இஸ்லாம் என்றால் சாந்தி , சமாதானம் என்பது பொருளாகும் . இம்மையிலும் , மறுமையிலும் சாந்தியாக வாழ வழி வகுக்கும் மார்க்கமே இஸ்லாம் . எனவே அல்லாஹ்வின் ஏவலை எடுத்து நடப்பதும் , அவனுடைய விலக்கல்களை விட்டு தவிர்ந்து கொள்வதும் நமக்குக் கட்டாயமாகிறது .
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் – 5
1. வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹூ தாஆலாவைத் தவிர வேறு யாருமில்லை . முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவனுடைய திருத்தூதர் என்று சாட்சி கூறுதல் .
2. தினமும் ஐந்து நேரம் விடாமல் தொழுகையை நிறைவேற்றுதல் .
3. செல்வம் படைத்தவர்கள் வருடம் ஒரு முறை ஏழைகளுக்கு ஏழை வரி செலுத்துதல் , அதாவ்து தம்மிடமுள்ள பொருளிலிருந்து நூற்றுக்கு இரண்டரை ரூபாய் வீதம் வசதியற்றவர்களுக்கு செலுத்த வேண்டும் .
4. ரமளான் நோன்பு வைத்தல் .
5.பொருள் வசதியும் , பிரயாண வசதியும் , உடல் வலிமையும் உள்ளவர்கள் , புனித மக்காவிற்குச் சென்று ஹஜ்ஜூ என்ற வணக்கம் புரிதல் .
ஈதுல் fபித்ர்
ரமலான் மாதம் பிறை கண்டதிலிருந்து அம்மாதம் முழுவதும் 30 நாட்கள் அல்லது 29 நாட்கள் நோன்பு நோற்பது வயது வந்த முஸ்லிம் ஆண்கள் , பெண்கள் மீது கட்டாயக் கடமை . மெய்வெள்ளை வெளுப்பதிலிருந்து மக்ரிப் வரையிலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருப்பதுடன் ஆண் – பெண் உறவு கொள்வதும் கூடாது . ஈதுல் fபித்ர் – ரமளான் நோன்பு முடிந்த மறுநாள் , ஈதுல் fபித்ர் என்ற பெருநாள் .
ஈதுப் பெருநாள் தக்பீர்
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹூ வல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் வலில்லாஹில் ஹம்து
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இன்னும் அல்லாஹ் மிகப் பெரியவன் . சகல புகழும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் .
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments







Please comment with your real name using good manners.