/* ]]> */
Dec 122011
 

டிசம்பர் 12. – தமிழர்களின் தனி திருநாளோ என்று எண்ணுமளவுக்கு,
தீபாவளியை விட குதூகலமாய் , பொங்கலை விட கொண்டாட்டமாய்
ரஜினியின் பிறந்த நாளை  கொண்டாடி மகிழும் தமிழனுக்கு
கலைத் தாயின் அன்பு பரிசு ரஜினி …..
ஆம் ரஜினியே தான் …..ரஜினி …..
என்ற மாபெரும் கலைஞன் ……..
ரஜினி என்ற முன்று எழுத்துக்குள் ….
மூவுலகையும் கட்டி போட்டு  மயங்கடிக்கும்
வித்தை தெரிந்த வித்தகன் ….
ஆசியாவிலேயே ” ஜாக்கி சானுக்கு ”
அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும்
சத்ரபதியின் வாழ்க்கை ஆரம்பம் என்னவோ
சாம்ராஜ் பேட்டை – பெங்களுரு தான் …
ஜனனம் எடுத்ததோ …வாணி விலாஸ் ப்ரைமரி ஹெல்த் சென்டர் தான்
ரானோஜிக்கும் ரமாபாயிக்கும் நான்காவது மகனாக …..
கன்னங்கரேலென பிறந்த கண்ணன் தான்
சிவாஜி ராவ் கெய்க்வாட் ……….
கெய்க்வாட் என்றால் மன்னரின் பாதுகாவலர்கள் …..
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் பரம்பரையோடு
பாரம்பரிய தொடர்பு உடையவர்கள் ….
அதனால் தானோ என்னவோ ….
அவர் நடைக்கும் உடைக்கும் ஒரு மிடுக்கு ஒட்டி கொண்டே இருக்கும்
முதலில் செய்தது காய்கறி மண்டியில் கூலி வேலை …
அதன் பின் பினதாசஹல்லியில் ஜோதி இண்டஸ்ட்ரியில் மூட்டை துக்கும் வேலை ….
அதன் பின் தான் பஸ் கண்டக்டர் ….
கர்நாடக ஸ்டேட்  டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்….
பணிமனை நாடக குழு…….
அங்கு தான் முதல் முதலில் நாடகங்கள் போடா ஆரம்பித்தார்………..
தன்னம்பிக்கை , கடின உழைப்பு ….
எது இரண்டும் இருந்தால் …
கடவுள் அருள் தானே தேடி வரும்…..
வந்தது கே.பாலசந்தர் வடிவில்….
முதல் படம் ” அபூர்வ ராகங்கள் “….
இன்று வரை 155 படங்கள் ” எந்திரன் -ரோபோ ” முடிய….
எத்தனை எத்தனை அவர்ட்……
- 16 வயதினிலே
-புவனா ஒரு கேள்வி குறி
-முள்ளும் மலரும்
-ஆறிலிருந்து அறுபது வரை
-முன்று முகம்
-எங்கயோ கேட்ட குரல்
-நல்லவனுக்கு நல்லவன்
-தளபதி
-அண்ணாமலை
-பாட்சா
-முத்து
-படையப்பா
-சந்திரமுகி
- சிவாஜி
-எந்திரன்

இத்தனையும் சாதனை படங்கள்
இது தவிர கன்னடம், தெலுங்கு ,ஹிந்தி ,ஏன் ? ஆங்கிலம் (ப்ளோட் ஸ்டோன்) கூட
நடித்து விட்டார் .
உலகமெல்லாம் ரசிகர்கள் …
ஜப்பானில் ரசிகர்கள் …
இன்று ஹலோ FM 89 .5 நடத்தும் பர்த்டே க்ரீடிங்க்சில்
அரபியர்கள் கூட வந்து கையெழுத்து இட்டு போகும் போது….
அந்த கந்த கண்களின்  ஈர்ப்பு சக்தி….
எத்தனை இரும்பு துண்டுகளை தன் வசம் இழுத்து கொண்டது
என்பது  நன்கு விளங்குகிறது
ரஜினி என்ற அந்த சாதாரண மனிதன் ….
இன்று சரித்திரம் போற்றும் நாயகன் ஆனது …..
தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு …..
ர …..ஜி…….னி………
என்ற மூன்று எழுத்து ….
வெற்றியின் ….
தாரக மந்திரம் இதுவே…..
இளைஞகர்களே !
அவர் பிறந்த நாள் கொண்டாடும் இவ்வேளையில்
நீங்கள் அவரிடம் இருந்து கற்று  கொள்ள வேண்டியது
அவருடைய  வாக்கிங் ஸ்டைல் மட்டுமல்ல லைப் ஸ்டைலும் தான்.
கடின உழைப்பு என்றுமே பலனின்றி போகாது
என்பதே அவர் நமக்கு சொல்லி தரும் பாடம்
மாமனிதர்கள் பிறந்த நாள் கொண்டாடும் போது …
அவர்கள் சொல்லி தரும் பாடத்தையும் மனதில்
நிறுத்துவோமே …….
Happy Birth Day Rajini Sir……

..சபீனா..

 

tags

rajini, rajini birthday, december 12, rajini fans, rajini movies

ரஜினி , ரஜினி பிறந்தநாள் , ரஜினி ரசிகன்,16 வயதினிலேபுவனா ஒரு கேள்வி குறி,முள்ளும் மலரும்,ஆறிலிருந்து அறுபது வரை,முன்று முகம்,எங்கயோ கேட்ட குரல்,நல்லவனுக்கு நல்லவன்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  One Response to “ரஜினி – ஒரு சகாப்தம் ! – சபீனா”

  1. Glj vl

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>