/* ]]> */
Jan 172012
 

ராஜா vs ரஹ்மான்

சரச சல்லாப பாடலில் யார் கிங்க்?

meera jasmine - ayutha ezuthu
meera jasmine – ayutha ezuthu

திரை இசை ஒப்பீடு

இந்த ராஜா vs ரஹ்மான் இரு இசை மேதைகள் பற்றிய ரசிகனின் ஒப்பீட்டுத் தொடரில் நாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சிடுவேஷன்களில் காட்சியமைக்குகளில் இரு இசை மேதைகளும் இசையமைத்த பாடல்களை எடுத்துக் கொண்டு ஒரு ரசிகனின் பார்வையில் ஒப்பீடு செய்து வருகிறோம்.

சரச சல்லாப பாடல்கள்

இப்போது நாம் பார்க்கப் போவது இரண்டு சரச சல்லாப பாடல்கள். சரசத்தையும் விரகத்தையும் குழைத்து இரவில் கலவிக்கு முன்பு மனைவியர் தங்கள் கணவரிடம் பாடும் பாடல்கள்…

ராஜா இசையில் சாமக்கோழி கூவுதம்மா

ராஜாவின் இசையில் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் வந்த சாமக்கோழி ஏ கூவுதம்மா என்ற பாடல். சரிதாவும் சுதாகரும் சேர்ந்து நடித்த இந்த பாடல் காட்சி அந்தநநாட்களில் நிச்சயம் ஒரு சூடான பாடலாக பேசப்பட்டிருக்கும். சரிதா நடிப்பில் மட்டுமல்ல கவர்சியிலும் கைதேர்ந்தவர் என இந்தப் பாடலில் புரிய வைத்திருப்பார்.

saritha - ponnu oorukku pudusu

ரஹ்மான் இசையில் சண்டக்கோழி கோழி

அடுத்தது சண்டக்கோழி கோழி என ஆயுத எழுத்து படத்தில் மணீரத்னம் இயக்கத்தில் இடம்பெற்ற பாடல். மாதவன் மீரா ஜாஸ்மின் தோன்றும் இந்த பாடல் காட்சியில் மொட்டை மாதவன் நம்மை திகைக்க வைத்தால் கூட கண்ணை கொள்ளை கொண்டு போவது மீரா ஜாஸ்மின் தான்… அவர் அழகான சிணுங்கலுக்கே பாடல் காட்சி அழகு !

சாமக்கோழி vs சண்டக்கோழி

இந்தியாவையே இசையால் எழுப்பிய இரு ஜாம்பவான் களின் இரு பாடல்களிலுமே கோழி இடம்பெற்றிருப்பதும் ஒரு விநோத ஒற்றுமையே :-)

சாமக்கோழி கூவுதம்மா பாடலில் எஸ்.பி.ஷைலஜா குழைந்து தொடங்கும்போதே பாடலின் சரச சல்லாபம் நமக்கு புரிந்து விடுகிறது. அதிலும் அந்த் “ஹே” வில் ஷைலஜா கொடுக்கும் ஹஸ்கினஸ் அபாரம். வழக்கமாய் கொஞ்சம் தாளக்கட்டு உள்ள “ஆசய காத்துல தூது விட்டு ” போன்ற பாடல்களை பாடுவதில் வல்லவரான எஸ்.பி.ஷலஜாவை இந்த பாட்டுக்கு தேர்ந்தெடுத்ததே இசை ஞானியின் டச் தான்! அதோடு கூட தானும் சேர்ந்து பாடி பாடலுக்கு மெருகேற்றிவிட்டார்.  இரு அருமையான கிராம சூழலில் வெளிவந்த சரச சல்லாப பாடல் இது.

ஷ்ரயா கோஷலின் குழையும் குரல்

ரஹ்மான் பாடலின் ஆரம்பத்திலேயே கொஞ்சம் பஞ்சாபி டச் கொடுத்து விடுகிறார். அதனால் தானோ என்னவோ ஷ்ரையா கோஷலிடம் இந்த பாட்டை ஒப்படைத்திருக்கிறார். அதுவும் கோஷல் “சண்டக் கோழி கோழி” என ஆரம்பிக்கும்போதே தெரிந்து விடுகிறது, நாம் இந்த பாடலில் சொக்கப் போகிறோம் என. கொஞ்ச நேரம் என்னைக் கொல்லய்யா என ஷ்ரயா உருகுகையில் இசையில் மயக்கத்தில் நாம் ! சாமக்கோழியில் வெறும் சரசம் என்றால் இதில் ரஹ்மானுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கிறார் மணிரத்னம். சரசத்தோடு கொஞ்சம் ஊடலும் வெளிவர வேண்டும். சரசமும் ஊடலும் கலந்த அந்த மேஜிக் ட்யூன் தான் சண்டக்கோழி….

பாடல் சரணங்கள்

சரணங்கள் பொறுத்தவரையில் முதலில் சாமக்கோழி கூவுதம்மாவை பார்ப்போம்..

இதில் கொஞ்சம் கர்நாடிக்காக போய்விட்டார் ராஜா… கிளாசிக்கலாக கொஞ்சம் இழுத்து ராஜாவுக்கே உரிய பாணியில் ஃபோல்கில் வந்து முடியும் சரணம்…

ரஹ்மான் ஆரம்பம் முதலே துள்ளலான தாளக்கட்டைப் பிடித்து அதை விட்டு நகர மறுக்கிறார். இடையில் மட்டும் வட இந்திய இசை சாயலில் ஒரு ஆலாபனையோடு ஆரம்பிக்கும் சரணம்… அப்படியே மெல்ல டெம்போ ஏற்றி மீண்டும் பஞ்சாபி ஸ்டைலில் வந்து முடிக்கிறார். இந்த ரஹ்மான் இசைக்கு ஷ்ரயாவின் குரல் இனிமை மாறாமல் ஒத்துழைத்திருப்பது இன்னொரு ப்ளஸ் பாயின்ட்.

எந்த பாடல் கவர்ந்தது ?

இரண்டு சரச சல்லாப பாடல்களுமே அந்தந்த கால சூப்பர் ஹிட் பாடல்கள் என்றாலும் கொஞ்சம் அதிகம் எக்ஸ்பரிமென்ட் செய்ததாலோ இல்லை ஷ்ரயாவின் குரல் ஷைலஜாவை விட வளமாய் இருப்பதாலேயோ தெரியவில்லை,  என் வாக்கு இந்தமமுறை ரஹ்மானுக்கே… சண்டக்கோழி சாமக்கோழியை விட முந்துகிறது !

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>