/* ]]> */
Jan 122013
 

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நான் நசீமா .. அருமையா சமைப்பேன் ..நிஜம்மா ! நம்பலைன்னா என் கேக் ரெசிப்பி ட்ரை பண்ணி பாருங்க .. இதோ பெஸ்ட் பனானா கேக் செய்முறை …

பெஸ்ட் பனானா கேக்

 

தேவையான பொருட்கள்

மைதா – 3/4 கப்
பேக்கிங் பவுடர் – 11/2 tsp
பேக்கிங் சோடா – 1/4 tsp
உப்பு – 1/2 tsp
வாழைப்பழம் – 1 பெரியது
சர்க்கரை – 3/4 கப்
முட்டை – 1
வெண்ணை – 1/4 கப் / 50 கிராம்
புளித்த தயிர் அல்லது மோர் – 50 மில்லி
வனிலா எஸ்ஸென்ஸ் – 1 tsp
( மேலும் மணம் சேர்க்க விரும்பினால் ஒரு பின்ச் பட்டைப் பொடி சேர்க்கவும் )

செய்முறை

ஓவனை 350 / 180 செ க்கு ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும் .
9″ விட்டமுள்ள ஒரு கேக் டின்னை வெண்ணை தடவி தயார் செய்து கொள்ளவும் .

மைதா , பேக்கிங் பௌடர் , பேக்கிங் சோடா , உப்பு எல்லாவற்றையும் ஒரு பத்திரத்தில் இட்டு ஒரு ஃபோர்கினால் கடைந்து கொள்ளவும்.

இப்பொழுது வாழைப்பழத்தை துண்டங்களாக வெட்டி மசித்துக்கொள்ளவும் , பழம் மிகக் கனிந்திருப்பது முக்கியம் .

மசித்த பழத்துடன் முட்டை மற்றும் சீனி சேர்க்கவும் .

பின்னர் இக்கலவையில் வெண்ணை சேர்த்து நன்றாக கலக்கும் வரை அடித்துக் கொள்ளவும் .

பிறகு தயிர் மற்றும் வனிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கலக்கவும் .

பின்னர் ஈரமாவுடன் காய்ந்த மாவுகளைச் சேர்த்து அதிகமாகக் கடைந்து விடாமல் பக்குவமாக சேர்க்கவும் .

முன்னரே வெண்ணை தடவி வைத்திருந்த கேக் டின்னில் மாவை இட்டு மேலே சீராக இருக்கும் படி செய்து , ப்ரீஹீட்டட் அவனில் வைத்து 40 நிமிடங்கள் அல்லது கேக் பொன்னிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.

பிரம்மாதமான வாழைப்பழ கேக் தயார் !

வாழ்த்துக்கள்

செஞ்சு பாத்து சொல்லுங்க ..

அன்புடன்

நசீமா

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>