/* ]]> */
Apr 122012
 
2013 மீன ராசி

நந்தன ஆண்டு புத்தாண்டு பலன் 2012 மீன ராசி tamil new year palangal

2012 மீன ராசி

2012 மீன ராசி

மீனம்:  tamil new year palangal

.பூரட்டாதி(4); உத்திரட்டாதி; ரேவதி:

இந்தப் புத்தாண்டில், உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்கள் கலந்திருக்கும். நற்பலன்களைவிட தீய பலன்களே மிகுந்து காணப்படுவதால்,  எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.  வருகிற மே மாதம் 17-ம் தேதியன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அதாவது ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த சஞ்சாரம் கோச்சாரப்படி சரியில்லை யென்றாலும்கூட  .இருப்பினும் க்ரு தனது புனிதமான பார்வைகளால் உங்களுக்கு சில நன்மைகளைச் செய்யத் தவற மாட்டார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தை தனது 5-ம் பார்வையாலும், 9-ம் இடத்தை 7-ம் பார்வையாலும், 11-ம் இடத்தை தனது 9-ம் பார்வையாலும்பார்த்து அந்த இடங்களை மேன்மையடையச் செய்கிறார்.

குருபார்வை உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையை   இதுவரை பாதித்து வந்த பிணி நீங்கும். வாழ்க்கைத் துணை நலம் பெறுவார். சிலருக்கு கூட்டுத் தொழில் சிறக்கும். தொழிலுக்கு நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலருக்குப் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் உங்களுக்கு சில உதவிகள்  கிடைக்கும். சிலருக்கு மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிலர் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாலும்கூட சிலருக்கு திடீர் என்று பண வரவுகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். தந்தை பற்றிய கவலையும் நீங்கும்.   உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் விழும் குரு பார்வையால், உங்கள் தந்தை மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.

புதிய ஆடைகள் வாங்குவீர்கள். வெளியிடங்களில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். ஆனால் வீட்டில் அது கிடைக்காமல் போகும்.  குரு பகவானின் பார்வையால் நல்ல வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால் அவை அனைத்தும் அவசிய காரியங்களுக்கு பயன்படாமல், விரயமாகும். சிலருக்கு மனைவிவழிப் பூர்வீகச் சொத்தின்மூலம்  பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.உங்கள் தந்தையும் தந்தை வழி உறவினர்களும் கை கொடுக்க தயங்க மாட்டார்கள்.  இனி குரு பகவானின் மூன்றாம் இடப் பெயர்ச்சியால் உண்டாகும் அனுகூலமற்ற பலன்களையுப் பார்க்கலாம்.

இனி நிகழப்போகும் கெடு பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம்  பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு , அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.

பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு [ப்ஏசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.

எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும்.  இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்ட்ய்ம்

நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்தியரி தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை க்ற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள்.

குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது.

சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான சுபகாரியங்களும் தடைப்படும்.

சனி உங்களுக்கு அஷ்டம சனியாக சஞ்சரிப்பதால், மேற்கூறப்பட்ட கெடுபலன்களே நிகழும் .

ஆனால், ராகு-கேதுவின் சஞ்சாரங்கள் அனுகூலமாக இருப்பதால்,  உங்களுக்கு நற்பலன்கள் நிகழ வாய்ப்புண்டு. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். வருமானம் பெருகும். தொழில் சிறந்து விளங்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். உங்கள் எதிரிகளும்கூட உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு பணி உயர்வு, ஊதிய உயர்வு கிட்டும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பொன்னரளிப்பூவால் மாலைகட்டிப்போட்டால், துன்பங்களும் தொல்லைகளும் பறந்தோடும்.சனிக்கிழமைகளில், சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் விலகும்.

இந்த வருடம் இனிய வருடமாக இருக்கும். சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சரியில்லாவிட்டாலும் ராகு கேது உங்களைக் காப்பாற்றும். வாழ்க வளமுடன்!

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>