/* ]]> */
Nov 092011
 

சென்ற ஞாயிறு 6/11/2011 அன்று க்ரோம்பெட்டில் மூன்றாம்கோணம் பதிவர் சந்திப்பு வெகு இனிதே நடந்தது. அபியவர்களின் குழந்தைகள் ரோஷினி, வர்ஷினி கடவுள் வாழ்த்துப் பாடி மங்களகரமாக விழாவைத் துவக்கி வைத்தனர்.

நம் மூன்றாம்கோணத்தின் வாசகர் திரு. சிவ அருண்மொழித்தேவர் வெகு ஆர்வத்துடன் பெங்களூரில் இருந்து இதற்காகவே வந்திருந்து , விழாவை தலைமை தாங்கி நடத்திக்கொடுத்தார்.

இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதோடு காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோர் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என்பது மிகுந்த சிறப்புக்கும் நெகிழ்ச்சிக்கும் உரிய செய்தி. மூன்றாம்கோணத்தின் தீவிர வாசகர் மற்றும் ரசிகர் என்று தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டது ஏக கரகோஷத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நல்லாசிரியை, திருமதி. பொய்கை MA.MSC, BED அவர்கள் நமது வேண்டுகோளுக்கு இணங்கி பாபநாசத்திலிருந்து வருகை தந்து..அன்புடன், ஆர்வத்துடன் வெகு அழகாக தனது தேன் குரலில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார். நமது பதிவர்களை அவர்களது சிறப்புகளைச் சொல்லி மேடைக்கு அவர் அழைத்து அறிமுகம் செய்ததும் , இடையிடையே சூழலுக்கு ஏற்றார் போல் நகைச்சுவையும் அறிவுச்சுவையும் அள்ளித்தெளித்து அவர் வழங்கியது அருமையான செவியுணவு. சுருதி விலகாமல் பாடிக்காட்டியும் அள்ளிக்கொண்டார் கைத்தட்டல்களை. நன்றிகள் நூறு உங்களுக்கு திருமதி .பொய்கை.

சென்னை ஷாப்பிங் .காம் (chennaishopping.com) மின் திரு.பாலா வருகை தந்து சிற்றுரை ஒன்றும் ஆற்றியது மேலும் சிறப்புக்குரிய ஒன்று.

மூன்றாம்கோணத்தின் வளர்ச்சி பற்றியும் வருங்காலம் பற்றியும் அழகாகப் பேசி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். நன்றிகள் அவருக்கும்.

பிறகு நமது மூன்றாம்கோணம் எழுத்தாளர்கள் ராணி கிருஷ்ணன்,

அனந்து ஆகியோர் தங்கள் தமிழார்வத்துக்கும், எழுத்தார்வத்துக்கும் மூன்றாம்கோணம் வழங்கி வரும் வாய்ப்புகளையும் உற்சாகத்தையும் பற்றி வெகு நெகிழ்ச்சியான செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நம் டயட் பானு மிகச்சிறப்பாக உரையாற்றி ஏகப்பட்ட கைத்தட்டல்களை அள்ளினார். அபியின் பொறுமை பற்றி குறிப்பிடும் போது கலாம் அவர்களின் அருமையான பொன்மொழி ” நீ தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்..அது பனிக்கட்டியாகும் வரை பொறுமையுடன் இருந்தால்” என்பதைக்குறிப்பிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

சந்திப்புக்காக அவர் புதுக்கோட்டையில் இருந்து சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

நம் சிறப்பு ஆசிரியர் திருமதி. பீப்பி (புனைப்பெயர்) அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பது அவர் ஆற்றிய அருமையான உரையின் போது தெரிய வந்தது. ஜோதிடம் பற்றி அழகாக பல செய்திகளைத்தொகுத்து அளித்தார்.

ப்ரியன் பேச்சு சொல்லவே வேண்டியதில்லை ..மிகச்சிறப்பாக அபியின் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் பாராட்டிப்பேசினார். இனி மூன்றாம்கோணம் அடையவிருக்கும் உயரம் பற்றி இவரும் சரி பானுவும் சரி பேசியது மிகுந்த உத்வேகம் கொடுப்பதாக இருந்தது.

அபியவர்கள் என்னுடைய மேடைக்கூச்சத்தைப் புரிந்து கொண்டு எனக்காகவும் பேசியதற்கு முதலில் நன்றிகள் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். மூன்றாம்கோணத்தின் ஆரம்பநாட்களை நினைவுறுத்தி இன்று நாம் அடைந்துள்ள நிலையைச்சிலாகித்து மென்மேலும் உயரவிருக்கும் நம் பத்திரிக்கையின் தரம் பற்றின கனவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. அருமையான மதிய உணவு அன்புடன் பறிமாறப்பட்டது. வந்திருந்து விழாவைச்சிறப்புரச்செய்த அத்துனை நண்பர்களுக்கும் நன்றி.

நம் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதும்..வாழ்த்துக்களையும் அன்பையும் பறிமாறிக்கொண்டதும் ரொம்பவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படியான ஒரு சந்திப்பின் மூலம் இன்னமும் அருமையாக எழுத வேண்டும் செயலாற்ற வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருக்கிறது அனைவரிலும். வெகு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஏற்பாடுகள் செய்திருந்த திரு. அபி அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>