/* ]]> */
May 102012
 

 

வரம்பின்றி வளர்ந்துவிடும் புல்தரையைச்சமன் செய்ய
வாங்கியே ஆக வேண்டியிருந்தது ஒரு புல் வெட்டும் இயந்திரம்
முகவரி, விலை, துணை ,திரும்பும் காலவரம்பு
குறித்தெல்லாம்
அருளப்பட்டவைகளின்
கனத்தோடும்                                                                                                                                         இலகு சுவாசத்தின் புதுமையோடும்
துவங்கினது அன்றைய பயணம்

புல்வெட்டும் இயந்திரங்களின்
விற்பனைக்கென்றே
தனியான ஒரு தெரு இருப்பது தெரியுமா உங்களுக்கு ?
சரியான கடையில் நுழைந்து
வகை, அளவு, நிறுத்து
தேர்வும் வணிகமும் விரைவாக முடிந்தது..
வெறுமனே ஒரு புல்வெட்டும் இயந்திரம் தானே அது !

எனக்கான மதிய உணவு காத்திருந்தது
நகரின் ஏதோ ஒரு விடுதியில்
என்பதுதான் எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது !
மேசையை மட்டுமல்லாமல் உணவையும் தெரியலாம்* என்பதும்
அருளப்பட்டிருந்தவைகளின் பட்டியலில் இருந்தது
நன்றியோடு நினைவுகூறப்பட்டது

அன்றைய நிகழ்வுகளில் மிகமுக்கியமானது
இறைத்துதியோடு துவங்காமலும்
நன்றிசொல்லி முடிக்காததுமான உணவும்
தொண்டையில் சிக்காமல் இறங்கும் என்பதும்
அஸ்தமனங்களின் போதான காற்று குளிராய் இருக்கிறது,
கூடடையும் பறவைகள் V போன்ற வடிவம் கூட்டியும் பறக்கின்றன—
என்பதுமான விபரங்கள் தான் !

திடுமென கனக்கத் துவங்கியிருந்த புல்வெட்டியை மறுகைக்கு மாற்றி
எஞ்சியதால் செய்த பிரிவு முகமனின் சைகையின் போது
லேசாய் இழுவிக்கோணின முகம்
அத்தனை அவலட்சணமாய் இருந்ததை
அடுத்த பகலில் அடங்கினகுரலில் தொலைபேசின போது
மறுமுனை கூறித்தான் அறிந்தேன் ..

 

*தெரியலாம்-  தேர்ந்துகொள்ளலாம்

( picture courtesy favim.com)

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>