/* ]]> */
Oct 312012
 
மாத பலன்

நவம்பர் மாத ராசி பலன் நவம்பர் 2012 மாத பலன் 12 ராசிக்கும்

மாத பலன்

மாத பலன்

மேஷ ராசி: வியாபாரிகள் தங்கள் தொழிலில் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துப் போகாததால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். உங்கள் நிதிநிலையில் தொய்வு ஏற்படும். வரவைவிட செலவுகள் அதிகமாவதால்தான் இந்த நிலை . செலவுகளைக் குறைக்கமுடியாமல் கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதால், குடும்பத்தில் அமைதி குறையும். உங்கள் வாழ்ககைத் துணைக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். சிலருக்கு புத்திரப்பேறு  உண்டாகும். உங்கள் உறவினர்கள் உங்களை நெருங்கி வருவார்கள். உங்கள் எதிரிகளின் தொல்லை குறையும்.  நேரம் தவறிய உணவினால், அஜீரணக் குறைவு உண்டாகும். பயணங்கள் களைத்துப்போக வைக்கும். அவற்றால் ஒரு பயனும் இல்லை. உங்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எதிர்ப்புகள் தோன்றலாம். மற்றவர்களுடன் பேசும்போது உங்களுக்கு ஒருவித பயம் உண்டாகும். மாணவர்கள் அறிவுத் தெளிவோடு, தங்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு குழந்தை பிறக்கும். அவர்களது ஆசை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். அதிர்ஷ்டமான தினங்கள்: 5,11,23,25&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,14,15,16,21,22,26,27,28&29. சந்திராஷ்டம தினங்கள்: 14(காலை 8.30க்கு மேல்),15&16(காலை 11மணிவரை).

ரிஷபம்: வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் ஒரு உயர்ந்த பதவி கிடைக்கும்.. பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் பெற்றோர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.  உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் ஆதரவை நாடுவார். உங்கள் உங்களிடம் மகிழ்ச்சியோடிருப்பார்கள். சில நல்ல நண்பர்களை இழக்க நேரும். எதிரிகள் அழிவார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவுக் கட்டுப்பாடின்றி பலவித தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். விஷக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. கீழே விழுந்து அடிபட நேரும். நீண்ட தூரப் பயணம் உங்களுக்கு களைப்பை ஏற்படுத்தினாலும், அதன் மூலம் பயனுண்டாகும். உங்கள் குடும்பத்துக்குத் தேவையில்லாத வேலையில் ஈடுபட்டு துயரப்படுவீர்கள். சிலர் பிறருக்கு ஜாமீன் கையெழுத்திட்டு அதன்மூலம் இக்கட்டில் மாட்டிக்கொள்வர். உறவினர்களும் நண்பர்களும் உங்களிடம் தங்கள் சக்தியைக் காட்ட முற்படுவர். மாணவர்கள் படிப்பில் தங்கள் புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவர். பெண்களின் கடின உழைப்புக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். அதிர்ஷ்ட தினங்கள்: 5,11,23,25&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,14,20,21,26,27,28,&29. சந்திராஷ்டம தினங்கள்: 16 (காலை 11.00 மணீக்கு மேல ),17 & 18 (பிற்பகல் 2.15 மணி வரை ).

மிதுனம்: உங்கள் மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது சற்று வருத்தம் ஏற்படலாம். அவர் உங்கள் கடின உழைப்பால் மனம் மாறி உங்களுக்கு பதவி உயர்வுக்கு வழிவகுப்பார். உங்கள் குடும்பத்தில், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன், விருந்துண்டு மகிழ்வீர்கள். உங்கள் இல்லத்தில் ஒரு மகிழ்ச்சியான விழா நடக்கும். மனைவி, பெற்றோர்கள் மற்றும் உங்கள குழந்தைகளின் சந்தோஷத்துக்கு எந்தக் குறையுமில்லை. ஆனால், உங்களுடைய கடுஞ்சொற்கள் உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் புண்படுத்தும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு சிறுசிறு தொல்லைகளைக் கொடுப்பார்கள். உறவினர் பாராட்டுவர். நட்பு வட்டம் பெருகும். சின்னச் சின்ன பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். உங்கள் பழக்கவழக்கங்களில் நல்ல முன்னேற்றம் காண முடியும். நிதி நிலைமை மிகவும் திருப்திகரமாக இருக்கும். பணம் பண்ண எண்ணி நீங்கள் வாயைத் திறந்தாலே பணம் கொட்டும். வருமானத்துக்குக் குறைவிருக்காது. கண் நோய், வயிற்றுவலி முதலிய சிறு சிறு உபத்திரவங்கள் இருக்கும். மற்றபடி தெம்புக்கோ ஆரோக்கியத்துக்கோ எந்தக் குறையுமில்லை.மாணவர்கள் அறிவுத் திறனில் வெற்றியடைவார்கள். படிப்பில் ஜொலிப்பார்கள். பெண்களுக்கு  புத்திர யோகம் ஏற்படும். புதிய ஆடை அணிகளன்கள் வாங்குவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட தினங்கள்: 5,11,23,25&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,14,18,19,20,21,22,26,27,28&29 சந்திராஷ்டம தினங்கள்: 18 ( மாலை 2.15க்கு ,மேல் ), 19&20 (  மாலை 6.15. மணிவரை ).

கடகம்: உங்கள் திட்டங்கள் எதுவானாலும் நிறைவேறும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறு விபத்துகள் ஏற்படலாம். உங்கள் சுடு சொற்கள் உங்கள் குடும்பத்தினரையும் மற்றவர்களையும் புண்படுத்தும். உங்கள் செயல்களை உறவினர் பாராட்டுவர். நண்பர் ஒருவர் உங்கள் வீடு தேடி வருவதால், பழைய இனிய நினைவுகளில் மூழ்குவீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். நல்ல வருமானம் இருக்கும். ஆனால் பொருள் ஏதாவது திருட்டுப் போகலாம். சிறு பயணங்களையும் பெரும் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தினசரி தேவைக்கான பொருள்கள் வீட்டில் மிகுந்திருக்கும். சிலசமயம் உண்மைக்கு மாறாகப்பேசி சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வீர்கள். அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையை உடனடியாகச் செலுத்தாமல், வழக்குகளைச் சந்திக்க நேரும். மாணவர்கள் உழைக்கத் தேவையான ஆர்வத்தோடிருப்பதால், உயர்வுக்குத் தடை இல்லை. திருமணமாகாத பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாகும். அதிர்ஷ்டமான தினங்கள்: 5,11,23&30 அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,14,20,21,22,26,27,28&29 சந்திராஷ்டம தினங்கள்: 20 (மாலை 6.15 மணிக்கு மேல் ),21&22.

சிம்மம்: உங்களுக்கு உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். சிலசமயம் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகநேரும். வியாபாரிகள் வெற்றியடைவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட லக்ஷ்மியின் அருட் கடாட்சம் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் சிறு திருட்டு ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவுக் கட்டுப்பாடில்லாமல் வயிற்று உபாதைக்ளில் மாட்டிக்கொள்வீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக் கவலை இருக்கும். உங்கள் எதிரிகள் உங்களை வெற்றிகொள்ள முடியாமல் பலம் இழப்பார்கள். உங்கள் நண்பரின் வருகை உங்களுக்கு மகிழ்வளிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களின்போது சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். உங்களுக்கு செல்வம் கொழிக்கும். வீடு மாற்றுவீர்கள். ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவார்கள்.பெற்றோர் மகிழும் வண்ணம் படிப்பில் தேர்ச்சியுறுவர். பெண்களுக்கு திருமணம் கூடிவரும். பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை கூடும். அதிர்ஷ்ட தினங்கள்”: 5,11&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,14,20,21,22,23,24,25,26,27,28&29. சந்திராஷ்டம தினங்கள்: 23,24&25 ( காலை 9.00 மணி வரை ).

கன்னி: வேலையில்லாதவர்க்ளுக்கு வேலை கிடைக்கும். இந்த மாதம் மகிழ்ச்சியான சம்பவம் நிகழும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தாரோடு மகிழ்ச்சி காண்பீர்கள். எதிரிகள் ஓடி ஒளிவர். கெட்ட நணபர்களால் கஷ்டப்படுவீர்கள். கோபமாகப் பேசி உறவினர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்வீர்கள்.   நீங்கள் மேற்கொள்ளும் சிறு பயணங்களால், மகிழ்ச்சி ஏற்படாது. நல்ல உறக்கம், வேளை தவறாத சாப்பாடு, மன மகிழ்ச்சி என்று பொழுது நிம்மதியாக இருக்கும். போலி மனிதர்களை நம்பி ஏமாறாதீர்கள். வீட்டு அலங்காரப் பொரருட்களை வாங்குவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமையால், நல்ல வருமானம் இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள்,மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் லாபம் காண்பார்கள். செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள்  படிப்பில் அதிக கவனம் காட்டுவர்.  தைரியமாகவும் இருப்பார்கள். பெண்கள், ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். குழந்தையில்லாத பெண்கள், புத்திர பாக்கியம் பெறுவர். அதிர்ஷ்ட தினங்கள்: 5,11,23,&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,14,20,21,22,25,26,27,28&29. சந்திராஷ்டம தினங்கள்: 25 (காலை 9.00 மணிக்கு மேல் ),26&27 (மாலை 7.15 க்கு மேல் )

துலாம்: உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொறுப்பான பதிவிக்குப் போக நேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபகாரியம் நிகழும். உறவினர்களையும் நண்பர்களையும் பிரிய நேரும். ஒரு முக்கிய வி.ஐ.பி.யுடன் நட்பு ஏற்படும். பயணங்கள் களைப்பை ஏற்படுத்தும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.  நல்ல உணவு,  நேரத்துக்கு உறக்கம் என்று எல்லா மகிழ்ச்சிகளும் இருக்கும். யோசிக்காமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். ஏமாற்றுக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும். நல்ல வருமானம் இருக்கும். திடீரென சரிவும் இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வதால், வாழ்க்கையில் முன்னேறலாம். பெண்களுக்கு திருமணம் கூடி வரும். ஆனால், பெண்களின் உடைமைகள் சில திருட்டுப்போகும். அதிர்ஷ்ட தினங்கள்: 5,11,23,&25. அனுகூலமற்ற தினங்கள்: 1,2,6,7,8,10,14,20,21,22,26,27,28,29&30. சந்திராஷ்டம தினங்கள்: 1,2&27 (மாலை 7.15 மணிக்கு மேல் ),28,29&30 ( காலை 8.45மணி வரை ).

விருச்சிகம் : வியாபார்கள் ரிஸ்க் எடுத்து கஷ்டப்படுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இருந்தாலும் குடும்பத்துக்கு தேவையான வேலைகள் தாமதமாகத்தான் நடக்கும். உறவினர்களும் நண்பர்களும் உங்களை விட்டு விலகுவார்கள். அதுபற்றிய கவலை உங்களை வாட்டும். கெட்ட சகவாசம் தொல்லை கொடுக்கும். நண்பர்களுடன் வாதிட்டு வீண் பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்வீர்கள். பயணங்களால் பயனில்லை. நெடுந்தூரப் பயணமும் பயனளிக்காது. வீடு மாற்றுவீர்கள். யாரையாவது துணைதேடுவீர்கள்  உங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும். நிதிநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பண வரவு இருந்தாலும் செலவுகளும் தலைக்குமேல் போவதால் கையில் எதுவும் மிஞ்சாமல் அல்லாடும் நிலைதான். ஆரோக்கியம் பெரிதாக தொல்லை தராது. உஷ்ண சமப்ந்தமான தொல்லைகள் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செல்லாது. கடின உழைப்பில்லாததால் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியாது. பெண்கள் மகிழ்வோடிருப்பார்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவார்கள். சில விலைமதிப்பற்ற ஆடைகள் காணாமல் போகும். அதிர்ஷ்ட தினங்கள்: 11,23,&25. அனுகூலமற்ற தினங்கள்: 1,3,4,5,6,7,8,10,14,20,21,22,26,27,28,29&30 சந்திராஷ்டம தினங்கள்: 3,4,5( காலை 11.45வரை ) &30 (காலை 8.45 மணிக்கு மேல்).

தனுசு: அரசாங்க வேலை கிடைக்கும். உயர் பதவியும் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் ரிஸ்க்கை சந்திப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நிதிநிலைமை நன்றாக இருக்கும்.  தொழில் மூலம் மட்டுமின்றி,நிலம், கால்நடைகள் மூலமும் நல்ல வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேண்டியதைச் செய்து அவர்களை மகிழ்வோடு வைத்துக்கொள்வீர்கள். உங்கள் பேச்சு பலர் கூடியிருக்கும் இடத்தில் உங்களுக்கு பழிச்சொல்லைத் தேடித் தரும். நண்பர்களுடம் கருத்து வேறுபாடுகளைத் வளர்த்துக்கொள்வீர்கள். உறவினர்கள் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள்> எதிரிகளின் தொலலை  அதிகரிக்கும். அடிகக்டி பயணங்களை மேற்கொண்டு சிரமப்படுவீர்கள்.  மற்றவர்களுடன் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள். படிப்பைத் தவிர சங்கீதம் போன்ற கலைகளிலும் உங்கள் திறமை பளிச்சிடும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட தினங்கள்: 11,23,25&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,5,6,7,8,10,14,20,21,22,26,27,28&29. சந்திராஷ்டம தினங்கள்: 5 (காலை 11,45 மணிக்கு மேல் ),6&7 (மாலை 8.00 மணி வரை)

மகரம்: வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  வியாதிகள் குணமடையும்.இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மனைவியுடன் இணக்கம் நிலவும். உறவினர்கள் உங்களிடம் அன்பு பாராட்டுவர். எதிரிகளை அடக்குவீர்கள். ஒரு பிரபலமானவருடன் தொடர்பு ஏற்படும். மகிழ்ச்சி தரும் சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். வீட்டில் செல்வம் கொழிக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். தொழிலில் மட்டுமின்றி, நிலம், கால்நடைகள் மூலமும் வருமானம் வரும். பலர் சூழ்ந்த இடத்தில் உங்கள் பேச்சு வம்பை வளர்க்கும். சண்டை சச்சரவில் முடியும். நாவடக்கம் தேவை. மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள். படிபபைத் தவிர சங்கீதம் போன்ற கலைகளைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கு திருமணம் கூடிவரும். சிலர் புத்திரப்பேற்றை அடைவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை கூடும். அதிர்ஷ்ட தினங்கள்: 5,11,23,25,&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,9,10,14,20,21, 22,26,27,28&28, சந்திராஷ்டம தினங்கள்: 7 (மாலை 8.00 மணிக்கு  மேல்),8&9.

கும்பம் :

மிகக் கடினமான வேலையொன்றைச் செய்து முடிப்பீர்கள். அந்தச் சாதனை விருதுகளைப் பெற்றுத் தரும் விதமாக அமையும். உங்களுக்கு வேலையிலும் ஒரு மாற்றம் ஏறப்டும். ஒரு பெண்ணால் உதவி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். மனைவியுடன் நல்லுறவு மிளிரும். உறவினர்களுடன் நீங்கள் வீண் வாதங்களில் ஈடுபட்டு, அதனால், கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிவு ஏற்படும். நண்ப்ர் ஒருவரின் வருகை உங்களுக்கு பழைய இனிய நினைவுகளைத் திரும்பக் கொண்டு வரும். மாத வருமானம் பெருகும். நிலம், வீடு, மனை ஆகியவற்றை வாங்குவீர்கள். உடலில் அலர்ஜி ஏறப்ட்டு அரிப்பு ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் வெற்றியடைவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்து உயரும். வழக்குகள் வெற்றியளிக்கும். பிறருடன் பேசும்போது சண்டை வரும் அபாயம் உள்ளது.  குடியிருக்கும் வீட்டை மாற்றுவீர்கள்.  வாகனம் ஓட்டும்போது விபத்துகள் நேரலாம். கடின உழைப்பு களைப்படையச் செய்யும் நீண்ட பயணங்களைத் தவிர்க்கவும்.  மாணவர்கள் படிப்பில் திறமை காட்டுவார்கள். பெற்றோர் பெருமையடைவர். பெண்கள் ஒரு பெரிய பணக்காரருக்கு வாழ்க்கைப்படுவார்கள். விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் வாங்குவார்கள். அதிர்ஷ்ட தினங்கள்: 5,23,25&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,11,14,20,21,22,26,27,28&29.. சந்திராஷ்டம தினங்கள்: 10&11.

மீனம்: உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவார்கள். உங்கள் நேர்மையான உழைப்பால் அவர்களின் பாராட்டைப் பெற முயல்வீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் ரிஸ்க்கைச் சந்திப்பார்கள். நிதி நிலைமை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நிலம்  போன்ற சொத்துகளை வாங்குவீர்கள். வீட்டுப் பெண்களிடம் தேவையில்லாமல் பேசி வம்பை விலை கொடுத்து வாங்குவீர்கள். அதன்மூலம் குடும்ப அமைதி பறிபோகும். உங்கள் மனைவி உங்கள் ஆதரவை நாடுவார். வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கும். உறவினர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டு கருத்து வேற்றுமை உருவாகும். உங்களின் பழைய நண்பரின் வருகையால், உங்கள் இல்லமும், உள்ளமும் மகிழ்வடையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் ஆங்காங்கே அரிப்பு தோன்றும். வாகனம் ஓட்டும்போது விபத்து நேரலாம்.  நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் பயன் தராது. குடியிருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். பலவழிகளிலும் மகிழ்ச்சியடைவீர்கள். மாணவர்களுக்கு அறிவுத் தெளிவு ஏறப்ட்டு, பாடங்களை நன்கு புரிந்துகொண்டு கல்வித்தரத்தில் உயர்வீர்கள்.  பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணமாகும்.  புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். அதிர்ஷ்ட தினங்கள்: 5,11, 23,25&30. அனுகூலமற்ற தினங்கள்: 1,6,7,8,10,12,13,14,20,21,22,26,27,28&29. சந்திராஷடம தினங்கள்: 12,13&14 (காலை 8.30. மணி வரை). ****************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>