/* ]]> */
Oct 092011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: என்ன சொல்லி நான் எழுத..

படம்: ராணித்தேனீ

பாடியது: சுசீலா

மிக இனிமையாக, காதலாகிக் கசிந்துருகும் பெண்ணின் உணர்வுகளைச் சொல்லும் பாடலாகத் துவங்குவது..ஒரு கவ்வாலி ஸ்டைல் பாடலாக உருமாறுவது தான் இந்தப் பாடலின் விசேஷம் என்று நினைக்கிறேன்.

கதாநாயகி மஹாலக்ஷ்மி..ஏவிஎம்.ராஜன், புஷ்பலதா தம்பதியின் மகள்…அழகாக, குடும்பப்பாங்காக இருக்கிறார் .

இளையராஜாவின் இசையில் மிகக்குறிப்பிடத்தக்க பாடல்களில் ஒன்று…(அபி உனக்கு மிகப் பிடித்தமான பாடல்களில் ஒன்று இல்லையா?)..என்ன சொல்லி…

 

என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர (2)

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும் வெட்கம் விடுமோ ஹோய்

என்ன சொல்லி…

அறியாதவள் நான் தெரியாதவள் முன் அனுபவம் ஏதும் புரியாதவள்

எத்தனையோ தோணுது மனசிலே அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்

என்ன சொல்ல எப்படி எழுத ம்ம்ம்…மஹா ராஜ ராஜஸ்ரீ..

காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன் (2)

பெண்ணான பாவம் அச்சம் மடம் நாணம்கொண்டேனே நானும்

கண்ணா வீண் கோபம்

கொள்ளாதே சொல்லாலே கொல்லாதே

கண்ணான கண்ணா கண்ணா ..

என்ன சொல்லி ..

இதயம் துடிக்குது என் செவிக்கே கேட்குதம்மா கேட்குதம்மா

வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா குளறுதம்மா

என்ன செய்ய என்ன செய்ய ம்..ம்..

காத்தாடி போலானேன் என் கண்ணுக்குள்ளே நோயானேன் (2)

பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்

கல்யாண காலம் வந்த பின்பு மாறும்

நெஞ்சோடு நெஞ்சாகக் கொஞ்சாமல் போவேனோ

கண்ணான கண்ணா கண்ணா…

என்ன சொல்லி..

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>