/* ]]> */
Dec 132011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் :பூவே பூச்சூடவா (1985)

படம் :பூவே பூச்சூடவா

இசை : இளையாராஜா

உயிரோடு ஆன்மாவையும் ஒரு சேர உருக்கும் பாடல் . யேசுதாஸின் இன்னொரு அருமையான மெலடி . பத்மினியையும் நதியாவையும் ஒன்றாகப் பார்க்கும் போது பாட்டி பேத்தி போலவே இருப்பது கூடுதல் அழகு . இருவரில் யார் அழகு எனும் கேள்வி வந்தால் சந்தேகமில்லாமல் என் ஓட்டு பத்மினிக்கு தான் .

ஆனால் நதியா கலக்கின மாதிரி சென்னை பெண்களை கலக்கின நடிகை வேறு யாரும் இல்லை . நதியா ஷூ , கம்மல் , மிடி என்று சரியாக அலைய விட்டார் அன்றைய பள்ளி , கல்லூரி மாணவிகளை . என் அப்பாவெல்லாம் படாதபாடு பட்டார் எனக்காக நதியா கட்ஷூ தேடி . ம்ம்ம்…பதின்பருவ நினைவுகளை மீள எடுக்கும் இசையும் இனிமையும் .

“பேத்தி என்றாலும் நீயும் என் தாய்” என்று யேசுதாஸ் கரையும் போது சேர்ந்து கரையாததும் என்ன உள்ளம் ?

“இந்தப்பொன்மானை பார்த்துக்கொண்டே

சென்று நான் சேர வேண்டும்”

இதுவும் கேட்கும் போதெல்லாம் புல்லரிக்கச்செய்யும் வரியும் இசையும் ..

 

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால்வார்க்கவா (2)

வாசல் பார்த்த் கண்கள் பூத்து காத்து  நின்றேன் வா

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால்வார்க்கவா

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்

ஓடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை

கண்ணில் வெந்நீரை வார்த்தேன்

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது

ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகம் இல்லை

இன்று ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா ..

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே

பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்

இந்தப்பொன்மானை பார்த்துக்கொண்டே

சென்று நான் சேர வேண்டும்

மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும்

நீ என் மகளாக வேண்டும்

பாச ராகங்கள் பாடவேண்டும் ..

பூவே பூச்சூடவா..

 

தொகுப்பு

..ஷஹி..

 

tags

nathiya, pathmini, sugaragam, yesuthas, jesuthas, jesudass, poove poochchooda va, poove poochooda va film songs, poove poochchooda va song lyrics, poove poochchooda va song video, ilaiyaraja

 

நதியா, பத்மினி, சுகராகம், யேசுதாஸ் , ஜேசுதாஸ், பூவே பூச்சூடவா , பூவே பூச்சூடவா பாடல், பூவே பூச்சூடவாபடப் பாடல், பூவே பூச்சூடவாபடப் பாடல் வரிகள், பூவே பூச்சூடவாபடப் பாடல் விடியோ, இளையராஜா

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>