காலை வணக்கம்
இன்றைய பாடல் :அதோ வாராண்டி வாராண்டி
படம் : பொல்லாதவன்
பாடியவர்கள் : எஸ். பி. பி , வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ் .விஸ்வனாதன்
தலைவர் பார்க்க என்னவோ இளமையாக ,அழகாக இருக்கிறார் தான் .நடன அசைவுகள் படு காமடி ! ஸ்ரீப்ரியா அம்சமான நடிகை . அவர் முகம் ,உடல் அசைவு என்று எல்லாவற்றிலும் அபரிமிதமான அழகு இருப்பதாகத் தோன்றும் .
லொகேஷன் பிரமாதமாக இருக்கிறது . கஷ்மீர் போல . படு ரொமான்டிக்கானது , ரஜினியின் ஹிட் பாடல்களில் ஒன்று . இனிமையுடன் இளமைத்துள்ளலையும் சேர்த்து பதிந்துள்ள பாடல், ஆடவைக்கும் இசையுடனானது .
அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
(அதோ வாராண்டி )
ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக
(அதோ வாராண்டி )
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
(நான் உங்கள் )
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
( மேகங்கள் )
ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக
(அதோ வாராண்டி )
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
என்னாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
(என்னாளும் )
ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக
(அதோ வாராண்டி )
சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவோ
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவோ
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக
(அதோ வாராண்டி )
ஆங்கிலத்தில் :
yen meedhu yeidhaanammaa
ammammaa yEdhEdhO sonnaanammaa (adhO vaaraaNdi)
oNNOdu…oNNaaga…
kaNNOdu…kaNNaaga…(adhO vaaraaNdi)naan ungaL pakkaththil vandhEnendraal
maadhangaL panireNdum kuLirallavaa (naan ungaL)
mEgangaL illaadha vaanillaiyE
neeyindri yeppOdhum naanillaiyE
oNNOdu…oNNaaga…
kaNNOdu…kaNNaaga… (adhO vaaraaNdi)
vaazhaippoo peNNaaga vadivaanadhO
vaadaikku sugamaaga verugindradhO (vaazhaippoo)
yennaaLum unn mEni ponnallavaa
yezhudhaadha kadhai sollum kaNNallavaa (yennaaLum)
oNNOdu…oNNaaga…
kaNNOdu…kaNNaaga…(adhO vaaraaNdi)
sippikkuL muththukkaL naan paarkkavO
sindhaadha muththangaL naan kEtkavaa
yeppOdhu kEttaalum tharuvEnammaa
yengE nee irundhaalum varuvEnammaa
oNNOdu…oNNaaga…
kaNNOdu…kaNNaaga…(adhO vaaraaNdi)
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments