/* ]]> */
Nov 272011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: வான் நிலா நிலா அல்ல

படம்: பட்டினப் ப்ரவேசம் (1977)

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர் : எஸ். பி. பி

மிக அருமையான இசை, அட்டகாசமான லொகேஷன் என்று அம்சங்கள் இருந்தாலும் இது முழுக்க முழுக்க பாடலாசிரியரின் மணிமுடிக்குச் சென்று சேர வேண்டிய வைரம். “நிலா நிலா” என்று பாடல் முழுதிலும் தன் நிலாக்காதலை நிரப்பியிருக்கிறார் கவியரசர். “லா லா “என்றும் எப்போதும் ஹம்மிங் தான் பாடுவோம் .ஒரு பாடல் முழுதுமே அப்படி முடியவேண்டும் என்றால் எத்தனை திறம் மிக்கவராக கவிஞர் இருந்திருக்க வேண்டும்? ஒரு பெண்ணைக் காதல் வலையில் விழச்செய்வதற்கான அத்தனை அம்சங்களும் ததும்பி வழிகிறது பாடலில். வாசிக்கப்படும் வயலினின் இனிமை இதயங்களில் எழுப்புவது  காதலையா ? விரகத்தையா ? மென்மையான ஒரு சோகத்தின் ,ஏக்கத்தின் மூடு பனியையா? வான் நிலா நிலா அல்ல….

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா அல்ல என் தேவியின் நிலா

நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா ..

மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா

பூவில்லாத மண்ணிலே ஜாடை கண்ணிலா…

வான் நிலா ..

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா (2)

பொன்னிலா..பொட்டிலா..புன்னகை  மொட்டிலா..

அவள் காட்டும் அன்பிலா

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா (2)

ஈடிலா .. காதலா ..ஊடலா ..கூடலா ..அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா

வாழ்கை வழியிலா ..ஒரு மங்கையின் ஒளியிலா ..

ஊரிலா நாட்டிலா…ஆனந்தம் வீட்டிலா ..

அவள் நெஞ்சின் ஏட்டிலா …

சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா (2)

எண்ணிலா ஆசைகள் ..என் நிலா கொண்டதேன் ..

அதை சொல்வாய் வெண்ணிலா..

வான் நிலா..

 

ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:

vaan nila nila alla un vaalibam nila

then nila enum nila en theviyin nila

nee ilaatha naalellaam naan theintha vennila

van nila ..

maanilaatha oorile sayal kannilaa

poovilaatha manile jaadai kannilaa

vaan nila …

theivam kallilaa oru thogaiyin sollilaa (2)

ponnilaa pottilaa punnagai mottilaa

aval kaatum anbilaa

inbam kattilaa aval thegak kattilaa (2)

edillaa kaathalaa oodalaa koodalaa aval meettum pannilaa

vaan nila ..

vaazkai vaziyilaa oru mangaiyin oliyilaa

oorilaa naatilaa aanadham veettilaa aval nenjin ettilaa

sontham irulilaa oru poovaiyin arulilaa (2)

ennilaa aasaigal en nilaa kondathen

athai solvaai vennilaa ..

vaan nilaa..

தொகுப்பு

..ஷஹி..

tags

pattina pravesam, jeyachanthiran, sugaragam, vaan nilaa nilaa alla song, , vaan nilaa nilaa alla song lyrics, , vaan nilaa nilaa alla song lyrics and video, van nila nila alla song, van nila nila alla song lyrics , van nila nila alla song video, pattina pravesam film song, kannadaasan, kanathasan, m.s.vishvanathan, m.s.vishwanathan, kalaip paniyum konjam isaiyum

பட்டினப் ப்ரவேசம், ஜெயச்சந்திரன், சுகராகம், வான் நிலா நிலா அல்ல, வான் நிலா நிலா அல்ல பாடல், வான் நிலா நிலா அல்ல பாடல் வரிகள், வான் நிலா நிலா அல்ல பாடல் விடியோ, பட்டினப் ப்ரவேசம் படப் பாடல், கண்ணதாசன், எம். எஸ். விஸ்வநாதன், காலைப்பனியும் கொஞ்சம் இசையும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>