/* ]]> */
Jul 052011
 

தி.மு.க.வின் தோல்விக்கு ரஜினி

காரணமா?  என்ன சொல்கிறார், திருமா?

rajini-jayalalitha - ரஜினி ஜெயலலிதா

rajini-jayalalitha - ரஜினி ஜெயலலிதா

 

“தி.மு.க.வின் தோல்விக்கு அவர்களது குடும்ப அரசியலும் வாரிசுகளின் ஆதிக்கமும் முக்கிய காரணம் என்று கூற முடியாது. தி.மு.க.வில் குடும்ப அரசியல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டர்கள். ஆனாலும் இந்தத் தேர்தல் தோல்விக்கு குடும்பஆதிக்கமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. அதைவிட முக்கியமான காரணம் ஊடகங்கள்தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கு முன்னதாகவே தி.மு.க.வுக்கு  எதிரான பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில்  தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான் கடுமை காட்டினார்கள். வரலாற்றில் எந்த மாநிலத்திலும், எந்தத் தேர்தல் ஆணையம் இப்படி நடந்துகொண்டதில்லை. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில்தான் அதிகம் என்று தேர்தல் ஆணையம் சொல்வதையும் ஏற்பதற்கில்லை. புதுச்சேரியில், காலங்காலமாக, எல்லாத் தேர்தல்களிலும், எல்லா வேட்பாளர்களுக்குமோட்டுக்குப் பணம், மது, கொடுப்பது வெளிப்படையாக நடக்கிறது. அங்கே இந்தக் கெடுபிடிகள் நடைபெறவில்லை. இந்தத் தேர்தலிலும் விளம்பரம் எழுதுவதிலோ, பிரச்சாரம் செய்வதிலோ அங்கே எந்தக் கடுமையும் காட்டப்படவில்லை.
தமிழகத்தில் தி.மு.க.தான் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிற, பெரியாரிசம் பேசுகிற, கொள்கைரீதியாக ஈழத்தை ஆதரிக்கிற கட்சி. இந்தியாவிலேயே மாநில உரிமைகளைப் பேசுகிற, மாநில சுய ஆட்சிபற்றிப் பேசுகிற ஒரெ கட்சி. இதெல்லாம் பிடிக்காதவர்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடது என்று நீண்ட காலமாகவே ஊடகத் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்கள். ஊடகங்கள் மூலமாக, தி.மு.க.வை மக்கள் விரோதக் கட்சி, ஊழல் கட்சி என அம்பலப்படுத்தினார்கள். தி.மு.க.வினர் ஊழலே செய்யாதவர்கள் என நான் சொல்லவில்லை. ஆனால், இதற்கு முன்னரும் எத்தனையோ பெரிய ஊழல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், தி.மு.க.வை எதிர்ப்பதற்கு மட்டும் பெரிய தத்துவார்த்தப் பின்னணி இருக்கிறது.

இதையெல்லாம் மீறி 2 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில், 25000, 30000 வாக்குகள் சினிமா ரசிகர்களின் வாக்குகள்தான். தி.மு.க. கூட்டணி தோற்றுப்போனதற்கு, ரஜினிகாந்தும் ஒரு காரணம். ரஜினிகாந்த் அ.தி.மு.க.விற்கு வாக்களித்ததாக ஊடகங்களில் செய்திகள்வெளியானதும்,  அ..தி,மு,.க. ஆதரவு வாக்குகள் அதிகரித்துவிட்டது. ” என்று நிதானமாகப் பேட்டியளிக்கிறார். தொல். திருமாவளவன்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>