காலை வணக்கம்
இன்றைய பாடல்: மடை திறந்து தாவும் நதியலை நான்
படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: எஸ். பி. பி
மூன்று ஜாம்பவான்களின் கூட்டு முயற்சி கேட்க வேண்டுமா? அட்டகாசம் தான். வைரமுத்து இளையராஜாவின், எஸ். பி. பி யின் எண்ண ஓட்டங்களையே பாடலாய் வடித்தார் போல தான் இருக்கிறது.
சந்திரசேகர் நாயகன் போல அல்லாமல் காமெடியன் போல ரொம்ப கலாட்டா செய்கிறார். ஒரு கலைஞனின் ஆசையை, கனவை அது நினைவாகக் கூடிய சாத்தியக்கூறுகளின் ஒளிக்கற்றையை இசையாய் ..படமாக்கினார் போன்ற பாடல்.
துக்கத்தில் மகிழ்ச்சி கொடுக்கவும் மகிழ்வாய் இருக்கும் போது அதை வெளிப்படுத்தவும், இரட்டிப்பாக்கவும் கூடிய பாடல் இது. ரொம்பவே ஜாலியானது ..வாரத்தின் முதல் நாளை இனிதாய், மகிழ்வாய்த் துவக்க..மடை திறக்கலாம்..
மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் சுரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
மடை திறந்து
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம் (2)
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராச்சியம்
எனக்கே தான்
மடை திறந்து …
ஆங்கிலத்தில்…
manam thiranthu koovum siru kuyil naan
isai kalaignan yen aasaigal aayiram
ninaithathu palithathu hothana nana….
hey ho papapa papapapa…..
kaalam kaninthathu kadhavugal thiranthathu
naadahm vilainthathu nallisai piranthathu
pudhu raagam padaithathale naanum iraivane
isaiyilum kuralilum swarangalin naatiyam amaithen naan
lalalalala……
netren arangile nizhalgalin naadagam
indern yethirile nijangalin dharisanam
varungaalam vasantha kaalam naalum mangalam
isaikenna isaikeren rasigargal raajiyam yenake thaan
தொகுப்பு
..ஷஹி..
நிழல்கள், ரவி, நிழல்கள் ரவி, சந்திரசேகர், இளையராஜா, வைரமுத்து, எஸ். பி. பி, எஸ். பி. பாலசுப்ரமணியம், இசைக்கலைஞன், மடை திறந்து தாவும் நதியலை பாடல், மடை திறந்து தாவும் நதியலை பாடல் வரி, மடை திறந்து தாவும் நதியலை விடியோ, பாடல் வரி , நிழல்கள் படப் பாடல் வரி, நிழல்கள் படப் பாடல் விடியோ, சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும்
nizalgal, ravi, nizalgal ravi, chandra sekar, ilaiyaraja, vairamuthu, s. p. b, S. P. B, s. p. balasubramaniyam, madai thiranthu thavum nathiyalai nan, madai thiranthu thavum nathiyalai nan song lyrics, madai thiranthu thavum nathiyalai nan song video, sugaragam, kalaipaniyum konjam isaiyum
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments