/* ]]> */
Jun 252012
 

தொடர்ந்து தன்னுடைய படங்கள் வெற்றி பெற்று விட்டாலே படம் எப்படி இருந்தாலும் ஓடி விடும் என்ற நினைப்பு நடிகர்களுக்கு வந்து விடும் … ஆறாவது படத்திற்கே ஆயிரம் ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீசாகியிருக்கும் சகுனியை பார்த்தால் கார்த்திக்கு அந்த நினைப்பு வந்து விட்டது போல தெரிகிறது …

காரைக்குடியில் ஊருக்கே படியளக்கும் வீடு கமல் ( எ ) கமலக்கண்ணனின்
( கார்த்தி ) வீடு … சப்வே கட்டுவதற்காக அந்த வீட்டை இடிக்க ஆணையிடுகிறது ரயில்வே நிர்வாகம் , அதை எதிர்த்து ரயில்வே மந்திரியிடம் மனு கொடுக்க சென்னை வருகிறார் கார்த்தி … மனு கொடுத்த கையோடு கார்த்தி ஆட்டோ டிரைவர் ரஜினி ஏகாம்பரத்திடம் ( சந்தானம் ) தன் அத்தை பெண் ஸ்ரீதேவியை ( ப்ரனிதா ) டாவடித்த கதையை சொல்கிறார், இட்லிக்கடை ஆச்சியை ( ராதிகா ) கவுன்சிலராக்குகிறார் , பிறகு போனால் போகிறதென்று அவரை மேயராகவும் ஆக்குகிறார் , சும்மா கிடந்த பீடி சாமியாரை ( நாசர் ) சர்வதேச லெவலுக்கு உயர்த்துகிறார் , அவ்வப்போது வீட்டை காக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று முதலமைச்சர் பூபதியிடம் ( பிரகாஷ்ராஜ் ) சவால் விடுகிறார் , எதிர்க்கட்சி தலைவர் பெருமாளை ( கோட்டா ஸ்ரீனிவாசராவ் ) தேர்தலில் ஜெயிக்க வைத்து முதல்வராக்குகிறார் …

படம் முடியும் போது ஏதோ நியாபகம் வந்தது போல ஹீரோயினும் , வீட்டை இடிப்பதற்கு எதிரான ஆர்டரும் கார்த்தியின் கைகளுக்கு வந்து சேர்கின்றன. அப்பாடா ஒரு வழியாக படம் முடிந்தது என்று எந்திரித்தால் டில்லி அரசியலை சீர்படுத்த கார்த்திக்கு அழைப்பு வருகிறது … பிரசிடன்ட் தேர்தலை போல  தலை சுற்றுகிறதா ? அதுவே சகுனியின் தூளான கதை …

என்ன பாஸ் மத்திய அமைச்சரிடம் மனுவை கொடுத்து விட்டு எதற்கு கார்த்தி தேவையில்லாமல் ஸ்டேட் பால்டிக்சுக்குள் நுழைகிறார் என்றோ , ஒரு தனியாளாக கார்த்தியால் எப்படி ஒரு மாநிலத்தின் அரசியலையே புரட்டிப் போட முடியுமென்றோ நீங்கள் கேள்வி கேட்பவராக இருந்தால் சகுனி இஸ் நாட் யுவர் கப் ஆப் டீ ... அதே சமயம் லாஜிக்கெல்லாம் பாக்காம படத்துக்கு போனோமா , ஜாலியா என்ஜாய் பண்ணோமா என்று நினைப்பவர்களுக்கும் சகுனி இஸ் நாட் பிட் பார் தி பில் ஆக இருப்பதே படத்தின் பெரிய குறை …

மாஸ் ஹீரோவிற்குரிய கரிஸ்மா கார்த்தியிடம் இருக்கிறது … ஆனால் அது மட்டும் போதுமென அவர் நினைத்து விட்டதே துரதிருஷ்டம் … படத்தில் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லை , எனவே கார்த்தி படம் நெடுக சிரிக்கிறார் , சிரிக்கிறார் , சிரித்துக் கொண்டேயிருக்கிறார் …ப்ரனிதா படத்தில் இருக்கிறார் அவ்வளவே … குட்டைப் பாவாடையுடன் ஒரு பாடலுக்கு நடனமாடுவதோடு அவருடைய பணி முடிந்து விடுகிறது … மாமா என்று அவர் கார்த்திக்கை பார்த்து குழட்டும் போது நமக்கு குமட்டுகிறது …

சந்தானம் கார்த்தியுடன் சேர்ந்து நன்றாகவே காமெடி ஆட்டோ ஓட்டுகிறார் … இருவரின் காம்பினேஷனும் மீண்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது , ஆனால் இவர்களின் கமல் – ரஜினி காம்பினேஷன் ஒரு லெவலுக்கு மேல் எரிச்சலை தருகிறது … இன்னும் எத்தனை படங்களுக்கு தான் சந்தானம் ஆபத்பாந்தவனாக இருப்பாரோ தெரியவில்லை …

ராதிகா , நாசர் , ரோஜா இவர்களுள் ராதிகா மட்டும் கவனிக்க வைக்கிறார் … கோ பாணியில் அரசியல் படம் என்று பார்த்தால் , அந்த படத்தை போலவே முதலமைச்சராக பிரகாஷ்ராஜ் , எதிர்க்கட்சி தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என காஸ்டிங்கும் அதைப் போலவே செய்திருக்கிறார்கள் , இதில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை …

மனசெல்லாம் நல்ல மெலடி , மற்றபடி இந்த படத்திற்கு இந்த இசை போதுமென்று ஜி.வி.பிரகாஷ்குமார் நினைத்து விட்டாரோ என்னவோ … சந்தானத்திடம் சொல்வதன் வாயிலாக கார்த்தி தன் பிளாஸ்பேக்கை சுவாரசியமாக சொல்வது , சந்தானத்தின் காமெடி , சீனியர் நடிகர்களின் பங்களிப்பு , தூள் கதையை தூசி தட்டி எடுத்திருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் அதை சொன்ன இயக்குனரின் தைரியம் இவைகளையெல்லாம் சகுனியின் ப்ளஸ்களாக சொல்லலாம் …

தொடர்ந்து சக்சஸ் கொடுக்கும் ஹீரோவின் கால்ஷீட் இருந்தாலே போதும் வேறொன்றும் தேவையில்லையென நினைத்து விட்ட அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் எண்ணம் , வசனத்தில் மட்டும் அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை போடுவதே சுவாரசியம் என்று சொல்லிவிட்டு எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதை , கதை மட்டும் தான் சுட்டது என்று பார்த்தால் கோ , சிவகாசி , மக்கள் ஆட்சி உட்பட பல படங்களில் பார்த்து பழகிப் போன காட்சிகள் , படம் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் மங்குணிகள் என்ற நினைப்பில் பசிக்கு ஹோட்டலில் புகுந்து ஏதோ நாலு இட்லி , வடை சாப்பிடுவது போல ஹீரோ அவ்வளவு ஈசியாக கவுன்சிலர் , மேயர் , முதல்வர் என அவ்வளவு பேரையும் உருவாக்கிக் கொண்டே போவது இவைகளெல்லாம் ரசித்திருக்க வேண்டிய சகுனியின் சூதாட்டத்தை சலிப்படைய வைக்கின்றன …

ஸ்கோர் கார்ட் : 39

 

, , , , , , , ,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>