/* ]]> */
Dec 252011
 

குடில் நாயகன் குழந்தை இயேசு

கிறிஸ்துமஸ்

அன்பின் திரு உருவம் அவதரித்த நன்னாளில் அவரை  பற்றி சில வரி கூற விழைகின்றேன.
நாசெரேத் ஊரில் செல்வந்தரான  ஜோக்கிம் , அன்னா தம்பதியருக்கு செப்டம்பர்
8 மகளாக பிறந்தார் மரியா.
நல்லொழுக்கத்திலும் , பண்பிலும்,தெய்வ பக்தியிலும் சிறந்த மரியாளுக்கு
கலிலேயாவிலுள்ள தாவிதின் வழி மரபான  ஜோசப் என்ற தச்சரோடு மண ஒப்பந்தம்
செய்ய பட்டிருந்தது .
ஒருநாள் , மரியாள் தனியே ஜெபம் செய்து கொண்டு இருந்த நேரம், அவர் முன்
கடவுளின் தூதர் கபிரியல் தோன்றி , அசிரிரி கூறினார்  ” மரியே !
பெண்களுக்குள் ஆசிர்வதிக்க பட்டவளே  நீரே  ! நீர் கரு தாங்கி கடவுளின்
மகனை பெற்றெடுபீர்” என்றார் . அதற்கு அவரோ ” நானோ கணவனை அறியேன் , எது
எங்ஙனம் கூடும் ? என்றார் . அதற்கு கபிரியல் மறுமொழியாக, ” கடவுளின்
அருளால் , பரிசுத்த ஆவி உம்மேல் நிழலிட , கன்னி கரு தாங்கி கடவுளின் மகனை
பெறுவார். அவருக்கு மெசியா என்று பெயரிடுவர் என்றார் . மரியாளும் ”
அப்படியே ஆகக்கடவது ” என்று கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்தார். ஜோசப்
மரியா கருவுற்றிரிப்பதை அறிந்து அவரை ” மணவிலக்கு ” செய்து விடலாம் என்று
எண்ணி கொண்டிருந்தபோது , தூதர் அவருக்கு தோன்றி ” ஜோசப் ! தாவிதின்
மகனே!!  உன் மனைவி மரியாவை  ஏற்று கொள்ள அஞ்ச வேண்டாம்.ஏனெனில் அவர்
கருவுற்றிப்பது தூய ஆவியால் தான் .அவர் ஒரு மகனை பெற்று எடுப்பார் .
அவருக்கு மெசியா  என்று பெயரிடுவர் . அவரே மக்களை பாவங்களிலிருந்து
மீட்பார் என்றார்.
அக்காலத்தில் சீசர் தன் பேரரசு முழுவதும் மக்கட்தொகை கணக்கிடுமாறு கட்டளை
பிறப்பித்தான் .அதன் படி சிரியா நாட்டில் குரனேயு ஆளுனர் தலைமையில்
கணக்கெடுப்பு ஆரம்பித்தது . எனவே தத்தம் பெயரை பதிவு செய்ய அவரவர் சொந்த
ஊருக்கு சென்றனர் .  அவ்வாறே கலிலேயாவிலுள்ள நாசெரெத் ஊரிலிருந்து ,
யுதேயவிலுள்ள பெத்லேகமுக்கு ஜோசெப்பும் தன் கர்வுற்ற மனைவி மரியாளை
அழைத்து சென்றார் . அப்போது மரியாவுக்கு பேறுகால வலி வந்தது .
விடுதிகளில் இடம் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை . வலி அதிகமானதால் ,
வழியில் இருந்த மாட்டு தொழுவத்தில்  நுழைந்து பிரசவித்தார். குழந்தையை
துணிகளில் பொதிந்து மாட்டு தீவன தொட்டியில் கிடத்தினர் . உலகின்
மீட்பரின் பிறப்பு , மிக எளிமையான முறையில் நடந்தேறியது . ரட்சகர் மாட்டு
தொழுவத்தில் அவதரித்தார் .
அப்போது வயல் வெளிகளில் தம் ஆட்டுமந்தைக்கு காவல் இருந்து கொண்டு இருந்த
மேய்ப்பர்களுக்கு வான தூதர் தோன்றி ” அஞ்சாதீர் ! இதோ எல்லா மக்களுக்கும்
மகிழ்ச்சியூட்டும்  நற்செய்தி ! இன்று ஆண்டவராகிய மெசியா எனும் மீட்பர்
தாவிதின் ஊரில் பிறந்திருக்கிறார். ” என்றார் . உடனே வான தூதர்கள் பலர்
அவருடன் சேர்ந்து ” உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுக ! உலகில்
உள்ளோருக்கு அமைதி உண்டாகுக ” என்று புகழ்ந்து பாடினார் . உடனே
மேய்ப்பர்கள்  ” வாருங்கள் ! நாம் பெத்லேகமுக்கு போய் ஆண்டவரை காண்போம்
என்று விரைந்தனர் . அப்போது கீழ் திசையில் விண்மீன் எழ கண்டு ஞானிகள்
எருசலேம் நோக்கி வந்தனர் . அதற்கு பின் விண்மீன் மறைந்து விட்டதால்
அந்நாட்டு அரசன் ஏரோதை கண்டு ” யூதர்களின் அரசராக பிறந்திருகின்றவர்
எங்கே ? அவரது விண்மீன் எழ கண்டோம் . அவரை வணங்க வந்து இருகின்றோம்
என்றனர் .இதை கேட்டு அரசனின் மனம் என் நாட்டுக்கு இன்னொரு வாரிசு அரசனா ?
என்று கலங்கிற்று , அதை வெளிகாட்டாமல் , விண்மீன் தோன்றிய நேரம் , திசையை
கேட்டறிந்து விட்டு , அவர்களிடம் ” நீங்கள் போய் குழந்தையை கண்டு வணங்கி
விட்டு எனக்கு அறிவியுங்கள் , நானும் போய் வணங்க  வேண்டும் என்றான்
.அவர்கள் அரண்மனை விட்டு வெளியே வந்ததும் , மீண்டும் விண்மீன்
வழிகாட்டவே, மாட்டு தொழுவத்தை வந்து அடைந்தனர் . அங்கே துணியில்  பொதிய
பட்ட குழந்தையை கண்டு தாங்கள் கொண்டு வந்த பேழையை  திறந்து பொன்,வெள்ளை
போளம், சாம்பிராணி இவற்றை காணிக்கையாக தந்தனர் .நெடுசாண்கிடையாக விழுந்து
வணகினர். அன்றிரவு கனவில் ஏரோதிடம் திரும்பி போக வேண்டாம் என்று
எச்சரிக்க பட்டு , மாற்று வழியாக ஊர் திரும்பினர் .
எனவே தன் கிறிஸ்து பிறப்பு நாளில் கட்டப்படும் ” குடில் ” மாட்டு தொழுவ
வடிவிலும், அதன் உள்ளே மரியா மற்றும் ஜோசப் உடன் சில மேய்பர்களும்,
மூன்று ஞானிகளும் , வான தூதரும் , மற்றும் சில ஆடு மாடுகளும் இயேசுவை
வணங்குவது போல உள்ளது.
அனைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதே மறை நூலின் ஒருவரி சுருக்கம் .
கிறிஸதவம் மட்டுமல்ல . எல்லா மதமும் போதிப்பது இதுவே . குரான் ஆகட்டும் ,
பகவத் கீதை ஆகட்டும் , எல்லா மதமும் இதை தானே எடுத்து காட்டுகின்றன.
பைபிள்லில் ” பிறமத சகோதரர்களை அன்பு செய் ” என்று கூற பட்டுள்ளது .
அப்படி என்றால், பிற மதத்தினரையும் சகோதர்கள் போல பாவித்து அன்பு செய்ய
வேண்டும் என்று தானே அர்த்தம் . இன்னொரு பக்கத்தில் ” நீ உன்னை நேசிப்பது
போல் பிறரையும் நேசி ” என்கிறது. ஆம். நம்மை நாம் எந்த அளவுக்கு
நேசிக்கிறோம். நாம் நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என்று
நினைக்கிறோமோ அது  எல்லாமே அடுத்தவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம்
விரும்ப வேண்டும் . முடிந்தால் அது அவர்களுக்கு கிடைக்க உதவ வேண்டுமே
தவிர அவர்கள் வளர்ச்சி கண்டு பொறமை கொள்ள கூடாது . நாம்
அடுத்தவர்களுக்காக ஜெபம் செய்யும் பொழுது நமது ஜெபங்கள் கேட்க படுகின்றன
. நமது விருப்பங்கள் கேட்காமலே நிறைவு பெறுகின்றன . அந்த புனித புத்தகம்
முழுவதும் ,  அன்பு செய் அன்பு செய் என்று தான் கூற பட்டுள்ளது .
கடவுளின் மகன் , அற்புதமாய் உருவானவர் , நினைத்திருந்தால் மாட மாளிகையிலோ
, கூட கோபுரத்திலோ பிறந்து இருக்கலாம் . ஆனால் அவரோ ஒரு சாதாரண தச்சன்
மகனாய் , மிக சாதாரண மாட்டு தொழுவத்தில் , குளிர் நிறைந்த டிசம்பர்
மாதத்தில் பிறந்தது, நமக்கு எளிமையை உணர்த்தவே . வாழ்ந்த காலம்
முழுவதும் வாய் ஓயாது மறை உரை ஆற்றியது அன்பு மட்டுமே.
எனவே வாசகர்களே ! கிறிஸ்து பிறந்த இந்நன்நாளில் எல்லோரையும் சகோதரகளாய்
பாவித்து எளிமை , அன்பு இரண்டையும் நம்பால் முடிந்தவரை நம் வாழ்வில்
செயலாக்க முயல்வோமே ……..

இனிய கிறிஸ்து பிறப்பு நாள் வாழ்த்துக்கள் .
சபீனா

 

tags : கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், Merry Christmas, christmas, tamil christmas wish, tamil christmas greetings, christmas greetings in tamil,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>