சனிப் பெயர்ச்சி பலன் 2011:
நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார்.
சனிபகவான் சிலகாலம் எவரையும் பிடிப்பது இயற்கை. அவரவர் பூர்வ புண்ணியத்துக்கேற்ப சந்தோஷம் அனுபவிப்பதுபோல சில தடைகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். முன்ஜென்ம பாவ புண்ணியங்கள் நமக்கு நாமே சேர்த்து வைத்துள்ள சொத்து. இன்னும் ஒரு படி மேலே போய், இதை நமக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் என்றும்கூட சொல்லலாம். அந்த நற்சாட்சிப் பத்திரத்தின்படி சனிபகவான் கண்டிக்கிறார்; தண்டிக்கிறார். நமக்கு விதிக்கப்பட்டவை எல்லாம் இன்னொருவர் கொடுத்ததா, என்ன? அது நமக்கு நாமே முன் ஜென்மத்தில் கொடுத்து வைத்தது. எனவே நம் வினைப்பயனுக்கு தகுந்தவண்ணமே விதிப்பயனும் அமையும் என்பதைப் புரிந்துகொண்டால், எந்தக் குழப்பமும் ஏற்படாது.
இந்த சனிப்பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது . ஏற்கெனவே, கன்னி ராசிக்கும், துலா ராசிக்கும் ஏழரைச் சனி நடந்துகொண்டிருக்கிறது. இது தவிர, மீன ராசிக்கு அஷ்டம சனியும், மேஷ ராசிக்கு கண்ட சனியும் ஆரம்பமாகப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் திருத் தலங்களுக்குச் சென்று, சனிபகவானுக்குரிய வழிபாடுகளையும் , பரிகாரங்களையும் முறையாகச் செய்தால், சுபயோகம் ஏற்படும்.
ராசி வாரியாக மேஷம், ரிஷபம்,மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய அனைத்து ராசிகளுக்கும் ராசி வாரியாக பலன்கள் விரைவில் :
அனைத்து ராசிகளுக்கும் விரிவான சனிப் பெயர்ச்சி பலன்களை இந்தப் பக்கத்திலும் சனிபகவானின் பெருமைகளையும் சனிபகவானின் பரிகார திருத் தலங்களையும், சனிபகவான் வழிபாட்டு ஸ்லோகங்கள், மந்திரங்களையும் இன்னும் வரப்போகும் பதிவுகளிலும் விரிவாகவும் விளக்கமாகவும் தர இருக்கிறோம். வாசகர்கள் படித்துப் பயனடையட்டும். வாழ்க வளமுடன்.! { இன்னும் வரும் }
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments