
1. சினிமாவில் எல்லா நடிகைகளுக்கும் விதவிதமான அனுபவங்கள் உண்டு. ஆனால் அதை வெளியில் சொல்பவர்கள் மிகச் சிலரே. ‘ நண்பன் ‘ பட நாயகியான இலியான இலியானா தெலுங்கில் முண்ணனியில் இருக்கிறார். ” நான் சினிமாத் துறைக்கு வந்தபோது, இங்கே யாரையும் தெரியாது. வழிகாட்டவும் ஆள் இல்லை. சில தவறுகளையும் செய்தேன். அதன் வழியாக நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டேன். இப்போது அதற்கான பாதையும் பயணமும் என்ன என்பதை தெரிந்துகொண்டேன். ” என்கிறார், இலியானா.

2. சிநேகாவின் திருமணம் காதல் திருமணமாக இருக்காதாம். அவருடைய திருமணம் சமீபத்தில் நடப்பதற்கு வாய்ப்பு இல்லையாம். அவர் நடிப்பில், சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறதாம். கமலின் அடுத்த படத்தில் ஜோடியாகப் போகும் ஸ்ரேயா கமலுடன் நடிப்பதில் பெருமைப்படுவதோடு கமல் நடித்த எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன் என்கிறார்.

3. தமிழ்ப் பெண்கள் விரும்பி நடிக்க வந்தாலும் டைரக்டர்கள் தமிழ்ப் பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. எடுத்தவுடன் கவர்ச்சி குறித்துத்தான் பேசுகிறார்கள். தமிழ்ப் பெண்களின் நடிப்புத் திறமையைப் பற்றி யோசிப்பதில்லை. சதையை நம்புவதற்குப் பதில் கதையை நம்பிப் படமெடுத்தால், சினிமா இன்னும் நலம் பெறும். மற்ற மொழி நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்கள் , அதே முக்கியத்துவத்தை தமிழ் நடிகைகளுக்கும் கொடுக்கலாமென்று வருத்தப்படுகிறார், ‘ களவாடிய பொழுதுகள் ‘ படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடியாக நடிக்கும் நடிகை இன்பநிலா. இப்படிப்பட்ட ஆதங்கம் நடிகை சிந்துவுக்கும் உண்டாம்.

4. கஸ்தூரிராஜாவின் தம்பி மகனான வருண் ‘ மல்லுக்கட்டு ‘ படத்தில் அறிமுகமாகிறார். பட்டதாரியான இவர், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவருடன் நாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். குடும்பப்பாங்கான பெண் வேண்டுமென்பதால் இவர் ஓ.கே. ஆனாராம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments













Please comment with your real name using good manners.