/* ]]> */
Sep 242011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: ஒரு ராகம் பாடலோடு

படம்: ஆனந்த ராகம்

பாடியது: எஸ். பி. பி ,எஸ். ஜானகி

பாடலாசிரியர் : வைரமுத்து

இசை: இளையராஜா

விருப்பப் பாடல்: www.koodalkoothan.blogspot.com ராகவன் அவர்களுக்கு

 

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஒரு ராகம்..

மாலை நேர காற்றில்

மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடி நாளும்

எனை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே

தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை

நேரில் வந்த நேரமே

என் உள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம்..

ஏதோ நூறு ஜென்மம்

ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும்

துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம்

காதல் என்னும் கீதம்

ஜீவனாக கேட்குதே

சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் ..

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>