/* ]]> */
Nov 112011
 

நம் பாடல் பெட்டிகளின் சாவிகளை

நாம் தொலைத்த அன்றே

அது

மெல்ல ஊறி உள் நுழைந்திருக்க வேண்டும்.

கழிவறைத் துவாரத்திலிருந்து தான்

அது

நுழைந்திருக்கிறது என்பது..

சந்தேகத்திற்கு இடமில்லாத

என் இன்றைய கண்டுபிடிப்பு.

அரூபமான அதன் இருப்பை..

நாம் உணரும் முன்பே,

முடை வீசத்துவங்கியிருந்த,

நம் பாடல்பெட்டியின் கழிவுகள் உண்டு..

கொழுக்கத் துவங்கிவிட்டது அது.

கூடம் அடைத்து மல்லாந்து கிடக்கும் அது

சீறி உமிழ்ந்ததில்

நாறிக் கிடக்கிறது நம் படுக்கை

நம் கானங்களின் நினைவு நாள் அன்று

இதற்கு படையல் வைத்து

பூசிக்குமளவு வளர்ந்து விட்டோம்

இயல் நிறம் இழந்து,

நீலம் பாரித்த முகங்களோடான

நீயும் நானும்.

..ஷஹி..

 

 

கவிதை/தமிழ்கவிதை/ abstract poetry/poems/tamil poems/

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>