/* ]]> */
Jan 152012
 
நண்பன் படத்திற்கு தடை nanban movie ban

நண்பன் படத்திற்கு தடை nanban movie ban

நண்பன் படத்திற்கு ஐஜேகே கட்சி தடை கோரியுள்ளது. ஐ.ஜே.கே கட்சி, அதாவது, இந்திய ஜனநாயக கட்சி திரு பச்சமுத்து தலைமையில் இயங்கி வருகிறது. இவரை இவரது கட்சியினர் பாரிவேந்தன் என்றே அழைக்கிறார்கள். நண்பன் படத்தில் விஜய் பேரும் பாரிவேந்தன் தான். படத்தில் விஜய் பெயரை கிண்டல் செய்வது போல் பல இடங்களில் வசனம் வருகிறது.

“பாரி பூரி “

“பாரி வேந்தனாம்…. சாரி சொல்லுடா!”

ஒரு இடத்தில் இலியானா

” எவன்யா உனக்கு பாரிவேந்தன்னு பேரு வச்சது?” என்று கேட்பார்.

இது போன்ற வசனங்கள் தங்கள் தலைவர் பெயரை இழிவு படுத்துவதாகவும் அதனால் படத்தில் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நண்பன் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் நேற்று சேளம் ஏ.ஆரெஸ் தியேட்டர் முன்பு அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸ் விரைவதற்குள் விஜய் ரசிகர்களூக்கும் ஐ.ஜே.கே கட்சியினருக்கும் நடந்த கலாட்டாவில் தியேட்டர் கண்ணாடிகள் உடைந்தன. தியேட்டர் நிர்வாகம் நேற்று மாலை காட்சியையும் இரவு காட்சியையும் ரத்து செய்த பிறகே அவர்கள் தியேட்டரை விட்டு வெளியேறினர். நண்பன் படத்திற்கு தடை வாங்க சட்டபடி நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>