காலை வணக்கம்
இன்றைய பாடல்: மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
படம்: நண்டு (1981)
பாடியவர்: உமா ரமணன்
மிக அரிதாகக் கேட்கக் கிடைக்கும் பாடல். மனித நல்லுணர்ச்சிகளில் வெகு சிறப்புமிக்க தாய்மையே இசையாகப் பிரவாகம் எடுத்தார் போன்றதொன்று. பார்க்கவும் கேட்கவும் அத்தனை இன்பம் . ஒல்லி அஸ்வினிக்கு இத்தனை அழகான கொழுகொழு பாப்பா..ஆனால் தன்னதே போல எத்தனை கொஞ்சிக்கொள்கிறார் ? இப்படியான குழந்தை கிடைத்தால் கொஞ்சாமல் தீருமா?
அஸ்வினியைப் பார்க்கும் போது பள்ளி நாட்களில் உமாரமணன் அவர்களின் லைவ் பாடல் கச்சேரிக்குப் போயிருந்த நினைவு வருகிறது. அஸ்வினியே பாடுகிறார் போல, இருவரும் ஏதோ சகோதரிகள் போன்ற தோற்றம். இவர் போலவே மெல்லியவராய் , சாந்தமும் அழகும் ஒரு சேரத்தவழும் முகம். கொஞ்சமும் ஆடாமல் அசையாமல் ஒரு பதுமையைப் போல் பாடினார். குரல் தான் எவ்வளவு இனிமை? அடடா..
பொன்னின் தோற்றமும், பூவின் வாசமும் ,ஒன்றிணைந்த தேகமோ?
பிள்ளை மொழி அமுதமோ? பிஞ்சு முகம் குமுதமோ? என்று உருகும் போது உடம்பெல்லாம் இப்பவும் புல்லரிக்கிறது..இசையின் , வரிகளின் , குரலின் மகத்துவம் அப்படி..
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே (2)
உன் வண்ணம், உந்தன் எண்ணம் ,நெஞ்சின் இன்பம்-
மஞ்சள் வெயில்…
பொன்னின் தோற்றமும், பூவின் வாசமும் ,ஒன்றிணைந்த தேகமோ?
பிள்ளை மொழி அமுதமோ? பிஞ்சு முகம் குமுதமோ?
பூமுகம் என் இதயம் முழுதும் பூவிதழ் என் நினைவைத் தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்
மஞ்சள் வெயில்…
மேகம் நீர் தரும் ,பூமி சீர் தரும் ,தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப்புனல் ஓடிடும், இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின் நலங்கள்
நாளெல்லாம் உன் நினைவின் சுகங்கள்
வாழும் நாளும் ..
மஞ்சள் வெயில் (2)
ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:
manjal veyil maalaiyitta poove (2)
un vannam unthan ennam nenjin inbam -
manjal veyil…
ponnin thotramum poovin vaasamum ondrinaindha thegamo
pillai mozi amuthamo pinju mugam kumuthamo
poomugam en ithayam muzuthum
poovithaz en ninaivaith thazuvum
nenjil konjum
manal veyil –
megam neer tharum boomi seer tharum
theivam nalla per tharum
inbappunal odidum innisaigal paadidum
vaazvellaam nam uravin nalangal
naalellaam un ninaivin sugangal
vaazum naalum..
manjal veyil
தொகுப்பு
..ஷஹி..
tags
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே, நண்டு, அஸ்வினி, உமா ரமணன், தாலாட்டு, சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், பாடல் வரிகள், விடியோ
manajal veyil maalaiyitta poove, nandu 1981, ashvini, uma ramanan, thalaattu, lulaby, sugaragam,kalaipaniyum konjam isaiyum, song lyrics, video
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments