/* ]]> */
Oct 132011
 

ரோஜாப்பூ இதழ் பர்பி

 

ROSE BuRFI

ROSE BuRFI

தேவையான பொருட்கள்:

முந்திரி பருப்பு- அரை கப்; இனிப்பு இல்லாத கோவா ( துருவியது) – அரை கப்; இளஞ்சிவப்பு ரோஜாப்பூ- 4;  ரோஜா எஸென்ஸ் – சில துளிகள்; அலங்கரிக்க ரோஜா இதழ்கள்- சிறிது; நெய் -2 டேபிள் ஸ்பூன்; தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:

முந்திரியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து , விழுதாக அரைத்துக்கொள்ளவும். ரோஜாப்பூக்களை இதழ்களாக உதிர்த்து , 1 டீ ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். ( பூ இதழ்கள் தெரிய வேண்டும். அதிகம் பொடிக்கக்கூடாது.) கடாயில் சர்க்கரைப் போட்டு , தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து , கம்பிப் பதம் பாகு வரும்போது , அரைத்த முந்திரி விழுது , ரோஜா கலவை , துருவிய கோவா. நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறி , சுருண்டு வந்ததும், எஸென்ஸ் சேர்த்து , நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிட்டு , விருப்பமான வடிவில் வெட்டவும்.

Tags : tamil recipe on how to cook rose petals barfi , a tasty south indian dish ,  சமையல் குறிப்பு, சமையல் குறிப்புகள், முந்திரி, ரோஜா கலவை,துருவிய கோவா,நெய்,பூ இதழ்கள்,ரோஜாப்பூ இதழ் பர்பி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>