/* ]]> */
Jan 012012
 

ரயில் பயணம் 2011 டிசம்பர் 30

new year celebration chennai

new year celebration chennai

நெல்லை சந்திப்பு சென்னை ரயிலுக்காக காத்திருக்கும் சௌந்தரபாண்டி – “அண்ணாச்சி “- மளிகை கடை உரிமையாளர் …. அவர் அருகே வந்தது செல்வராஜ் – “வைரம் ” தியேட்டர் உரிமையாளர் …..

அவர்களுக்குள் நடந்த உரையாடல் :

செல்வராஜ் : அண்ணாச்சிவிய மெட்ராஸ்க்கு கிளம்பிடாப்ல இருக்கு

அண்ணாச்சி : ஆமாலே ! எம்பொஞ்சாதி போனபின்னால ….எந்த சாதிசனம்
வீடுக்கும் போவமே…நான் உண்டு என் ஜோலி உண்டுன்னு தான் இருந்தேன் !
எம்மவா தன கேக்காம , ஒரு எட்டு வந்து பாத்துட்டு   போப்பா , எனக்காட்டி
இல்லேனாச்சும்…. உம் பேரன்பேத்திகள பாக்காம கிடக்க ,ஒத்தைக்கி கிடந்தது
என்னத்த சாதிச்சிர போறியேனு ….ஒத்த காலுல  நிலையா நின்னுடா ….அதான்
வருஷபொறப்பும் அதுவும் போய் நின்னாக்கி பயபுள்ளைங்க சந்தோசப்படுமேன்னு
கிளம்பிட்டேன் …..

செல்வராஜ் : அதானே பாத்தேன் , அண்ணாச்சி கிளம்பிடவளே ….என்ன
விசேசம்னு…….பாத்தேன்

ஆனா இந்த 2011 சும்மா சொல்லகூடாதுண்ணே…நினச்சி பாக்காம எவ்ளோ
நடந்துட்டு பாத்தேல்லா !

வடக்க லோக்பாலு லோக்பாலு ….அன்னா ஹசாரே …..அவிய பட்டினி கிடக்ராவிய ……
தெக்க …..கூடங்குளம் ….அத்தன சாதிசனமும் அங்க தான் கூடி கிடக்கு …பல்லுல அன்னம் தண்ணி படாம மேக்க…..முல்லை பெரியாறு …..அணகட்டு ….அது அதுபாட்டுல அது நிக்கி ….. கிழக்க …..ராமேஸ்வரத்துல ….போறவன்வே வாரவேன்வே எல்லாத்தையும் கொழும்புகாரன்வ சுட்டு தள்ரானுவே

அண்ணாச்சி : இங்க மட்டுமா ? இதும் காணாதுன்னு ஒலகம் முச்சூடும் இதே கதி தான்.
ஒலகத்துக்கே நாட்டாம அமெரிக்கா …..பஞ்சாயத்து பண்ணி வைக்கேன் ..பண்ணி
வைக்கேன்னுட்டு … இடுக்கு முடுக்கு எல்லாம் பூந்து ஒரு வழியா ஒசாமாவ கொன்னுபோட்டணுவ …. சரி அவனாவது தீவிரவாதி …..அடுத்த சாதி…கொல்றனுவோனு பாத்தா ஆனா லிபியால அவங்க ஆளுகளே இல்லா கடாபிய போட்டு தள்ளிட்டாணுவ …

செல்வராஜ் : ட்ரைன் கிளம்ப நேரம் அவுமாம்லா …..மழ வெறிக்கி ….சித்த காபி கட வர போய் ஒரு காபி குடுச்சிட்டு வருவோம் அண்ணாச்சி.இன்னொரு அதிசயத்த கேட்டிங்கல்லா …..அம்மா , உடன் பிறவா சகோதரிய விலக்கிட்டான்களாம்…

அண்ணாச்சி : ஆமாலே ! படுச்சேன்ல !! இந்த வருஷத்துல சந்தோஷ படுறமாதிரி
சேதினா….டோனி …..உலக கோப்பை வாங்கினது மட்டும் தான் ….

செல்வராஜ் :  என் தியேட்டர்ல ஒடன “ஆடுகளம் ” படம் நல்ல ஒடுச்சில்லா . அதுக்கு தான் என்னினிய மெட்ராஸ் கூப்பிட்டு இருக்கானுவோ …..ஏதோ பரிசு குடுக்குறனுவோ….எனக்கு இந்த வருஷ சந்தோசம் இதான்… தனுசு வேற வருதாம்…அந்த தம்பிக்கு நல்ல நேரம் போல அது படிச்ச பாட்டு கேட்டியளா அண்ணாச்சி ? ”  வை திஸ் கொல வெறி கொல வெறிடி ?”அதுக்கு ஒலகம் முச்சூடும் ரசிக பயலுவோ கூடிட்டானுவளாமே ……

அண்ணாச்சி : ட்ரைன் வந்தாச்சி , ஏருலே ……

செல்வராஜ் : அண்ணாச்சி சாமான் இங்க தாங்க , அவுங்க சீட் அடில எடம்
கிடக்கு , நான் போடுதேன் ….

அண்ணாச்சி : இந்த பெட்டிய மொதல்ல உள்ள தள்ளுலே ….

செல்வராஜ் : ஒருவழியா …..2011 ….போயிட்டு ……2012 …..வருது …… அங்க மெட்ராஸ்ல கூட நல்ல விதமா கொண்டாட மாட்டானுவளாமே…. பெசென்ட் நகர்ல ஒரே குடியும் கூத்துமால்ல இருக்குமாம் …..

அண்ணாச்சி : என்னவோல ! நம்ம ஊரு பயலுவோளும் குடிக்காம இல்லலே ….ஆனா இப்படி ரோட்டுல அடமேரி அலைய மாட்டானுவோ…. ஆனா அங்க தான் நைட்டு வெளிய கால் வைக்க முடியதுனுல்ல சொல்ல கேள்வி ….. அடுத்தவன் குடிய கெடுக்காம இருந்த சரி தான் …. ஒரு பாட்டல் தண்ணிக்கு குடுக்குற காச ஒரு பசிச்ச வயித்துக்கு சோறு போடணும்னு ஒரு பயபுள்ளைக்கும் மண்டைல ஒரைக்கல பாத்தியா? …….

செல்வராஜ் : அண்ணாச்சி ! மணி பாத்தாச்சி ….இப்போ உறங்குங்க …… நாளைக்கு ராத்ரி உங்க மவ வீட்டுல வருஷபொறப்ப …..நிம்மதியா கொண்டாடுங்க…. எழும்பூர் வந்ததும் எளுப்புதேன் ……

சபீனா

tags : ரயில் பயணம், தமிழ் புத்தாண்டு, புத்தாண்டு கொண்டாட்டம், அண்ணாச்சி, ந்யூ இயர், tamil write up on new year celebrations and how new year is celebrated in chennai

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>