/* ]]> */
Oct 142011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: ராஜராஜ சோழன் நான்

படம்: ரெட்டை வால் குருவி(1987)

பாடியவர்: யேசுதாஸ்

பாடலாசிரியர்: வாலி

எண்பதுகளில் அனைவரையும் கிறங்க வைத்துக்கொண்டிருந்த பாடல்களில் ஒன்று..படமும் அட்டகாசமானது தான். சூப்பர் காமெடி..அருமையான நடிகர்கள் மோகன், ராதிகா, அர்ச்சனா என்று.பாடல்களுமே எல்லாம் ஹிட்..

இந்தப்பாட்டின் மீது தனிப்பட்ட முறையில் ஒரு பிரியம்..வகுப்பில் ஃப்ரீ பீரியட் கிடைத்தால் பாடச்சொல்லும் ஒரு க்ரூப், ஒன்ஸ் மோர் கேட்கும் பாடல் இது. வரிகளும், பாடும் போது நண்பன் பிரபு ,டெஸ்க்கில் கைவிரல்களினாலேயே போடும் தாளமும் இப்போதும் மனதில் உறைந்திருக்கும் பால்யத்தின் பனி அடுக்கு.

ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே..

ராஜராஜ..

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே

கை நீளும் போது பாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்

அங்கங்கு ஆசைத்தீயில் நான் வேகிறேன்

உன் ராக மோகனம் என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜராஜ..

கள்ளூரப் பார்க்கும் பார்வை உள்ளூரப் பாயுமே

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே

பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே

என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே

தேனோடை ஓரமே நீராடும் நேரமே

புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி

ராஜராஜ..

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>