1. ‘ வேலாயுதம்’ படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிக்காக ஃபோர் ஃப்ரேம் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் காட்சியை ரத்து செய்யச் சொல்லிவிட்டாராம் ரஜினி.
2. நடிகை அஞ்சலி சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார். இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகையானைவர் எப்போதும் அவர் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டிருப்பார்.
யாராவது வாய்ப்பளித்தால் சொந்தக் குரலில் பாடவும் ரெடி. ‘அங்காடித்தெரு’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம்தான். அது, ‘எங்கேயும் எப்போதும்’ காவது கிடைக்குமா, பார்க்கலாம். விருது கிடைக்கிறதோ இல்லையோ, இவருடைய நடிப்பு தயாரிப்பாளர் ஏ ஆர். முருகதாஸுக்கு ரொம்பவே பிடித்துப் போனதால், தன்னுடைய அடுத்த படத்துக்கும் இவரை புக் பண்ணிவிட்டாராம்.
3. ‘ராஜபாட்டை’ படத்தில் நடிக்க ரீமா சென்னை கூட்டி வந்திருக்கிறார், டைரக்டர் சுசீந்திரன் கோலிவுட்டில் கொஞ்சநாளா தலைகாட்டாமல் இருந்தவரைக்
.
கூட்டி வந்தது மட்டுமில்லாமல், விக்ரமுடன் ஜோடி சேர்த்திருக்கிறார். இவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் கலக்கப் போறார்.
4 டைரக்டர் ஸ்டீவன்னின்’ ரத்தப் புரட்சி’ என்ற குறும்படம் நார்வே நாட்டில் திரையிடப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி, அனைவரின் பாராட்டையும் பெற்றது. உலகம் முழுக்க நடக்கும், இன அழிப்பு, மற்றும் மனித உரிமை மீறல் இவைகளை விளக்கும் படமாம் இது.
5. தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்து போய் அதை அகற்ற ஆபரேஷன் செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் மனோரமாவைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்
அனுஷ்கா ‘அருந்ததி ‘ படத்தில் ஒன்றாக நடித்த பாசமாம்.
.
.
6. சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்துக்கு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வந்த மல்லிகா ஷெராவத் சிம்புவின் டான்ஸில் மயங்கி , ” மும்பை வந்தா எங்க வீட்டுக்கு வாங்க” என்று அழைப்பு விடுத்தாராம்.
tags…
சிம்பு, ரஜினி, மல்லிகா ஷெராவத், அனுஷ்கா, மனோரமா, அஞ்சலி, முருகதாஸ், அருந்ததி, ஸ்டீவன் ,ரத்தப்புரட்சி, விக்ரம், ஸ்ரேயா, ரீமா சென், ராஜபட்டை, இளையராஜா, டப்பிங், மனித உரிமை மீறல்
simbu, mallika sheraavath, anushka, manorama, anjali, murugadass, arunthathi, steevan, rathappuratchi, vikram, sreya, reema sen, rajapattai, ilaiyaraja, rajni
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments