/* ]]> */
Nov 022011
 

rajini ajith

1. உச்ச ஹீரோ நடிக்கத் தயாராயிட்டாலும், அடுத்து அறிவிச்ச படத்துல நடிக்கிறது கேள்விக்குறியா இருக்கு. எனவே அனிமேஷன் படத்தை ரிலீஸ் பன்ணிட்டு தனக்கு இன்னும் இலகுவான கதை கேட்டிருக்கார் ஹீரோன்னு ஒரு தகவல். ஆனால், அறிவிச்ச படத்தை ட்ராப் பன்ணாம, இன்னொரு பெரிய ஹீரோவை வச்சு, ஷூட் பண்ணும் திட்டமும் இருக்கறதா பேச்சு. …! அந்த  ஹீரோ ‘ தல’ யசைப்பாரா, தெரியலயாம்.

kushbu jackpot

2. முன்பு ஜெயா டி.வி.யில் குஷ்பு  தொகுத்து வழங்கிய ‘ஜாக்பாட் ‘ நிகழ்ச்சியை, நதியாவை அடுத்து இப்போது சிம்ரன் தொகுத்து வழங்குகிறார். ” குஷ்பு நிகழ்ச்சியை நடத்திய போது அவர் அணிந்திருந்த சேலை,விதவிதமான ஜாக்கெட் என கலக்கியதைப் பார்த்தேன்.  அவர் அழகில் மயங்கினேன். எந்தப் பெண்ணுக்கும் குஷ்புபோல ஆடை அணியவேண்டும் என்ற ஆசை வரும். எனக்கு அந்த வாய்ப்பு தானாகவே தேடி வந்திருக்கிறது. இனி என்னை விதவிதமான உடைகளில் நீங்கள் பார்க்கலாம். ஆனால் குஷ்புபோல எனக்கு அரசியல் ஆசை கிடையாது. ” என்கிறார், சிம்ரன்.

simran

3. சினிமாவில் அநியாயத்துக்கு அப்பாவியாக, வெள்ளந்தியாக நடிக்கும், சரண்யா பொன்வண்ணன், நிஜத்தில் ஒரு குடும்ப பொஸெஸ்ஸிவ்- பெண்மணி. தன் மகள்களுக்கான கடமையைச் செய்யத் தவறியதில்லையாம். ஷூட்டிங் டைம்  எப்பவும் 10 டு 3 தானாம். 3 மணிக்குப் பிறகு தன் குழந்தைகளுக்கு மட்டும்தான் டைமாம். ஷூட்டிங்கிலிருந்து எவ்வளவு லேட்டா வீட்டுக்கு வந்தாலும்கூட இவர்தான் சமைப்பாராம். வேலைக்கெல்லாம் வீட்டில் ஆள் வச்சுக்கலியாம்.  பீட்சாவோ ,ஃபலூடாவோ போன்ற ஹோட்டல் ஐட்டங்கள் பண்ணத் தெரியாட்டியும் கத்துக்கிட்டு வந்தாவது பண்ணுவாராம். தியேட்டருக்குப் போனா, கணவர் பக்கத்துலதான் கட்டாயம் உட்காருவாராம். எந்த இடத்துலயும் யாருக்கு முன்னாடியும் கணவரை விட்டுத் தரமாட்டாராம்.

4. ஏற்கெனவே ‘பச்சக் குதிர’ படத்திலும் ஒரு மலையாளப் படத்திலும் சொந்தக் குரலில் பாடியுள்ள நடிகர் பார்த்திபன், இப்போது ‘ என் பெயர் குமார சாமி’ என்ற படத்தில் ‘ வனப்புடை மகளிர் சொல்லும் ‘ என்ற பாடலை தன் சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

5. தயாரிப்புச் செலவுகள் ஒருபக்கம் எகிற , ஸ்டார்கள், ஸ்டார் டைரக்டர்களோட சம்பளம் இன்னும் எகிறிக்கிட்டிருக்கு ‘அறிவு’ டைரக்டருக்கும், ,அவர்கிட்ட நடிக்கப்போகும், ‘ஆயுத’ ஹீரோவுக்கும், தனித்தனியே பேமெண்ட் 14 ரூபாயாம் . ‘நண்ப’ டைரக்டர் 15-ம், ‘கடவுள் ‘ டைரக்டர்  7-ம் வாங்க  ‘தெய்வ’ டைரக்டர், அடுத்தடுத்த படங்களுக்கு 2.25; 3- வாங்கப் போறாராம். எல்லாம் ‘கோ’ வுலங்கோ.

tags : rana, rajini, ajith, thala, rajinikanth, rajini+rana, kushbu, nadiya, simran, jackpot kushbu, murugadoss, a.r.murugadoss, shankar, saranya,சரண்யா, ரஜினி, அஜித், நதியா,

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>