/* ]]> */
Oct 202012
 
Is-Basha-2-Rajini’s-nex-010910

பத்திரிக்கையாளரை உதைப்பேன் -

ரஜினி பரபரப்பு பேட்டி

 

Is-Basha-2-Rajini’s-nex-010910

Is-Basha-2-Rajini’s-nex-010910

 ரஜினி பேட்டி என்றாலே பரபரப்புதான்…

“பத்திரிக்கையாளரை உதைப்பேன்” என ரஜினி அளித்த பேட்டி பரபரப்பு மூட்டுமா இல்லையா? அப்படி ஒரு பரபரப்பு பேட்டியை விகடன் பொக்கிஷத்தில் பார்க்க நேரிட்டது. நீங்களும் படித்துப் பாருங்கள்… ரஜினியின் “தில்” புரியும்….

மாலை ஏழு மணி. போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் புது வீட்டுக்குப் போயிருந்தபோது, ரஜினி மாடியில் குளித்துக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள்.

சற்று நேரத்தில் இன்ட்டிமேட்டின் நறுமணம் சுகமாகக் காற்றில் பரவி வந்தது. ரஜினி இறங்கி வந்தார்.

”வாங்க, போகலாம்!” என்றபடியே விறுவிறுவென்று காரில் ஏறினார். வெள்ளை நிற ஃபியட் TMU 5004. சினிமாவில் போவது மாதிரி ஒரே மூச்சில் ரிவர்ஸில் போனார். அலட்சியமாக ஸ்டியரிங்கை உடைத்தார். மௌபரேஸ் ரோடு சிக்னலின் சிவப்பு விளக்கு, அவரை பிரேக் போட்டு நிற்க வைத்தது!

”ஐ வாஸ் எ கண்டக்டர்னு நான் சொல்லிக்கிறதே இல்லை. ஐயாம் எ கண்டக்டர்னுதான் இன்னிக்கும் நினைச் சுக்கறேன்…” என்றார் ரஜினி. சிக்னலில் பச்சை விளக்கு.

”இப்போ எனக்குச் சொத்து, சுகம்,வீடு, வாசல்னு எல்லாம் வந்து சேர்ந்திருக்கு. இந்த மயக்கத்திலே நான் பாஸ்ட்டை மறுந்துட நினைக்கலே. மார்க்கெட் இருக் கிற வரைக்கும்தான் மரியா தைனு எனக்குத் தெரியும். எந்த நேரத்திலேயும் பழைய நிலைமைக்கே போய்விடுவோம்கறதும் எனக்குப்புரியாமலில்லை…”

மெரினா காந்திசிலைக்கு அருகில் இடது பக்கம் திரும்பி, பீச் ரோடில் விரைகிறது 5004. ‘கர்ஜனை’ படத்துக்காகப்பொருட் காட்சி சாலையில் ரஜினிக்கு அன்று படப் பிடிப்பு.

இறங்கி ‘ரஜினி ஸ்டை’ லில் உள்ளே விரைந்தார்!

”யூ நோ ஸம்திங்… ஸ்மோக்கிங், டிரிங்க்கிங் இரண்டையும் நான் இப்போ ரொம்பக்
குறைச்சுட்டேன்!” என்றார் ரஜினி. ”என்கிட்டேஒரு ஹாபிட்… யாராவது ஒரு காரி யத்தைச் செய்யாதேனு சொன்னா, அதையே அதிகமா பண்ணுவேன். செய்துதான் ஆகணும்னு கம்ப்பெல் பண்ணா, நிச்சயம் அதைச் செய்ய மாட் டேன்..!”

சமீப நாட்களில் பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதப்பட்ட தன் திருமணத்தைப் பற்றிப்பேசத் தொடங்கினார் ரஜினி.

”ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு சௌகார்ஜானகி வீட் டிலே ‘தில்லுமுல்லு’ ஷ¨ட்டிங்! மாடியிலே இருந்த என்கிட்டே எத்திராஜ் காலேஜ்லேருந்து பேட்டிக்காக ஸ்டூடன்ட்ஸ் வந்தி ருப்பதா சொன்னாங்க. ஷாட் முடிஞ்சதும் கீழே போனேன். ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருந்தா! ‘ஐயாம் லதா’ன்னு தன்னை அறிமுகப்படுத்திக் கிட்டா…” என்ற ரஜினி, தனக்கு லதாவுடன் நட்பு ஏற்பட்டதைப் பற்றி, அவரோடு பழகிய நாட் களைப் பற்றி, அவரையே மனைவி யாக்கிக்கொள்ள முடிவு செய்த தைப் பற்றிக் கிடுகிடுவென்று சொன்னார்.

”’பொல்லாதவன்’ படப் பிடிப் புக்கு மைசூர் போயிருந்தப்போ, ஐ மெட் மை பிரதர்! அவர்கிட்டே லதாவைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு ஷாக்! ‘அந்தப் பொண்ணு நம்ப காஸ்ட் இல் லேன்னு சொல்றே. மராத்தி யிலே உனக்குக் கிடைக்காத பொண்ணா மதராஸ்லே கிடைச் சுடப் போவுது’னு சொன்னார். ‘நான் சுகமா இருக்கணும்னு நீங்க ஆசைப்பட்டா, சந்தோஷமா இருக்கணும்னு விரும்பினா லதாவை மனைவியாக்கிக்க எனக்கு அனுமதி கொடுங்க’னுசொல்லிட்டு வந்துட்டேன்.

என் பிரதர் மதராஸ் வந்தார். லதாவைப் பார்த்தார். ஹி ஸெட் ஓ.கே!” என்ற ரஜினி, பழைய சந்தோஷம் புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியில், ஒரு 555-ப் பற்ற வைத்துக்கொண்டார்.

”கல்யாணம்னா உடனே டௌரி, சாப்பாட்டுச் செலவு, தாம்தூம் கலாட்டா. திஸ் ஐ டோன்ட் லைக்! பெண்களைப் பெத்துக்கிட்ட ஒரே காரணத்துக்காக எத்தனை தந்தைங்க ரூயின் ஆயிட்டாங்கன்னு எனக்குத்தெரி யும். நல்ல வசதியோடு இருக்கிற என்னோட கல்யாணம் எளி மையா நடந்ததைக் கேள்விப்பட்டு, ஒரு ரெண்டு பேராவது அவங்க வீட்டுக் கல்யாணத்திலே சிக்க னத்தைக் கடைப்பிடிக்கமாட் டாங்களா என்கிற ஆசைதான் எனக்கு.

நான் என்னமோ எல்லாத்தையும் மறைச்சுத் திருட்டுத்தனமா தாலி கட் டிட்டேன்னு சில பேர் நினைக்கிறாங்க. இட் இஸ் நாட் ஸோ! நடிக்க வந்த பின் நாங்க பப்ளிக் பிராப்பர்ட்டி தான்! பட்… எங்களுக்கு பிரைவஸியே கிடை யாதா? எங்களுக்குன்னு சில பாலிஸிங்க இருக் கக் கூடாதா? கோயிலுக் குப் போய் கடவுள் சாட்சியா தாலி கட்டணும்னு நான் விரும் பினது தப்பா?” – கொஞ்சம் சீரியஸாகவே பேசினார் ரஜினி.

”அன்னிக்குப் பத்திரிகை நண்பர்களை வீட்டுக்கு வர வழைச்சு, இதையேதான் சொன் னேன். நானும் லதாவும் மாலை போட்டுக்கிட்டு முன்கூட்டியே எடுத்து வெச்சிருந்த போட் டோவை அவங்ககிட்ட கொடுத்து, ‘நாளைக்குத் திருப்பதி யிலே என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும், நீங்க இந்த போட்டோவைப் போடுங்க’ன்னு கேட்டுக்கிட்டேன்” என்று சொன்னபோது, ரஜினி கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது மாதிரி தெரிந்தது.

”திருப்பதி கோயில்லே மாலை மாற்றி, தாலி கட்ட நான் ஸ்பெ ஷல் பர்மிஷன் வாங்கி வெச்சிருந் தேன். அங்கே பத்திரிகைக்காரர் களும் ரசிகர்களுமா கூட்டம் சேர்ந்துட்டா, என் பெயர் கெட்டு விடுமோன்னுஅஞ்சினேன். இத்தனை ஏன்..? சினிமா ஃபீல்டுலே ஒருத்தரைக்கூட நான் இன்வைட் பண்ணலையே..! கூட்டம் வேண்டாங்கறதுக்காக இரண்டு பேரைக் கூப்பிட்டுநாலு பேரை விட்டுட்டா நல்லா இருக் காதே! இதையெல்லாம் கால் குலேட் பண்ணித்தான் பத்திரிகை நண்பர்களிடம் பேசறப்ப, ‘திருப்ப திக்கு கேமராவோட வந்து போட் டோவெல்லாம் எடுக்காதீங் க’ன்னு ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டேன்.

‘வந்தா?’ன்னு ஒரு பிரஸ் நண்பர் கேட்டார். ‘உதைப்பேன்’னு சொன்னேன். உடனே இன்னொருத்தர் சொன்னார்… ‘அந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் யூஸ் பண் ணாதீங்க. அதை நாங்க பப்ளிஷ் செய் துட்டா, பின்னாலே அசிங்கமா போயி டும்’னு. அந்த மாதிரி நேருக்கு நேர் தவ றைச் சுட்டிக் காட்டி னப்போ, ஐ வாஸ் வெரி ஹாப்பி! உடனே ‘ஸாரி’ சொன்னேன்.கூடவே, ‘இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. கேமராவோட யாரையாவது பார்த்துட்டா, உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி தோணாது’ன்னும் சொன்னேன். பிகாஸ், ஆண்டவ னுக்கும் மனச்சாட்சிக்கும் தவிர, வேறு யாருக்குமே நான் பயப்படறதில்லே!”

rajinikanth marriage photos latha rajinikanth 3

rajinikanth marriage photos latha rajinikanth 3

ரஜினியின் குடும்பத்திலிருந்து சில பேரும், லதா வீட்டினர் சிலரும் சென்ற மாதம் 26-ம் தேதி திருப்பதியில் இருந்திருக்கிறார்கள். விடியற்காலை 3-30 மணிக்குக் கோயிலுக்குப் போயிருக்கிறார்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு 4-25-க்கு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். 4-30-க்கு லதாவின் கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்திருக்கிறது. (ஆறு மணிக்கு எமகண்டம் வந்து விடும் என்பதாலும், அதற்குப் பிறகு ஒன்பது மணிக்குத்தான் முகூர்த்த நேரம் என்பதாலும் விடியற்காலை நேரத்தைத் தேர்ந் தெடுத்திருக்கிறார்.) உடனே கிளம்பித் திருச்சானூரில் தரிச னத்தை முடித்துக்கொண்டு, காலை 9-30 மணிக்கெல்லாம் சென்னை திரும்பிவிட்டார்கள். பத்து மணிக்கெல்லாம் ஏவி.எம்- மில் ‘நெற்றிக்கண்’ செட்டுக்குப் போய்விட்டாராம் ரஜினி!

ரஜினியைப் பற்றி லதாவின் கருத்து… He is a wonderful man!

- நன்றி விகடன் பொக்கிஷம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>