நடிகை ஆண்ட்ரியா அடுத்த காதல் ?
நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த காதல்
சில நாட்களுக்கு முன்பு ஆன்ட்ரியாவின் மீது தனக்குள்ள காதலைத் தெரிவித்திருந்தார், பாசிலின் மகன் பஹத். ”ஒரு மலையாளப்படத்தில் நடித்தபோது எனக்கும் ஆன்ட்ரியாவுக்குமிடையே காதல் உருவானது” என்று தெரிவித்ததோடு, தனக்கும் ஆன்ட்ரியாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், பஹத் தெரிவித்த
கருத்துக்கு எந்தவிதமான ரெஸ்பான்ஸும் காட்டாமல் இருந்த ஆன்ட்ரியா, சமீபத்தில் அவருடைய அபிமானிகள் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது ஆன்ட்ரியா கூறிய பதில். ” நடிகர் பஹத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். காதல், கல்யாணம் என்பது இருவரது விருப்பத்துடன் நடக்க வேண்டும். ஆனால், இதில் எனக்கு சம்மதம் இல்லை. இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. ” என்றும் சொல்லி பஹத்தின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
Sorry, the comment form is closed at this time.