/* ]]> */
Oct 272011
 

காலைவணக்கம் ..

இன்றைய பாடல்:பூந்தளிர்ஆட..

படம்: பன்னீர் புஷ்பங்கள்(1981)

பாடியவர்கள்: எஸ். பி.பி, எஸ்.ஜானகி

பாடலாசிரியர் : வைரமுத்து

இசை : இளையராஜா

பதின்பருவத்து காதல் நினைவுச்சின்னங்களில் ஒன்று ..கொடைக்கானல் பனிப்படலத்தின் ஊடாகத் தெரிவது நம் இளம்பிராயத்து கனவுமேகங்களும் தான்..

அழகான விகல்பமற்ற காதல் சேட்டைகளும் எக்ஸ்பிரஷன்களும் சுரேஷ் சாந்தியிடம் எத்தனை இயல்பாகத்தெரிகிறது..வாழ்வே வண்ணமயமானது ,உலகம் துன்பமற்றது ,எல்லாமே நம் காலடியில் என்று இறுமாப்பு கொள்ள வைக்கும் பள்ளிப்பருவத்து நினைவுகளைக் கிளறி விடும் பாடல்..

“காதலை ஏற்றும் காதலின் காற்றும்

நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே”,

என்று ஜானகி கொஞ்சும் போது இன்பமா அழுகையா என்று புரியாத ஒரு கிறக்க நிலைக்கு மனம் போகிறதே..அடுத்த பல்லவி முழுவதும் “பூவும் பொன்னுமாக” வாழ்வில் இன்னமும் இன்பங்கள் உண்டு தான்..வாழ்வதற்கேற்ற தருணங்களும் வரும் தான் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கிளறி விடுகின்றன்றது..

பூந்தளிர் ஆட……..

பூந்தளிர் ஆட..ஆ.ஆஆஆ பொன்மலர் சூட ஆஆஆஆ

பூந்தளிர் ஆட..பொன் மலர் சூட

சிந்தும் பனிவாடைக் காற்றில்

கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்

பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுபகாலங்கள்

பூந்தளிர் ஆஆஆஆ………

காதலை ஏற்றும் காதலின் காற்றும்

நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே

வாலிப நாளின் வாசனைப் பூவின்

வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே…

கோடிகள் ஆசை கூடிய போது

கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே

தேடிடுதே பெண் காற்றின் ராகம்

பூந்தளிர் ஆட..

பூமலர் தூவும் பூமரம்  நாளும்

போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே

பூவிரலாலும் பொன்னிதழாலும்

பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே

பூமழை தூவும் வெண்ணிற மேகம்

பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே..

ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

பூந்தளிர் ஆட…

 

ஆங்கிலத்தில்:

M: poondhaLir aada ponmalar sooda
poondhaLir aada ponmalar sooda
sindhum pani vaadaik kaatRil
konjum iru kaadhal nenjam
paadum pudhu raagangaL – ini
naadum suba kaalangaL
poondhaLir aada ponmalar soodaF: kaadhalai aetRum kaalaiyin kaatRum
neeraith thottu paadum paattum kaadhil pattadhae
vaaliba naaLil vaasanaip poovin
vaadai pattu vaadum nenjil eNNam suttadhaeM: kOdigaL aasai koodiyabhOdhu
koodum nenjilae kOLam ittadhae

F: thaedidudhae pen paattin raagam
poondhaLir aada ponmalar sooda

M: poomalar thoovum poomaram naaLum
bhOdhai koNdu bhoomi thannaip poojai seiyudhae
poo viralaalum pon idhazhaalum
poovai eNNam kaadhal ennum inbam peiyudhae
F: poomalai thoovum ponniRa maegam
ponnai aLLudhae vaNNam neyyudhae
M: aengidudhae en aasai eNNam
poondhaLir aada ponmalar sooda
F: sindhum panivaadaik kaatRil
konjum iru kaadhal nenjam
paadum pudhu raagangaL -
M: ini naadum subakaalangal
F: paadum pudhu raagangaL
M: ini naadum subakaalangal

தொகுப்பு
..ஷஹி..

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>