காலை வணக்கம்
இன்றைய பாடல்: வா வெண்ணிலா
படம்: மெல்லத்திறந்தது கதவு (1986)
பாடலாசிரியர்: கங்கை அமரன்
இசை : இளையராஜா, எம். எஸ். விஸ்வனாதன்
எண்பதுகளின் கிளாசிக் வரிசை பாடல் ,இளையராஜாவின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று. குதூகலமும் அதே சமயம் மிகமென்மையான ஒரு சோகமும் சேர்ந்து இழையும் பாடல்.
அமலா தான் நடிக்க வந்த புதிதில் எத்தனை அழகாக, அளவான சதைபற்றுடன் இருக்கிறார்! அப்பறம் அப்பறம் தான் இளைத்து பரிதாபத்தோற்றம் வந்து விட்டது. மேக்கப்மேனுக்கு முஸ்லிம் பெண் என்றாலே இந்த புருவம் இணைந்திருக்கும் ஐடியா யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ரொம்ப கண்றாவியாக இருக்கிறது. அப்போது புடவை கட்டும் வயதில்லை என்றாலும் அம்மாவை வம்பு பண்ணி அதே மாதிரியான இளமஞ்சள் புடவை ஒன்று வாங்கி தோழி சித்ரா பிறந்த நாளுக்குக் கட்டி கால் தடுக்க சென்று வந்த நினைவு வருகிறது.
இப்போது பார்க்கும் போது மோகனின் தலையாட்டல் எரிச்சல் கொடுத்தாலும் எண்பதுகளில் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் தான் .
வெகு அழகான லொகேஷன் , பிரமாதமான இசை, மயக்கும் ரொமான்டிக் குரலில்” வா வெண்ணிலா” என்று எஸ். பி. பி கொஞ்சுவது கேட்டு நிலவே கூட இறங்கி வரலாமா என்று கொஞ்சம் யோசித்திருக்கும்…கதைக்கு பொருத்தமான பாடல் வரிகள் கூடுதல் அழகு..படம் பிய்த்துக்கொண்டு ஓடியதற்கு பாடல்களும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது..
என்ன ஒரு பாடல்..வாவ்வ்வ்..வெண்ணிலா…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்
வா வெண்ணிலா
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உனைச்சேர- உனைச்சேர எதிர்ப்பார்த்து
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
வா வெண்ணிலா
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணைபிரியாமல் துணை வரவேண்டும்
உனக்காக- உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்..
வா..
ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:
Vaa vennil unnai thane vaanam thedudhey…
Meladai moodiyey oorgolamai povadhen…
vaa venniia unnai
Mugam paarka naanum mudiyaamal neeyum…
Thirai pottu unnai maraithaaley paavam..
Oru muraiyenum…thirumugam kaanum..
varam thara vendum….enakkadhu podum..
Unai sera edhir paarthen ..munnam nooru jenmam eanginen..
vaa venniia unnai
malar pondra paadham ..nadakkindra podhu..
nilam pola unnai naan thanga vendum..
Idayinil aadum….udaiyena naalum..
Inai piriyaamal…udan vara vendum..
Unakkaga pani kaatri …dhinam thoothu poga vendinen…
vaa venniia unnai
தொகுப்பு
..ஷஹி..
மெல்லத்திறந்தது கதவு, வா வெண்ணிலா, மோகன், அமலா, சுகராகம், எஸ். விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன், காதல் பாடல் ,காலைப்பனியும் கொஞ்சம் இசையும்,
mellath thiranthathu kathavu, mohan, amala, sugaragam, ilaiyaraja, m.s.visvanathan, s. p. b, s.p. balasubramanian,love song, kalaippaniyum konjam isaiyum, vaa vennilaa
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments