/* ]]> */
Apr 012012
 

நல்லதோர் வீணை குறும்படம் – விமர்சனம்

nallathor veenai tamil short film reviews

nallathor veenai short film review , tamil short film, kurumpadam

nallathor veenai short film review

மூன்றாம் கோணத்தின் சினிமா பிரிவின் பிரதான எழுத்தாளர் அனந்து ஒரு குறும்படம் இயக்கியிருக்கிறார் என்றதும் மனதிற்குள் ஒரு மெல்லிய ஆவல் எட்டிப்பார்த்தது. எத்தனையோ பெரிய பெரிய படங்களையே கூட தன் ஓரிரு குத்தீட்டி வரிகளால் குறுக்கும் நெடுக்கும் அலசியவர் அனந்து. உதாரணம், அவர் எழுதிய சமீபத்திய 3 விமர்சனம் – 3 ஐஷ்வர்யா தனுஷின் கொலைவெறி . இப்படி தலைப்பிலேயே ஒரு படத்தின் தலையெழுத்தையே பிட்டுப் பிட்டு வைத்து விடுவார். அப்படிப்பட்டவர் ஒரு குறும்படம் இயக்கியிருக்கிறார். சரி, விமர்சகனுக்கே விமர்சனம்… திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்க ஆசை ஆசையாய் யூ ட்யூபை திறந்தேன்.

குறும்படம் :

பெயர் : நல்லதோர் வீணை

நடிப்பு : மாஸ்டர் ஆகாஷ், சேஷன்

எடிட்டிங்க் : கார்த்திகேயன் , ராம்நாத்

இசை : உதய்

ஒலிப்பதிவு : பாலாஜி

ஒளிப்பதிவு : ஆனந்த சாரி

தயாரிப்பு : மதுரா மூவி மேக்கர்ஸ்

எழுத்து இயக்கம் : அனந்து

கதை :

ஒரு பாலகன் கிரிக்கெட் ஆடுகிறான். தனியே ஆடுகிறான். அந்தப்பக்கம் எதேச்சையாய் வரும் இளைஞன் “ஏண்டா தனியா விளையாடுற ” என கேட்கப் போக , அந்த மூன்று நிமிட சந்திப்பு அந்த இளைஞனுக்கு ஒரு வாழ்க்கை பாடமே தருகிறது. ஒரு சின்ன நாட் தான் ! ஆனால் நிறைவாய் செதுக்கியிருக்கிறார் அனந்து !

நடிப்பு :

மாஸ்டர் ஆகாஷ் :

இயல்பாய் பொருந்தி விடுகிறார் அந்த விளையாட்டுப் பையனாய் ! ஓவர் சென்டிமென்ட் இல்லாமல் அவர் தந்தை பற்றி நினைவு கூர்வது ஒரு யதார்த்த பாச உறவு ! பாராட்டுக்கள் ஆகாஷ் ! வளமான எதிர்காலம் காத்திருக்கிறது !

சேஷன் :

பிரமாதமாய் செய்திருக்கிறார். ஒரு கூறும்படம் முழுவதும் இவரும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் ஆகாஷ் மட்டும்தான். பொதுவாய் குழந்தை நட்சத்திரத்துடன் நடிக்கையில் பெரிய பெரிய ஸ்டார்களே ஸ்க்ரீனில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் தன் நிறைவான நடிப்பினால் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் பெறுகிறார் சேஷன்.

ஒலிப்பதிவு :

பொதுவாகவே குறும்பட படைப்பாளிகள் கோட்டை விடும் இடம் இது. ஆனால் நல்லதோர் வீணையில் பாலாஜியின் ஒலிப்பதிவு ஆட்டோ சத்தம் முதல் பால் பவுன்சாகும் சப்தம் வரை அழகாக நம் செவிகளுக்கு விருந்து படைக்கிறது.

எடிட்டிங்க் :

ஆரம்ப சில நிமிடங்களை மட்டும் இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம். மற்றபடி நிறைவான எடிட்டிங்க். அதுவும் அந்த ஃப்ளாஷ்பேக்கை சீம்லஸ் ஆக நுழைத்த விதம் அருமை !

ஒளிப்பதிவு :

ஆனந்த சாரி அந்த விளையாட்டு மைதானத்தை அதன் செம்மண் சுவை மாறாமல் படம் பிடித்திருக்கிறார். அதுவும் பேட்ஸ்மேனாக “அப்பா” விளையாடும் காட்சியில் புகை மண்டலத்துக்கிடையில் அந்த காட்சியின் நேர்த்தி ஆனந்த சாரியின் திறமைக்கு சாட்சி.

இசை :

உதய் வெகு அழகாக மெலோடியசாக ஒரு அதிகாலையை ஆரம்பித்து மெல்ல மெல்ல கதையின் அழுத்தத்துக்கு ஏற்ப தன் இசையை மெருகேற்றுகிறார். முக்கியமான கட்டங்களில் அழகாய் அண்டர்ப்ளே செய்திருக்கிறார்.

திரைக்கதை :

கேன்சர் என்பது தமிழ் சினிமா காலம் காலமாய் காட்டி வரும் நோய். அதனை இவ்வளவு இயல்பாக சென்டிமென்ட் புகுந்து கெடுத்து விடாமல் கொடுத்ததே இந்த திரைக்கதையின் வெற்றி. ஒரு காட்சி கூட நெருடலின்றி ஃப்ளோ ஆகிறது. பையன் விளையாட வருவதும் காத்திருப்பவன் கூட சேர்வதுமாய் ஒரு அன்றாட நிகழ்ச்சி மூலம் நமக்கு அதிகம் பாடம் எடுக்காமல் அதே நேரம் நமக்கு ஒரு அழுத்தமான மெசேஜ் சொன்ன லாவகம் அந்த திரைக்கதையில் இருக்கிறது.

இயக்கம் :

அனந்து இயக்கிய முதன் முதல் குறும்படம் இது என்றால் நம்ப முடியவில்லை. ப்ரொஃபஷனலாய் செய்திருக்கிறார். கேமரா ஆங்கிள்கள் மூலமே கவிதை சொல்கிறார். அதுவும் அந்த அப்பா கேரக்டரை காட்டாமலே விட்டது ஒரு முத்திரையான டைரக்டர் டச். அந்த புகை மண்டல ஐடியாவுக்கு ஒரு சபாஷ்!

ப்ளஸ்

அழுத்தமான மெசேஜ்

இயல்பான திரைக்கதை

அளவான கதைக்கேற்ற நடிப்பு

நேர்த்தியான ஒளி ஒலி பதிவு

கதைக்கேற்ற இசை

தேர்ந்த இயக்கம்

மைனஸ்

யூட்யூப் வீடியோவில் நடுவில் தெரியும் அந்த ஸ்டாம்ப்

இளைஞன் சிகெரெட் பாக்கெட்டை கீழே போடுவது போல் வைக்காமல் அதை வெறித்து பார்ப்பதை போல முடித்திருந்தால் ஒரு ட்ரமாடிக் ஃபினிஷை தவிர்த்திருக்கலாம்.

பார்க்கலாமா ? :

கட்டாயம் !

அழகான குறும்படம் பார்க்க விரும்பும் பொது மக்களும்

சில நிமிடங்களில் எப்படி நல்ல படம் எடுப்பது என தெரிந்து கொள்ள விரும்பும் கலைஞர்களும் !

ஃபனல் வெர்டிக்ட் :

நல்லதோர் வீணை – நல்ல கைகளில் !

 

- அபி

நல்லதோர் வீணை குறும்படம் வீடியோ

tags : nallathor veenai, nallathor veenai short film, ananthu short film, kurum padam, tamil short film, நல்லதோர் வீணை குறும்படம், நல்லதோர் வீணை குறும் படம், அனந்து, அபி
 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>