/* ]]> */
Oct 192011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : மேகமே மேகமே

படம்: பாலைவனச்சோலை(1981)

பாடியவர்: வாணிஜெயராம்

இசை: ஷங்கர்கணேஷ்

பாடலாசிரியர்: வைரமுத்து

எண்பதுகளில் சக்கைப்போடு போட்ட படம்..ஆண் பெண் நட்பு பற்றின பிந்தைய படங்களுக்கு ஒரு உதாரணம் என்றும் கூட சொல்லலாம்..இந்தப்பாடல் வாணிஜெயராமின் இசை வாழ்வில் நிச்சயமாக ஒரு மைல்கல்..பிரம்மாதமான இசை..கொஞ்சிக் குழையும் வாணி..விழிகளை மூடிக்கொண்டு பாட்டில் வருவது போன்ற ஒரு புல்தரையிலோ மொட்டை மாடியிலோ சாய்ந்து கொண்டு கேட்டால்..சொர்க்க சுகம் தான்..

ஆனால் சுகவீனமாக இருப்பது சுகாசினி மட்டும் தானா..சந்திரசேகருக்கும் உடல் நிலை சரியில்லையா என்று கேட்க வைக்கும் தோற்றத்துடன் பரிதாபமாக இருக்கிறார்..ஒரு வரியில் எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் என்று சுகாசினி பாடும் போது மட்டும் அப்படி ஒரு ஆயிரம் வாட்ஸ் அசடு வழிச்சல்..ம்ம்ம்..

நாம ஏன் நட்புங்கற எல்லைய தாண்டி வந்தோம் என்று சுகாசினி கேட்பதும் அது நம்ம கையில இல்ல கீதா என்று இவர் உருகுவதும்..எத்தனை காதலர்களுக்கு வேதமாக இருந்ததோ..

மேகமே மேகமே..இது காதல் மேகம்..சோக மேகம்..

 

மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேனொளி வீசுதே (3)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ (2)

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

மேகமே மேகமே…

தூரிகை எறிகின்ற போது

இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதைப் பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் (2)

அது எதற்கோ…

மேகமே மேகமே

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>