/* ]]> */
Dec 122011
 

டாப் டென் ரஜினி பன்ச் டயலாக் ஸ் – ரஜினி பன்ச் டயலாக் போட்டி முடிவுகள்

ரஜினி பன்ச் டயலாக்

அப்பப்பா, ரஜினி பிறந்த நாள் போட்டி என சொன்னதுதான் தாமதம். மெயிலிலும் பின்னூட்டம் வழியாகவும் பின்னியெடுத்துவிட்டார்கள் நம் வாசகர்கள்.

வந்திருந்த பல பன்ச் களில் நச்சென்று பத்து பன்ச் களை வரிசைப்படுத்தியிருக்கிறோம் !

இரண்டு முதல் பரிசு பன்ச்களாதலால் , இருவருக்கும் தலா ரூபாய் 300 அளித்துவிட்டு இரண்டாம் பரிசு பன்ச் டயலாக்கிற்கு ரூபாய்.150 வழங்குகின்றோம்!

பத்தாவது இடம் :

அம்மாவ பாத்து அழுறதுக்கு
நான் கொழந்த இல்லடா
கோ . கோ .. கோச்சடையான் … !

- அனந்து

ஒன்பதாவது இடம் :

கண்ணா ! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் !
கோடானுகோடி தம்பி உடையான் இந்த கோச்சடையான் !

- பட்டுக்கோட்டை குமார்

எட்டாவது இடம் :

பொண்ணு அடக்கமா இருக்கணும்
நாட்டையே அடக்கம் பண்றவளா இருக்கக் கூடாது!
ஆம்பள குடும்ப பொறுப்போட இருக்கணும் – ஆனா
நாடடையே குடும்பத்துக்காக சுருட்டக் கூடாது!

- மணிமாறன்

ஏழாவது இடம் :

கோச்சடையான் கோட்டையில அன்பு தான் சரி !
கண்ணா, உனக்கு எதுக்க்குப்பா இந்தக் கொலைவெறி?
வொய்மா ? வொய் திஸ் கொலவெறி?

- சிவகாசி ரவி பிரணவ்

ஆறாவது இடம் :

ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எண்ணத் தெரியாத குழந்தைக்கும் தெரியும் எம் பேரு !

- ஜி. ஷண்முகவேல்

ஐந்தாவது இடம் :

தமிழ் மக்கள் நெனச்சா சென்னை கோட்டைக்கும் அனுப்புவாங்க !
திஹார் கோட்டைக்கும் அனுப்புவாங்க ! நீ எங்க போற கண்ணா ?

- ஆர்.கணேஷ்

நாலாவது இடம் :

கணபதில எனக்கு புடிச்சது வாதாபி !
கண்ணா நீ எனக்கு ஜுஜுபி !

- மூன்றாவது இடம் :

கோட்டயப் புடிக்க ஆசையில்ல !
ஆனா கோட்ட விடுற ஆளும் நான் இல்ல!

- ஆர்.கணேஷ்

இரண்டாவது இடம் : ரூபாய் 150 பரிசு பெறும் பன்ச்

அன்பா பாத்தா நான் பூக்கடை …
கோவமா பாத்தா நான் கோ .. கோ .. கோச்சடை …!

- அனந்து

முதல் இடம் : தலா ரூபாய் 300 பரிசு பெறும் பன்ச்கள்

இரண்டு முதலிட பன்ச் டயலாக்குகள்

கண்ணா , அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை மாறி மாறி தூக்குறே கூஜா ! ஆனா இங்க நாப்பது வருஷமா நான் தான் மக்கள் மனசுல ராஜா !

- சீனு

கோச் (COACH) ச்சை பகைச்ச ப்ளேயர் கூட டீம் ல இருந்துடலாம், இந்த கோச்சடையானை பகைச்சுக்கிட்டா பூமிலயே இருக்க முடியாதுடா கண்ணா!

சி.பி.செந்தில்குமார்

 

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. கலந்து கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உங்களுக்கு ஒரு இ-புக் அனுப்பப்படும்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!  உங்களை மூன்றாம் கோணம் விரைவில் மெயில் மூலம் தொடர்பு கொள்ளும்!

tags : ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் போட்டி, ரஜினி பன்ச், ரஜினி பன்ச் டயலாக், பன்ச், பன்ச் டயலாக், ரஜினி போட்டி,  rajini birthday contest, tamil actor rajini contest, rajini, rajinikanth, rajini punch dialogue, rajini punch, rajini dialogues

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>