/* ]]> */
Nov 172011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: இளைய நிலா பொழிகிறதே

படம்: பயணங்கள் முடிவதில்லை (1982)

இசை : இளையராஜா

பாடியவர் :எஸ். பி. பி

பாடாலசிரியர் : வைரமுத்து

பள்ளி நாட்களை நினைவில் கொணரும் இன்னொரு பாடல். மோகன் மைக் மோகன் ஆவதற்குக் காரணமாக இருந்த படம். வைரமுத்துவின் வரிகளை சிலாகிப்பதா , கிடாரிஸ்ட்டின் திறனைப்பாராட்டுவதா என்று தெரியவில்லை. எண்பதுகளில் பாடல்களுக்காக பிய்த்துக் கொண்டு ஓடின படங்களின் வரிசையில் முதலில் இருந்த படம்..இளையராஜாவின் அசாத்திய திறமைக்கு மற்றுமொரு சாம்பிள்.

“முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ”

இந்த வரிகளை நினைத்து நினைத்து வியந்திருக்கிறேன் பல முறை..எப்படியான கற்பனை..வாவ் ! பொழியட்டும் இளையநிலா..

 

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப்போகும் மேகம் கனாக்காணுமே

விழாக்காணுமே வானமே

இளைய நிலா..

வரும் வழியில் பனிமழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா..

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்

ஓடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா..

 

ஆங்கிலத்தில்..

ilaiya nilaa pozhigaradhae idhayam varai nanaigiradhae
ulaap poagum maegam kanaak kaanudhae vizhaakkaanudhae
vaanamae

(ilaiya nilaa)

varum vazhiyil pani mazhaiyil paruva nilaa dhinam
nanaiyum
mugileduththu mugam thudaiththu vidiyum varum nadai
pazhagum
vaana veedhiyil maega oorvalam kaanumboadhilae
aarudhal tharum
paruva magal vizhigalilae kanavu varum

(ilaiya)

mugilinangal alaigiradhae mugavarigal tholaindhanavoa
mugavarigal thavariyadhaal azhudhidumoa adhu mazhaiyoa
neela vaanilae velli oadaigal oaduginradhae enna
jaadaigal
vin veliyil vidhaiththadhu yaar nava manigal

(ilaiya)

தொகுப்பு

..ஷஹி..

 

 

tags

payanangal mudivathillai, mohan, poornima bagyaraj, ilaiyaraja, vairamuthu, s. p. b, s.p.Balasubramaniam, sugaragam, kalaip paniyum konjam isaiyum, tamil song lyrics, song lyrics, tamil film songs, tamil film song video

பயணங்கள் முடிவதில்லை, மோகன், பூர்ணிமா பாக்யராஜ், இளையராஜா, வைரமுத்து, எஸ். பி. பி, எஸ். பி. பாலசுப்ரமணியம், சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், தமிழ் சினிமா பாடல் வரிகள், பாடல் வரி, விடியோ

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>