காலை வணக்கம்
இன்றைய பாடல் : நந்தா என் நிலா
படம் : நந்தா என் நிலா
இசை : தக்ஷிணாமூர்த்தி
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மிக அரிதாகக் கேட்கக் கிடைக்கும் பிரம்மாதமான காம்போசிஷன் . அற்புதமான மெலடி , எஸ். பி .பியின் மயக்கும் குரலில் சொக்க வைக்கும் பாடல் . தனித்தன்மை மிக்கது , மலையுச்சியிலிருந்து வழுக்கியோடும் சிற்றருவி நீரைப்போல மடங்கி , நெளிந்து மனதுள் இறங்குகின்றது பாடல் வரிகளும் இசையும் . காதலின் மாயக்கரத்தில் சிக்கிக்கொண்டு விட்ட ஆணொருவன் இதை விட அழகாக தன் தாபத்தைச் சொல்லி விட முடியுமா ? கேட்கும் நெஞ்சங்களின் ஆழத்தில் இருக்கும் நல்லுணர்ச்சிகளை உசுப்பும் ராகம் …நந்தா என் நிலா..
நந்தா என் நிலா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா
விழி நீயாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோகனக் கலையே
வண்ண வண்ண மொழியில் வானவரமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா
நந்தா நீ …
ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே
நந்தா நீ என் ..
ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாளோ
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ
நந்தா …
nantha en nila
nantha nee en nila nila
nayagan madiyil kanbathu sugame nanam yeno vaa
vizi neeyaadum vizi mozi thenaadum mozi kuzal
poovaadum kuzal ezil neeyadum ezil
minni varum silaiye mokana kalaiye
vanna vanna moziyil vanavaramuthe
aasai nenjin theivam neeye
aadi nirkum theepam neeye
pesukindra veenai neeye
kani ithaz amuthinai vazangida arukinil va
nanthaa nee ..
ayiram minnal oruruvaagi
aayizaiyaga vanthaval neeye
agathiyan potrum arunthamiz neeye
arunthathi pole piranthu vanthaaye
nantha nee ..
aagamam kanda seethaiyum indru
ragavan naanendru thirumbi vanthalo
megathilaadum oorvasi enthan
bogathilaada irangi vanthalo
nantha nee ..
tags :
dhakshinamoorthy , s. p. b , S. P. Balasubramaniam, sumithra, vijayakumar, nantha en nila, nantha en nila song, nantha en nila song lyrics, nantha en nila video , sugaragam, kalaip paniyum konjam isaiyum, tamil love songs
தக்ஷிணாமூர்த்தி , எஸ். பி. பி , எஸ். பி. பாலசுப்ரணியம் , சுமித்ரா , விஜயகுமார் , நந்தா என் நிலா , நந்தா என் நிலா பாடல் , நந்தா என் நிலா பாடல் வரிகள், நந்தா என் நிலா விடியோ , சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments