/* ]]> */
Feb 252012
 
சகுனி கார்த்தி saguni karthi

சகுனி கார்த்தி saguni karthi

‘காட்டன் வீரன்’ நடிக்கும் மகாபாரத வில்ல கேரக்டர் படத்தில் ஹஸாரேவின் உண்ணாவிரத காட்சிகளைக் காட்ட திட்டமிட்டார்களாம். ‘நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு.. எதுக்கு இந்த பொல்லாப்ப்பு? ’ என்று சிலர் ஆலோசனை சொல்ல ‘சேப்பமா?’…. ‘வேணாமா?’ என்று விவாதம் நடந்துகிட்டிருக்கு.

நடிகர் சிம்பு ‘ லவ் ஆன் தெம்’ என்ற ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். விரைவில் இதை மெருகேற்றி ப்ராப்பர் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருஜக்கிறார். சுமார் 20 நாடுகளின் வார்த்தைகளைப் பாயன்படுத்தி பாட்டெழுதியிருக்கிறார், சிம்பு. இது ‘கொலவெறி’ பாட்டுக்கு சரியான போட்டியாக இருக்குமாம். சிம்பு-தனுஷ் மோதலிலும் ஒரு ‘கொலவெறி டா’தானா?

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் மிக குறுகிய காலத்தில் ‘யாதுமாகி’, பசங்க’, மருதவேலு’, காவலர் குடியிருப்பு’என சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது, ‘பாகன்’, ‘ஒண்டிப்புலி’ உள்பட சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் இவர், சென்னை அடையாறில் ஒரு இசைப் பள்ளியை தொடங்கியிருக்கிறார். அதைத் திறந்து வைத்தவர், பால முரளிக்ரிஷ்ணா!

மகன் ஹீரோவாக நடித்து அப்பா ப்ரொடக்ஷன் வேலைகளைக் கவனித்தால் எப்படி இருக்கும்? அப்பா ப்ரொடக்ஷனில் இறங்கினால் மகனுக்கு மிச்சம் பிடித்துக் கொடுப்பாங்க. ஆனா, ஒரு அப்பா கமிஷன் அடிச்சு அவரோட ஜோபியை ரொப்பிவிட மகன் கொந்தளித்துப்போய்விட்டாராம்.

தனபால் பத்மநாபனின் இயக்கத்தில் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்ற படம் தயாரிக்கப்படுகிறது. அதில் மில் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் படும் கஷ்டங்களும் விவரிக்கப்பட்டிருக்கிறதாம். ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இதில் நடிக்கும் நடிக-நடிகைகளுக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்  ஒரு மாதம் ட்ரைனிங்க் கொடுக்கப்பட்டதாம்.

சிறந்த படத்திற்கான தேசீய விருது பெற்ற ‘தென் மேற்கு’ படத்தின் டைரக்டரான சீனு. ராமசாமியின் அடுத்த படம் ‘ நீர்ப்பறவை’  இதில் ஹீரோவாக  நடிக்க ஒப்பூக்கொண்ட நடிகர் ,  கதையில் சில மாற்றங்களைச் சொல்ல , ஹீரோவுக்கும் டைரக்டருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாம். விமல் விலகிக்கொண்டார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>