ரஜினி பிறந்தநாள் வந்தாலும் வந்தது நம் ரஜினி ரசிக (பக்த)னின்அலப்பரை தாங்க முடியல . ஃபேஸ்புக்கைத் திறந்தால் ரஜினி , மூன்றாம்கோணத்தில் ரஜினி பிறந்த நாள் பஞ்ச்டயலாக் போட்டி , தொலைக்காட்ச்சியிலும் எந்த சானலைத்திறந்தாலும் ரஜினி மகாத்மியம் பேசும் ரசிகர்கள், காம்பயர்கள் , சக நடிகர்கள் . இப்படி ஒரு ஹீரோ வர்ஷிப் கலாச்சாரம் உலகின் வேறெந்த மூலையிலாவது காணப்படுமா தெரியவில்லை . ஒரு எழுத்தாளனுக்கு , ஒரு சிந்தனாவாதிக்கு , ஒரு அறிவு ஜீவிக்கு ,இவருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில், மரியாதையில் நூறில் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் நாடு உருப்படுமே !
லேட்டஸ்ட்டாக முகநூலில் ஒரு புகைப்படம் ஆளாளுக்கு ஷேர் செய்து உருகிக் கரைகிறார்கள் . ” thalaivar the epitome of simplicity ” அதாவது அவர் ஒரு சாதாரண கம்பெனி செருப்பு அணிந்திருக்கிறாராம் ! எளிமையின் மொத்த உருவமே தலைவர் தானாம் ! வெட்கமாக இருக்கிறது . அவர் எந்த செருப்பு அணிந்தால் என்ன ? செருப்பே அணியாமல் இருந்தால் நமக்கு என்ன ?
விஜய் டிவியில் அவர் மகள் ஐஷ்வர்யாவை, காம்பயரர் ரம்யா ரஜினியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்றதற்கு—- –அம்மணிக்கு தமிழில் சொல்லத் தெரியாதாம். ஆங்கிலத்தில் சொன்னதை ரம்யா மொழிபெயர்த்தார் .அதாவது “வீட்டில் ஒரு வாழும் தெய்வம் ” என்றார் . அவரவருக்கு அவரவர் அப்பா தெய்வம் தான் .இதை ஒரு டிவி சானலில் வந்து சொல்ல வேண்டிய அவசியம் பற்றி வெகு நேரம் யோசித்து மண்டை புண்ணானது தான் மிச்சம் .
எந்த ஒரு சமூகப்பிரச்சினைக்காகவோ மக்கள் இயக்கத்துக்காகவோ அவர் இது வரையில் உரத்து குரல் கொடுத்திருக்கிறாரா ? எளிமையாக செருப்பு அணிவது சரி ,அவருக்கு வந்த அதே வியாதி ஒரு சாதாரணனுக்கு வந்திருந்தால் அவர் இந்நேரம் உயிரோடு இருக்க முடியுமா ? ராஜ வைத்தியம் செய்து கொண்டவர் ரப்பர் செருப்பு அணிவது பற்றியெல்லாம் சிலாகித்துத் தொலைவதை எப்போது நிறுத்துவாய் தமிழ் ரசிகா ?
சர்வசாதாரணமாக பெண்களைக் கை நீட்டி அடிப்பது போலவும் , ஏதோ திமிர் பிடித்த , பணக்காரக் கதாநாயகியரை அடக்கி , மிரட்டி , பணிய வைத்து பிறகு கட்டிப்பிடித்தோ , கன்னத்தில் அறைந்தோ காதல் வயப்படுத்துவதை ஒரு ட்ரெண்டாகவே செய்து வந்தவர் இல்லையா ரஜினி ? இது தான் ஒரு தலைவனுக்கு அழகாமா ? அடேங்கப்பா ! தமிழ் ரசிகா என்னே உன் ரஜினி பக்தி ?
முல்லைப்பெரியார் பிரச்சினையில் நாடே பற்றிக்கொண்டு எரிகிறது .கல்கத்தாவில் மருத்துவமனை பற்றி எரிந்து ,கொடூரமாய் ,காப்பாற்றப்பட வேண்டி நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் அநியாயமாய் எரிந்து போனார்கள். நம் ரஜினி ரசிகன் அவர் செருப்பின் எளிமையை எண்ணி மெய்சிலிர்த்துக் கொண்டு இருக்கிறான் !
வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவித்து முடிந்தவர் அவர் ! இப்போதைய வாழ்நாட்களும் கூட இறைவனின் கொடை தானே அவருக்கு ! விடுங்கப்பா …போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள் !
எரிச்சலுடன்
..ஷஹி..
tags
rajini, rajini birthday , aishvarya, rajni fan, rajini fan , ramya, rajinikanth
ரஜினி, ரஜினி பிறந்தநாள் , ரஜினி ரசிகன், ரஜினிகாந்த், ரம்யா , ஐஷ்வர்யா
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments