( pic courtesy hindudevotionalblog.com )
கண்ணன் தாலாட்டு
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டிலிலே
பேணி உனக்கு பிரமன் விடு தந்தான்
மாணிக்குறளனே தாலேலோ !
வையமளந்தானே தாலேலோ !
” யானை வரும் பின்னே ;மணி ஓசை வரும் முன்னே ” என்பது போல் , முன்பெல்லாம் பண்டிகைகள் வருவதற்கு முன் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் பலகார வாசனை வரும் . அவற்றை குடும்பத்தினர்கள் ஒன்று சேர்ந்து செய்யும்போது, அங்கே ஒற்றுமை நிலவுகிறது. அதனை அக்கம் பக்கம் வீட்டாரோடு பகிர்ந்து கொள்ளும்போது, பண்டங்கள் மட்டுமல்ல, நல்ல பண்புகளும் பரிமாரிக்கொள்ளப்படுகின்றன. நட்பும் ,உறவும் வலுக்க வேண்டும் என்பதற்காகவே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
எல்லோர் வீட்டிலேயும் முதலில் குழந்தைகளைத்தானே கொஞ்சுவாங்க.
அப்படி, எப்போதும் (சு) குட்டிக்குழந்தையா , எல்லோருக்கும் பிடிச்சவனான கண்ணன் பிறந்த நாளைக்கொண்டாடுவது தான் கோகுலாஷ்டமி . குட்டிக்கண்ணனுக்குப் பிடித்த பலகாரங்கள் பல
குட்டிச்சீடை , வெல்லச்சீடை , அப்பம் , அதிரசம் , முக்கியமாக வெண்ணை , முறுக்கு , தேங்குழல் , எள்ளுபொடி , நவநீதம் , சுக்குவெல்லம் , தட்டை , ரவாலாடு , பயத்தம்லாடு, நவாப்பழம் , பெருப்பம்பழம் , கொய்யாப்பழம் , பேரிக்காய் , மாவிலை, பின்னமரம்.
வெண்ணை உண்ணும் கண்ணனுக்குப் பிடித்த வெல்லச் சீடை செய்முறை :
( pic courtesy spicytasty.com)
அரைக்கிலோ பச்சரிசியை ஊற வைத்து, களைந்து வடிகட்டி, லேசான ஈரத்துடனே மாவு திரிச்சுக்குங்க.
நானூறு கிராம் வெல்லத்தை தூள் பண்ணி,அதுல அரை டம்ளர் தண்ணிர் விட்டு, அடுப்புல வெச்சு கிளறுங்க.. ( கவனமா கிளறுங்க…அடிப்பிடிச்சுடக்கூடாது…!)
அரை மூடி தேங்காயை திருவி அதுல கொட்டுங்க .
வெல்லப்பாகு வாசனை வந்துடுச்சா…! ஒரு சின்ன கிண்ணத்துல தண்ணீர் வெச்சுக்கோங்க. அதுல கொஞ்சம் பாகை விட்டுப்பாருங்க….எடுத்து உருட்ட வருதா?
அட….சரியான பக்குவம் அதுதான். உடனே இறக்கிடுங்க.
பச்சரிசி மாவு சலிச்சு வைச்சிருக்கீங்களே அதுல 2 தேக்கரண்டி
எள்ளை சேருங்க. ..(கல் இல்லாம பார்த்துக்குங்க . இல்லாவிட்டால்
சீடை வெடிக்கும் .கோகுலாஷ்டமி தீபாவளி பண்டிகையாகிவிடும் )
இறக்கி வைச்சீங்களே பாகு, அதைக் கொஞ்சம் கொஞ்சமா மாவுல
விட்டுக்கிளறுங்க .
ஒரு கரண்டி தயிரையும் சேர்த்துக் கிளறணும் . உருண்டை உருட்டுற பதத்துக்கு வந்துடுச்சா ?
அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைச்சுடுங்க.
கிளறி வைச்சிருக்கிற மாவை சின்ன சின்ன கோலிமாதிரி உருட்டி
எண்ணையைக்காய வைத்து , அதுல போட்டு எடுத்துடுங்க.
இனிப்பான இந்த சீடையை உங்க வீட்டு சுட்டிக்கிருஷ்ணன்கள்
இன்னும்…இன்னும்னு கேட்பாங்க… கொஞ்சம் நிறையவே செஞ்சுடுங்க.
(எனக்கும் கொடுத்தனுப்பலாம் ) !
..பாபா நளினி ..
tags
கோகுலாஷ்டமி , க்ருஷணஜெயந்தி , க்ருஷ்ணன் , கண்ணன் , சீடை , இனிப்பு , பலகாரம் , முறுக்கு , குட்டிச்சீடை , வெல்லச்சீடை , அப்பம் , அதிரசம் , வெண்ணை , முறுக்கு , தேங்குழல் , எள்ளுபொடி , நவநீதம் , சுக்குவெல்லம் , தட்டை , ரவாலாடு , பயத்தம்லாடு, நவாப்பழம் , பெருப்பம்பழம் , கொய்யாப்பழம் , பேரிக்காய் , மாவிலை, பின்னமரம்.
kannan , lord krishna , butter , guava , seedai , ladu , laddu , athirasam
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments















Please comment with your real name using good manners.