/* ]]> */
Jul 192011
 
ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் வளர்ந்து வரும் இளைய இசை அமைப்பாளர். வெய்யில், ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம் போன்ற தன் படைப்புகள் மூலம் மக்களைக் கவ்ர்ந்து ஆடுகளத்தில் ஒரு பாடலையும் பாடி பீக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வளரும் இசையமைப்பாளர்.

சமீபத்தில் அவர் இசையமைத்த தெய்வத்திருமகள் ரிலீசாகியுள்ளது. அதில் அவர் இசையமைத்த பாடல்கள் டாப் டென்னில் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக “பபபா வருதே எனக்கு பாப்பா” மக்களின் அதீத பாராட்டை பெற்றுள்ளது. ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு அழகான குழந்தைப் பாடல் என குழந்தைகள் மத்தியிலும் அந்த பாட்டிற்கு நல்ல வரவேற்பு. ஆனால் இப்போது அந்த பாடல் ரோஜல் மில்லரின் 1973 ட்ராக்கான விசில் ஸ்டாப் என்ற பாட்டின் அப்பட்ட காப்பி என்று தெரிய வந்துள்ளது.

மேலும் அதே படத்தில் இடம் பெறும் ஜகடதாம் என்ற எஸ்.பி.பி பாடல் அமான் அலிகான் மற்றும் அயான் அலி கான் இருவரும் இணைந்து 2007ல் இசையமைத்த ட்ரூத் என்ற ஆல்ப பாடல் போலவே இருப்பதாக பலர் சொல்கிறார்கள். இது அந்த பாடலின் காபியா என்று கேட்டால் ஜி.வி.பிரகாஷ் மறுக்கிறார். இரு பாடல்களும் ஒரே மாதிரி இருப்பது தற்செயலாக நடந்திருக்கலாம். ஏன் என்றால் தான் இன்னும் ட்ரூத் ஆல்பம் கேட்கவேயில்லை என்கிறார்.

ஆனால் பபபா பாடல் பற்றி பேசுகையில் அது ரோஜல் மில்லரின் விசில் ஸ்டாப்பின் காபிதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இயக்குநர் விஜய் கம்பல் பண்ணியதால் தான் அந்த பாடலை பயன் படுத்தியதாகவும் ஒரிஜனல் பாடலான விசில் ஸ்டாப் ரோஜர் மில்லருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்… எல்லாரும் கண்டுபிடித்த பிறகு இப்படி சொன்னால் எப்படி? அதை முன்னாலேயே செய்திருக்க வேண்டாமா….

அதோடு நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வரும் ஜி.வி.பிரகாஷ் இது போல காபி கான்ட்ரோவர்சிகளில் சிக்காமல் சொந்த இசையை பயன்படுத்தி முன்னேற வேண்டும். அதுதான் அவருக்கும் இசைத்துறைக்கும் நல்லது!

 Tags : Deivathirumagan music composer G.V.Prakash Deivathirumagan mp3 songs

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>