/* ]]> */
Nov 012012
 

கதை : எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன்

இயக்கம் : அஸ்வின்

 

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை ” தரமணியில் கரப்பான்பூச்சிகள் ” . வயதானவர்கள் மற்றும் சமூகத்தால் அலட்சியப்படுத்தப் படுபவர்களுக்கான ஒரு குறியீடாக கரப்பான் பூச்சிகளை முன்வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார் எஸ். ரா . தொகுப்பு முழுக்கவுமே இப்படியான குறியீடுகளால் ஆன கதைகளால் நிரம்பினது .

பொதுவாக நாவலாகவோ சிறுகதையாகவோ ஒரு கதையைப் படித்து விட்ட வாசகனுக்கு படமாக அதைப் பார்க்கும் போது ஏமாற்றமாகத் தான் அதிகமும் இருக்கும் . ஆனால் அப்படி சொல்லிவிட முடியாதபடிக்கு கதையின் எஸென்ஸை இன்னமும் பெட்டராகக் கூட வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் அஸ்வின் .

துவக்கமே ஒரு கசப்பான புன்னகை வரவழைக்கும் வசனம் .                      “என் பேரு … ம்ம்ம் … அது உங்களுக்கு தேவையில்ல !” நச் ! கரப்பான் பூச்சி மருந்து விற்பனைக்கென்று ஒரு ட்ரெய்னிங் ! அதற்கு பயிற்சியாளர் கோட் சூட் சகிதம் !:)

நாயகனுக்கான ,பயிற்சியாளர் மற்றும் அவன் நண்பர்கள் பாத்திரத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் அந்த வயதானவர் கேரக்டருக்கும் கொஞ்சம் முனைந்திருக்கலாம் .. என்னமோ பயங்கர பரிதாபத் தோற்றத்துடன் வரும் அந்த மனிதர் , முன்னால்விஞ்ஞானி என்பதை நம்பவே முடியவில்லை . அப்பறம்… எப்பொழுதும் எங்கும் பெண்களை ஏன் ஹிட் ( கரப்பான் பூச்சி மருந்தின் தாக்கம் ) பண்ண வேண்டும் என்று புரியவேயில்லை ? இந்த மேக்கப் போடும் பெண்கள் என்று தனியான ஒரு க்ரூப்பை உண்டாக்கின பெருமை யாரை சேருமோ ? ( எல்லாரும் தான் மேக்கப் போடுரோமே பா ? க்ரீம் , ரோஸ் பௌடர்னு போட்டா தானா ?)  தலையில் சீரம் தேய்த்து ,  ஃபேஸ் பௌடர் அப்பிக்கொள்வதெல்லாம் ஆண்களும் செய்கிறார்கள் தானே ..  நிற்க !

விற்பனைப்பிரதிநிதிகள் என்று ஒரு ஜாதி , அவர்களின் செண்டிமென்ட்ஸ் , பிள்ளைகள்     யு. எஸ்ஸில் இருக்க , இங்கு தனியாக வாழும் விஞ்ஞானி -  ஒரு வேளை தான் இறந்து விட்டால் தன் இறுதிச்சடங்குக்கென வைத்திருக்கும் பணத்தைத் தன்னிடம் கொடுத்ததைச் சொல்லி வருந்தி , தண்ணி அடித்துவிட்டு ஹீரோ உளறுவது என்று கதையை அழுத்தமாகச் சொல்லி செல்லும் சீன்கள் – கலக்கி இருக்கிறார் இயக்குநர் ( மது அருந்தியவாறு நண்பர்கள் பேசும் சீன் திருஷ்டிப் பரிகாரம் போல படு செயற்கை ) .

நகரத்தின் தினப்படி வாழ்க்கையில் , கொஞ்ச நஞ்சம் இருந்த தன் மனிதாபிமானத்தையும் நியாய புத்தியையும் தொலைத்து விடுவது ஒரு இளைஞனுக்கு எத்தனை சாதாரணமாக வாழ்வின் போக்கில்  நடக்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறது படம் . காட்சி அமைப்பும் வசனங்களும் பிரமாதம் . சிறுகதையில் எஸ். ரா ரொம்பவும் க்ளூமியாகவும் சீரியஸாகவும் சொல்லியிருக்கும் விஷயத்தை காமெடி கலந்து படத்தில் சொல்லி இருக்கும் அஸ்வினைப் பாராட்டியே ஆக வேண்டும் .

வாழ்வெனும் நாடகத்தின் அபத்தமான சீன்களை பிய்த்தெடுத்து நமக்குப் புரட்டிப் பார்க்கத் தந்த எஸ். ராவுக்கும் அவர் சொல்ல முனைந்ததை காட்சிப்படுத்தின அஸ்வினுக்கும் வாழ்த்துக்கள் ! குறும்படங்கள் மீதான ஆர்வத்தை இம்மாதிரியான முயற்சிகள் அதிகப்படுத்தத்தான் செய்கின்றன …

 

.. ஷஹி ..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

tags

s. ra , s. ramakrisnan , tharamaniyil karappan poochigal , short films, nalaiya iyakunar , ashwin , madonne ashwin , cockroach, hit , pesticides , insecticides

எஸ் . ரா , எஸ் . ராமகிருஷ்ணன் , தடமணியில் கரப்பான் பூச்சிகள் , குறும்படம் , குறும்படக் கார்னர் , கரப்பான் பூச்சி , பூச்சி மருந்து , அஸ்வின் , நாளைய இயக்குநர்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>