/* ]]> */
Apr 052012
 

நேசம் மற்றும் யுடான்ஸ் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டத்தில் அனந்து கௌரவிக்கப்பட்ட போது எடுத்த படம்

 மூன்றாம்கோணம் அனந்து, நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிகளுக்காக மூன்றாம்கோணம் அனந்து இயக்கிய குறும்படம் “நல்லதோர் வீணை ” .

பெயரே கதையைப் பேசுகிறது . குறும்படக்கார்னரில் விமர்சனங்கள் பல எழுதியுள்ள அனந்து , ஒரு படம் இயக்கி பாராட்டுப்பெற்றிருப்பது மூன்றாம்கோணம் குழுவைப் பெருமை கொள்ளச்செய்திருக்கிறது . படத்தின் டெக்னிக்கல் பக்கத்தை மிகவும் அருமையாக அபி சிலாகித்து எழுதியிருக்கிறார் .. படத்தின் அழகியல் அம்சங்களும் அவசியம் பேசப்பட வேண்டியவை .

போட்டி பற்றி கேள்விப்பட்ட இரண்டே நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

அணுகுமுறை

படத்தின் துவக்கத்தில் விழும் மழைத்துளிகளும் அதோடே துவங்கும் இசையும் , புற்றுநோய் சம்பந்தப்பட்ட க்ளூமி ( gloomy) யான ஒரு மனநிலையை துடைத்தெறிகிறது ! நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு அம்சம் இது ..மிகக் கொடுமையான ஒரு வியாதி , அது பற்றின விழிப்புணர்வு ஊட்டும் படம் எனும் போது பொதுவாக ஏற்படும்  ஒரு விபரீத மனநிலையை மாற்றி பாசிடிவாக அணுக வேண்டும் என்பதை சொல்லாமல்  சொல்லும் துவக்கம் மிகவும் அழகு  .

கதாபாத்திரத்தேர்வு

மாஸ்டர் ஆகாஷின்  முகத்தில் இருக்கும் குழந்தைமையும் ,விளையாடியபடியே மைதானத்துக்கு அவன் வருவதும் கூடுதல் வலு சேர்க்கிறது கதைக்கு .இத்தனை விளையாட்டுத்தனமும் இன்னொஸன்ஸுன் இருக்கும் குழந்தை , தந்தையை இழந்தது அவருடைய புகைப்பழக்கத்தால் தான் என்பது அருமையான இம்பாக்ட் கொடுக்கிறது . ஆகாஷின் உடல் மொழி கச்சிதம் . அது இயக்குனரின் முன் தயாரிப்பானாலும் சரி தான் அல்லது இயல்பான உடல்மொழியை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டதானாலும் சரி! மெச்சத்தக்கது .

சேஷனும் ஆகாஷும் விளையாடும்போது சிறுவன் துள்ளலும் துடிப்புமாக இருப்பதும் இளைஞரானாலும் சேஷன் களைப்பாகக் காணப்படுவதும் ( அவரது புகைப்பழக்கம் காரணமாக )சரியான இயக்கத்துக்கு எடுத்துக்காட்டு ! சேஷனின் தோற்றமும் நடிப்பும் பிரமாதமாக அவருடைய கதாபாத்திரத்துக்குப் பொருந்திப் போகிறது .

வசனம்

சில டலயாக்ஸ் க்ளாஸ் ரகம்

ஷார்ட்டா இருந்துகிட்டு லெந்த் பத்தி பேசுறியா

“சச்சின் கூட ஷார்ர்ட்டு தான் “ -

போன்றவை !

சேஷன் ஆரம்பத்தில் நண்பர்களுடன் பேசும் வசனங்களை மட்டும் இன்னமும் பொருத்தமாய் செதுக்கி இருந்திருக்கலாம் .

நண்பர் “தம்ம போட்டுக்கிட்டு இரு “

என்பதும்

“அதுக்குத்தான் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன் “

என்பதும் கதைக்கு தேவையானவை தான் என்றாலும் ஏனோ சரியாக ஒட்டாதது போல் கேட்கிறது .மேலும் சிறுவன் ஆகாஷ் வீட்டிலிருந்து மைதானத்துக்கு வரும் தூரம், அதற்காக செலவிடப்பட்டிருக்கும் மணித்துளிகள் சிறிதே குறைக்கப்பட்டிருக்கலாம் .

அப்லாஸ்

ஆனாலும் கூட சின்னச்சின்ன ஷாட்களில் , ஐடியாக்களை படமாக்கிய விதத்தில் ஸ்கோர் செய்து விடுகிறார் அனந்து . சிறுவனின் தந்தையை , ஆம்புலன்ஸை ,அந்த டாக்டரை காட்டாமலே கதையைச்சொன்ன விதம் அருமை என்பதோடு அச்சுறுத்தாமல் விட்டதில் பெரிய ஒரு ஆசுவாசம் கூட ! ஆம்புலன்ஸை ஓசையின் மூலமும் ,சங்கிலித்தொடராக புகை பிடிப்பவர் என்பதை காமிராவில் ஊதப்படும் புகையினாலும் காட்டி சபாஷ் போட வைத்துவிட்டீர்கள் அனந்த் !

இசை

பின்னணி இசை மிகுந்த பலம் சேர்த்திருக்கிறது படத்துக்கு . படத்தின் முடிவில் சேஷன் சிகரெட் பெட்டியை எறிவதும் ஆகாஷ் ஸ்லோ மோஷனில் நடப்பதும் அருமையான இசையின் பின்னணியில் கவித்துவமான டச் !

ஒரு சோஷியல் காஸூக்காக (cause ) முனைந்திருக்கிறார் அனந்து என்ற எண்ணம் படம் முடிகையில் திடுமென தோன்றி ,ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுக்கச்செய்கிறது !   கான்சர் குறித்த படமானாலும் அழுவாச்சி பொங்காமல், தேவையற்ற செண்டிமென்ட் பிழிசல்கள் இல்லாமல் ,அதே சமயம் “மெசேஜ் சொல்லப் போறேன் ” என்றும் பயமுறுத்தாமல் நீட்டாக முடித்திருக்கிறார் இயக்குனர் அனந்த் !

எதிர்பார்ப்பு

கூடிய விரைவில் அருமையான திரைப்படம் ஒன்றை இயக்கி இன்றைய பொழுதினும் இன்னம் மூன்றாம்கோணம் குழுவினரை அனந்து பெரிதும் பெருமிதம் கொள்ளச்செய்வார் என்று நம்புகிறோம் !

..ஷஹி..

tags

nallathor veenai , short film, tamil short film, anantha narayan , director anantha narayan, cancer , cancer awareness , nesam udanz

நல்லதோர் வீணை , தமிழ் குறும்படம், அனந்த நாராயணன், புற்றுநோய் , புற்றுநோய் விழிப்புணர்வு , நேசம் யுடான்ஸ் , கான்சர் , கான்சர் விழிப்புணர்வு , நேசம் போட்டி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>