்:
1. 9.2.12.முதல் 24.6.12.வரையில் (4 மாதம் 15 நாட்கள்) மற்றும்
2. 16.2. 2013 முதல், 12. 7. 13. வரை(4 மாதம் 26 நாட்கள்)
3. 3.3.14 முதல் 24.7.14.வரை ( 4 மாதங்கள் 20 நாட்கள்)
இந்தக் காலங்களில் எல்லாவற்றிலுமே சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. சாண் ஏறினால் முழம் வழுக்கும். ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தால், ஐயாயிரம் ரூபாய்க்கு பின்னாலேயே செலவு வந்து சேரும். கவனமாகவும் பொறுமையாகவும் இருந்தால், எல்லாவற்றையும் சமாளிக்கலாம். உறவினருடன் ஏற்படும் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் வாக்குவாதங்கள் முற்றி பெரிய சீரியஸ் பிரச்சினை ஆகிவிடும். உங்களுடைய பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் தோன்றி மறையும். கடமைகளும் பொறுப்புகளும் அதிகமாகி திணற வைக்கும். அவ்வப்போது ஊக்கத்திலும் உடல் நலத்திலும் பின்னடைவு ஏற்படும்.
கெண்ட சனி வந்துவிட்டதே என்று நொந்து போன மேஷ ராசி நேயர்களுக்கு மிகவும் ஆறுதல் தரும் விதமாக, சில காலக் கட்டங்கள் அமைகின்றன.
முதற்காலக்கட்டமாக 8.11.12 முதல் 4.11.13 வரையிலான ஏறக்குறைய 1 வருட காலத்துக்கு பலவித ராஜ யோகங்கள் தோன்றி உங்களை மகிழ்ச்சியில் உறைய வைத்து இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். மிகப் பெருமளவில் வர்த்தக லாபத்தை அடைய முடியும். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை நீங்கும். நீங்கள் எத்தனைதான் பாசம் காட்டினும், உங்களுடன் பகை பாராட்டிய , உங்களை மிரட்டிய உற்றார்- உறவினர்கள் இப்போது உங்களுடன் பகை நீங்கி ஒற்றுமையுடன் இணங்கி வருவர். உங்களிடம் பணிந்து நடந்துகொள்வார்கள். வர்த்தகம், வியாபாரம். இன்ஷ்யூரன்ஸ் , காய்கறித்தொழில். குத்தகை போன்ற துறைகளில் ஈடுபடுபவர்கள் பெருத்த லாபமடைவார்கள். பணம் சரளமாய்ப் புரளும். தொழிற்சாலைகளில் பணி புரிவோரும், அலுவலகப் பணியாளர்களும், இடையூறுகளற்ற பணி உயர்வும், வருமான உயர்வும் அடைவர்.
இரண்டாவது கட்டமாக, 5.11.13. முதல் 2.11.14வரையான காலக்கட்டமும் யோகமாகவே இருக்கும். துலாத்தில் சனியும், சூரியனும், வக்கிர புதனும், ராகுவும் நிற்க, ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்று விருச்சிகத்தில் நிற்கும் சுக்கிரனைப் பார்த்திடவும்,ராசிக்கு வீரிய தானத்தில் விரியயாதிபதி குரு நின்று, துலாத்தைப் பார்வையிட்டு சனி சர்ப்ப தோஷத்தை முறிக்கத் துவங்கும். இக்காலத்தில் சர்ப்பங்களின் அனுக்கிரகத்தாலும், குருவின் அருள்பார்வையாலும், பருத்தி புடவையாய்க் காய்த்தது போல உங்களுக்கு தொடர்ச்சியாய் ராஜயோகங்கள் நேரடியாகவும் மறைவுத் தானாதிபதிகளாலும் கிடைக்கப்பெற்று சனியின் பாதிப்பால், கஷ்டம்-நஷ்டம், இழப்பு, இழிவு சோகம் ஏதுமின்றி சனியின் இரும்புப் பிடிலிருந்து நழுவித் தப்பித்துக்கொள்வீர்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் மிகுந்து திரளான செல்வத்தைப் பெற்று கடன் உபாதைகள் , அவச் சொல்லிலிருந்து மீண்டு, நிமிர்ந்து செருக்குடன் திகழ்வீர்கள். சில கிரக மாறுதல்கள் தொடர்ந்து ராஜயோகத்தைஉங்களுக்கு வாரி வழங்கும். இதனால், பணியில் ஏற்றம் அடைவதோடு, வீடு வாசல், வாகனம் என்று செலவத்தைத் திரட்டுவீர்கள். நிரந்தர செல்வந்தராகவும் ஆவீர்கள். நினத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு செல்வத்தை அடைவீர்கள். பணியாளர்களுக்கு பணிஉயர்வு, ப்ரமோஷன் எல்லாம் கிடைக்கும். நாள்பட்ட, தடைப்பட்ட திருமணங்கள் கிடுகிடுவென நடந்தேறும். பிரச்சினைகள் எளிதில் நீங்கும். சக தொழிலாளர்கள், பார்ட்னரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். சுபகாரிய விஷேஷங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான உறவு காணப்படும். மொத்தத்தில் மேஷ ராசிக்கரர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் பாதிப்புகள் நேரிடினும், அதனின்று மீள்வதற்கு கிரகங்கள் குறிப்பாக ராகு கேதுக்கள் அனுசரணையாக செயல்படுவதால், சனியின் தாக்கம் தற்காலிக பாதிப்பாக இருக்குமேயன்றி, பெரிதாக அமையாது.
பரிகாரம்:
சனிக்குரிய தெய்வங்களான
(1.)லட்சுமி தாயாரைஅவரவர் வசதிக்கேற்ப தொழுது பணிந்து எழுந்திட சனிப்பீடை- தோஷம் விலகி நிற்கும
.(2), திருப்பதியில் எழுந்தருளியுள்ள பத்மாவதித் தாயார்;
(3) அரசன் கோவிலிலுள்ள சுந்தர மகா லட்சுமி;
(4). அரியலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலிலுள்ள வீர நாராயணப் பெருமாள் கோவிலில் (குருவாலப்பர்கோவில்) எழுந்தருளியிருக்கும், மரகதவல்லித் தாயார்;
(5). மரகதாம்பாள் உடனாய வரமூர்தீஸ்வரர் கோவில்;
(6). அரியத் துறை( கவரப்பேட்டை) அல்லது சோளிங்கர் ஆஞ்சநேயர்,
(7). திருக்கச்சி பெருந்தேவித் தாயார் தேவராஜப் பெருமாள் ;
(8). கஷ்டம் நீக்கிய பைரவர் திருப்பாச்சேத்தி ,மானாமதுரைவட்டம்,ஈரோடு,
(9). கொடுமுடிநாயகி உடனாய கொடுமுடி ஈஸ்வரர் மற்றும் திருக்குறுங்குடி( நான்குநேரி)
(10). குறுங்குடிவல்லி தாயார் உடனாய நம்பிராஜ பெருமாளுக்கு கைங்கரியம் செய்யும் நிலையில் ஈசனான பக்கம் நின்றார், (11). அனிலேஸ்வரருக்கும் க்ஷேத்திர பாலரான கால பைரவருக்கும்
உரிய அர்ச்சனைகளை செய்து மகிழ்வித்திட சனிபீடை விலகும்.
இது மட்டுமின்றி, சனிக்கிழமைதோறும், சனீஸ்வரனுக்கு விளக்கு போடுதல், குச்சானூர், திருநள்ளாறு முதலிய சனீஸ்வர ஸ்தலங்களுக்கு சென்று வருதல் சனீஸ்வனுக்குரிய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தல் முதலிய அனைத்து பரிகாரங்களையும் விடாது செய்து வந்தால், சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
சனீஸ்வர ஸ்தலங்கள், படிக்கவேண்டிய ஸ்லோகங்கள் பற்றிய விளக்கங்களை ஏற்கெனவே கொடுத்துள்ளோம். வாழ்க வளமுடன்.!
Tags : sani peyarchi palan 2011 for mesha rasi and sani peyarchi palangal 2011 which happens in november 2011 for mesham rasi among twelve rasi and detailed rasi palan
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments