/* ]]> */
Dec 242012
 

இந்தியன் ப்யூட்டி நமீதா:

நமிதா ஜோக்ஸ் namitha jokes

நமிதா ஜோக்ஸ் namitha jokes

       ஜப்பானில் டோக்கியோ சேனல் ஒன்று நடிகை நமீதாவை ‘இன்டியன் ப்யூட்டி’யாகத் தேர்வு செய்துள்ளது. புகைப்படக் கலைஞர் கார்த்திக்  எடுத்துள்ள புகைப்படங்களே நமீதாவுக்கு இந்தக் கிரீடத்தைச் சூட்டி அழகு பார்த்துள்ளன.ஆண்டுதோறும் இப்படி ஒரு ஷோவை நடத்தும் டோக்கியோ சேனல் இப்படி சிலரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்தியப்  பெண்ணாக நமீதா இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு புகைப்படக் கலைஞர் எடுத்துள்ள நமீதாவின் புகைப்படம் அவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்க, அவர் இந்தியன் ப்யூட்டியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ‘ ஆறடி உயர ஆல்கஹால்’,'ஆறடி மோகினி ‘ இப்படி பல பட்டங்களை சுமந்துகொண்டிருக்கும் நமீதாவுக்கு இப்போது ‘இந்தியன் ப்யூட்டி’ என்ற புதுப் பட்டமும் சேர்ந்து கொண்டது. இதுபற்றி என்ன சொல்றார், நமீதா? ” இந்தப் போட்டியில பாம்பே ஆர்ட்டிஸ்ட் பேரெல்லாம் இருந்துச்சுன்னு  கேள்விப்பட்டேன். கத்ரினா கைஃப், வித்யா பாலனை எல்லாம் தாண்டி வின் பண்ணியிருப்பது ஹேப்பியா இருக்கு. என்னை இந்த அளவுக்கு நேசிக்கும் தமிழ் ,ஜப்பான் மச்சான்ஸுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். உடல் அழகு மட்டுமில்லாமல், என் மனசுக்குள் உள்ள நல்ல எண்ணங்களும் என்னை அழகாக் காட்டுது. உலகத்துலேயே இந்தியப் பெண்கள்தான் மூக்கும் முழியுமா இருப்பாங்க. அவங்க எல்லோருக்கும் இந்தப் பட்டத்தை டெடிகேட் பண்றேன். ” என்கிறார். மேலும், ” தன்னுடைய இடுப்புதான் ரசிகர்களுக்குப் பிடித்த விஷயம் “  என்கிறார், இடுப்பே இல்லாமல் குண்டடித்துவிட்ட நமீதா. ” டெய்லி, ஒன் அன்ட் ஹாஃப் அவர்  ஜிம்முக்குப் போறேன் ” எனச் சொல்லும் இவர், தனக்குப் பிடித்தது ஸாரி என்றாலும், ரசிகர்களுக்குப் பிடித்தது மார்டன் ட்ரெஸ்தான் என்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>