/* ]]> */
Sep 022012
 

முகமூடி – மினியேச்சர் …


ஞ்சாதே , யுத்தம் செய் போன்ற படங்களை உலக சினிமாப் படங்களின் பாதிப்புகளில் எடுத்தவர் , ஒரு உலக சினிமா படத்தை அப்படியே உல்டா செய்து நந்தலாலா வாக எடுத்தவர் இப்படி எவ்வளவோ சொன்னாலும் தன் படங்களை எதிர்பார்க்க வைக்கும் இயக்குனர்களுள் ஒருவர் மிஷ்கின்  … இவர் சூப்பர் ஹீரோ கதையை வைத்து ஜீவா நடிப்பில் தந்திருக்கும் படம் முகமூடி

சென்னையில் வயதானவர்கள் வீட்டை தேடி தேடி கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல் … அந்த கொள்ளை கும்பலை பிடிக்கும் பொறுப்பு அசிஸ்டன்ட் கமிஸனர் கெளரவிடம் ( நாசர் ) கொடுக்கப்படுகிறது …  இதற்கிடையில் மாஸ்டர் சந்துருவிடம் ( செல்வா ) குங்க்பூவை கற்றுக்கொண்டு தண்டசோறாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் ஆனந்த் ( எ ) ப்ரூஸ்லீ ( ஜீவா ) ஏ.சி யின் பெண் ஆர்த்தியை ( பூஜா ஹெக்டே ) காதலிக்கிறார்… ஒரு சந்தர்ப்பத்தில் நரேன் தலைமையிலான கொள்ளைக் கும்பல் ஏ.சி யை கொல்லும் முயற்சியில் போலீசின் சந்தேகப் பிடியில் ஜீவா மாட்டிக் கொள்கிறார் … காதலியை கவர்வதற்காக போட்ட முகமூடியுடன் ஜீவா கொள்ளைக் கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பதே கதை …

படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் நடிகர் ஜீவா … இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு நன்றாகவே தெரிகிறது , ஆனாலும் சிக்ஸ் பேக் வைக்க சொல்லி ஜீவாவை கஷ்டப்படுத்தாமல் அந்த வேலையை டெய்லரிடமே விட்டுவிட்டார் மிஷ்கின்… சூப்பர் மேன் போல பேண்டிற்கு  மேல் ஜட்டி போட்டும் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லாததால் ஜீவா ஏனோ நம்மை கவரவில்லை …

அழகிப் போட்டிகளில் ஜெயிப்பவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதை ஒரு முறை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பூஜா … பேக்கிலிருந்து ஸ்டெப் ஸ்டெப் பாக இவரை அறிமுகம் செய்து அட போங்கடா என்று சொல்ல வைக்கிறார்கள் … கொடூரமான வில்லனாக அறிமுகமாகி
க்ளைமேசில் ஜீவாவை பார்த்து ” பேட்மேன் , ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன் ” என்றெல்லாம் சகிக்க முடியாத மேனரிஷத்தில் வசனம் பேசி பரிதாபமாக செத்துப் போகிறார் நரேன் …ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டிய இவருடைய கேரக்டர் அபத்தமாக மாறியது அந்தோ பரிதாபம் …


நந்தலாலா படத்தில் ஒரு சீனில் லாரி ஒட்டி சென்ற நாசருக்கு இந்த படத்தில் கனமான கதாபாத்திரம் … வழக்கம் போல நன்றாகவே செய்திருக்கிறார் … கிரீஸ் கர்னார்ட் கதாபாத்திரம் படத்தில் உள்ள மற்ற ஓட்டைகளை போலவே பெரிய ஓட்டை … மிஷ்கினின் மனதிற்கு ஏற்ப லோ ஆங்கிள்  , வைட் டாப் ஆங்கிளில் கேமராவை நகர்த்தியிருக்கிறார் சத்யா … அவர் என்ன செய்வார் பாவம் ?! …

” கத்தாழ ” , ” கன்னித்தீவு ” அளவிற்கு இல்லாவிட்டாலும் ” நாட்டுல ” பாட்டில் நன்றாகவே மெலடி குத்து போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கே … ” வாய மூடி ” பாடலாலும் , “ டார்க் நைட் ” படத்தின் இசையை நியாபகப்படுத்தினாலும் பின்னணி இசையாலும் மனதில் பதிகிறார் கே ...

பேட்மேன் , சூப்பர் மேன் போல தமிழில் ஒரு படத்தை தர முயற்சித்ததற்காக இயக்குனர் மிஷ்கினை பாராட்டலாம் … வழக்கமான தண்டசோறு ஹீரோவாக இருந்தாலும் குங்க்பூவை வைத்து பிணையப்பட்ட பின்னணி , மார்க்கெட் சண்டை உட்பட ரசிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் , பிரமாதமான பின்னணி இசையுடன் ஜீவா முகமூடியாக மாறும் காட்சி , ஆங்காங்கே பளிச்சிடும் மிஷ்கின் டைப் ஷாட்கள் , இரண்டாவது பாதிக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல் பாதி போன்றவற்றால் மனதை தொடுகிறார் மிஷ்கின் …

பெரிய பில்ட் அப் கொடுத்துவிட்டு சப்பென்று நகரும் இரண்டாம் பாதி , பெரிதும் கவனிக்க வைக்காத செல்வா – நரேன் பிளாஷ்பேக் காட்சிகள் , ஆஸ்பத்திரி சண்டை , கூன் விழுந்த வேரக்டர் , மடியில் விழுந்து சாகும் நண்பன் , பாம்பு போல காலை சுற்றி சுற்றி வரும் லோ ஆங்கிள் ஷாட்கள் , வசனமே இல்லாமல் நெடு நேரம் நகரும் காட்சிகள் இப்படி படம் நெடுக வழக்கமான மிஷ்கினின் மேக்கிங் ஸ்டைல் இவையெல்லாம் நம் முகத்தை கொஞ்ச நேரம் நேரம் மூட வைக்கின்றன . கொள்ளை கும்பல் நடத்தும் குங்க்பூ ஸ்கூல் , கிரீஸ் கர்னார்ட் வைத்திருக்கும் ஆராய்ச்சி கூடம் , திடீரென ஜீவா தரிக்கும் சூப்பர் ஹீரோ வேடம் இவையெல்லாம் மிஷ்கின் எந்நேரமும் அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடி போல புரியாத புதிராகவே இருக்கின்றன …

இரண்டரை மணி நேரத்திற்கு மேல் படத்தை வளர்க்காமல் தட்டி , ஒட்டி இரண்டாவது  பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால் முகமூடி தமிழ் சினிமா உலகத்திற்கு முக்கிய மூடியாக இருந்திருக்கும் , அதிலும் குழந்தைகளை கடத்தல் கும்பலிடம் இருந்து ஜீவா மீட்கும் விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய க்ளைமேக்ஸ் காட்சி க்ரீஷ் கர்னார்ட் &  கோ வின் குளறுபடிகளால் மொக்கையாகி போனது … பொருளாதார , வியாபார காரணங்களினால் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு  பிரம்மாண்டத்தை கொடுக்க முடியாமல் போனாலும் , க்ரிப்பான ஸ்க்ரீன்ப்ளே மூலம் மிஷ்கின் முகமூடியை ஹாலிவுட் படங்களின் மினியேச்சர் மாதிரி இல்லாமலாவது தவிர்த்திருக்கலாம் …

tags

ananthu , anatha narayan , miniature , mugamoodi, pooja , pooja hekde, nasar, selva

அனந்து , முகமூடி , அனந்த நாராயணன் , மினியேச்சர் , விமர்சனம் , சினிமா விமர்சனம் , முகமூடி விமர்சனம் , கிரீஷ் கர்னாட் , மிஷ்கின், சத்யா , நாசர் , செல்வா , பூஜா , பூஜா ஹெக்டே

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>