/* ]]> */
Apr 302012
 
மாத பலன்

மே மாத பலன்கள்  மே மாத ராசி பலன்  May 2102 Month Rasi Palan tamil

Month Rasi palan tamil

மாத பலன்

மாத பலன்

மேஷம்:

கடந்த கால நினைவுகளில் கவலை கொள்வதை தவிர்க்கவும். எதிர்காலத்  தேவைகளுக்காக திட்டங்களை உருவாக்குவது நன்மை தரும். இடம் பொருள் அறிந்து பேசுவீர்கள்.  சகோதரர்களுக்கு உதவுவீர்கள். வீடு வாகன வழியில் பராமரிப்பு செலவை மேற்கொள்வீர்கள். புத்திரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மருத்துவ செலவை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானத்தைவிட அதற்கான செலவு அதிகமாகும். தெய்வ வழிபாடு மேற்கொள்வதில் தடங்கல் ஏற்படும். ஆரோக்கியம் சிறக்கும். வழக்கு, விவகாரங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். ஓரளவு கடன் அடைபடும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். புதிய நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவதோடு புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். பணியாளர்கள் நன்கு பணி புரிந்து நற்பெயர் பெறுவர். வியாபாரிகள் கடின உழைப்பால்,உற்பத்தி இலக்கை அடைவர். பண வரவு சிறக்கும்.   பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நற்பெயர் பெறுவார்கள். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெற்று குடும்ப நலனை சிறக்கச் செய்வர். குடும்பத் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.  சுய தொழில் புரியும் பெண்கள் அளவான லாபத்தில் விற்பனை வளைர்ச்சி காண்பர்.  அரசியல்வாதிகள் அதிகார தோரணையைத் தவிர்த்து அன்புடன் நடப்பதால் புகழ் அடைவர். விவசாயிகள் சராசரி மகசூல் காண்பர். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

பரிகாஎரம்:

சிவ வ்ழிபாடு சிரமத்தைப் போக்கும்.

ரிஷபம்:

பண வரவு சீராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் குடும்பத்தினரிடம் நற்பெயர் பெறலாம். உங்கள் மனம் என்னவோ படாடோபத்தையே நாடும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவர். கிடங்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் காட்டாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரும். பணியாளர்கள் கடின மாக உழைத்து உற்பத்தியைப் பெருக்குவர். ஆனாலும் சம்பள உய்ர்வு கேட்டு கொடி பிடிக்கக்கூடாது. பணி புரியும் பெண்கள் அக்கறையுடன் செயல்படாவிட்டால் நற்பெயர் கெடும் . இலக்கினை அடையவும் முடியாது. குடும்பப்பெண்கள் கணவரின் சொல்லுக்கு முக்கியத்துவம் அளித்து குடும்ப மகிழ்ச்சியை நிலை நாட்டுவர். சுய தொழில் புரியும் பெண்கள் கணவர் மற்றும் சகோதரர் உதவியால் புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு செலவுக்கான நேரம் இது. விவசாயிகளுக்கு சராசரி மகசூல் உண்டு. மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே முன்னேற முடியும். புத்திரர்கள் உங்கள் மனம் மகிழும் வண்ணம் நடந்துகொள்வர். பூர்வீக சொத்தின் மூலம் சுமாரான பண வரவு கிடைக்கும். உடல்நலத்துக்காக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியிருக்கும். வழக்கு விவகாரத்தில் எதிர்பாராத அனுகூலம் உண்டு. நண்பர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வீடு வாகனத்தை நம்பிக்கைக் குறைவான எவருக்கும் தர வேண்டாம். வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. உறவினரோடு இருந்த கருத்து பேதம் நீங்கும்.

பரிகாரம்:

முருகப் பெருமானை வழிபட்டால் தொழில் வளர்ச்சி பெருகும்.

மிதுனம்:

பணவரவு சரளமாக இருக்கும்.  தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கி லாபம் காண முடியும். அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சந்தையில் போட்டி குறைவதால், வியாபாரிகள் விற்பனையில் வளர்ச்சி கண்டு லாபம் காண்பர். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை அடைவர். பதவி உயர்வும் பிறசலுகைகளும் கிடைக்கும். பணி புரியும் பெண்கள் கடினமாக உழைத்தாலும், சலுகைப் பயன்கள் தாமதமாகவே வரும். குடும்பப் பெண்கள் கணவர் வீட்டாரிடம் நற்பெயர் பெறுவர். நண்பர்களிடம் உதவி பெறுவீர்கள். உதவியும் செய்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை அவரவர் தகுதிக்கேற்ப கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள்  உற்பத்தியும் விற்பனையும் பெருகி நல்ல லாபம் காண்பர். அவர்கள் புதிய தொழிற்கருவிகள் வாங்கவும் வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி, பொறுப்பின்மூலம் எந்தச் செயலையும் சாதித்துக்கொளவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் மகசூல் உயரும். மாணவர்கள் லட்சியத்துடன் படித்து சிறந்த தேர்ச்சி அடைவர். உங்கள் தகுதி திறமை வளர்ந்து செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கத்தவர் நட்பு பாராட்டுவர். எவரிடத்தும் குறைகாணாத மனப்பக்குவம் பெறுவீர்கள். வீடு, வாகனம் போதுமான நிலயில் இருக்கும். தாய்வழி உறவினர்களின் , வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானத்தின் அளவு அதிகரிக்கும். புத்திரர் நற்குணத்துடன் நடந்து படிப்பில் ஜொலிப்பார்க:ள். அவர்களின் எதிர்பார்ப்பை மனமுவந்து செய்து தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். உடல்நலக்குறை சரியாகி ஆரோக்கியம் ஏற்படும். எதிரிகள் உங்களின் வளர்ச்சி கண்டு வியந்து விலகுவார்கள்.  நிலுவையில் உள்ள பணக்கடனை பெருமளவில் சரி செய்வீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவர். பொதுவாக உங்கள் வாழ்வில் முன்னேற்றமும் தாராள பண வரவும் கிடைக்கும்.

பரிகாரம்:

மீனாட்சியம்மனை வழிபடுங்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி அரங்கேறும்.

கடகம்;

இந்த மாதம் தாராள பண வரவு இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்குவர். அது மட்டுமின்றி, புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவர். விற்பனையிலும் சிறப்பார்கள். அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒப்புதல்களும், கடன் உதவியும் தாராளமாகக் கிடைக்கும். புதிய இடங்களில் சரக்கு கொள்முதல் செய்து வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டே போவீர்கள். பணியாளர்கள் நிறுவனத்தின் இலக்கை குறித்த காலத்துக்கு முன்பே அடைவார்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணி புரியும் பெண்கள் பணியிடத்தில் உண்மையான உழைப்பைக் காட்டி, நன்மதிப்பையும் சலுகைகளையும் பெறுவார்கள். சுய தொழில் புரியும் பெண்கள் அரசு உதவி பெற்று, உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரித்து லாபம் அடைவர். அரசியல்வாதிகளுக்கு ஆதரவாளர்களிடம் செல்வாக்கு பெருகும். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவதோடு கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் அடைவார்கள். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள். உங்கள் பேச்சில் இதுவரை இருந்துவந்த கடுமை குறையும். எல்லோரிடமும் இனிமையாக பழகி குடும்பத்தினரிடம் அதிக பாசம் காட்டுவீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். தாய்வழி உறவு கை கொடுக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பூர்வீக சொத்தைப் பாதுகாக்க நம்பகமானவர்களை அமர்த்துங்கள். புத்திரர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னிலை பெறுவார்கள். சொத்தின்பேரில் கடன் பெறுபவர்கள் குறைந்த அளவில் பெறுவது நல்லது. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க புதிய உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். எதிரிகள்கூட உங்கள் வளர்ச்சியைக் கண்டு விலகிப் போவார்க:ள். கணவன்-மனைவி உறவு சிறக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். நண்பர்களின் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். நண்பர்களின் உதவி மேலும் உங்கள் திறமையை வளர்க்க உதவும்.

பரிகாரம்:

மாரியம்மனை வழிபடுவதால் துன்பங்கள் விலகும். எதிரிகள்  அடியோடு அழிவார்கள்.

சிம்மம்:

பணவரவு அதிகம் கிடைப்பதற்கான வழிவகை உருவாகும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தைப் போட்டு, தொழில் விரிவாக்கப் பணியில் ஈடுபடுவார்கள். உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சந்தையில் நிலவும் போட்டியை உத்தேசித்து லாபத்தைக் குறைத்து விற்பனையை அதிகரித்துக்கொள்வர். பணியாளர்களுக்கு உடன் பணியாற்றுபவர்களுடன் சச்சரவு ஏற்படும். பணி இலக்கை அடைவதில் காலதாமதம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நிவாகத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் குறைகளை மற்றவர்களிடம் பேசி குடும்ப அமைதிக்குப் பங்கம் விளைவிப்பர். சுய தொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தியும் அளவான லாபமும் காணப்ர். அரசியல்வாதிகள் புதிய லட்சியங்களை அடைய பொறுமை காக்க வேண்டும். விவசாயிகளுக்கு செலவுகள் அதிகரித்து வருமானம் குறைவாக இருக்கும். கால்நடைகள் ஓரளவுக்கு லாபம் தரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது. வீட்டுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. தாயின் உடல் நலனுக்காக மருத்துவ செலவு செய்ய நேரும். புத்திரர்கள் படிப்பில் முன்னேற்றம் கண்டு உங்களை மகிழ்விப்பார்கள். பூர்வீகச் சொத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். இஷ்ட தெய்வ வழிபாட்டை திருப்தியாக முடிப்பீர்கள். உங்கள் உடல்நலனுக்காக சிகிச்சை எடுக்க வேண்டிவரும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். தம்பதியர் ஒற்றுமை குறையும். நண்பர் ஆலோசனைகளை கவ்னமாகப் பின்பற்றுவீர்கள். உங்கள் சகோதரர்கள் ஆடம்பர செலவு செய்து கஷ்டங்களில் மாட்டிக்கொள்வார்கள். உங்கள் அறிவுரை அவர்களை நல்வழிப்படுத்தும். அனைவரிடகமும் காண்டிப்புடனும் கருணை மனதுடனும் நடப்பீர்கள்.

பரிகாரம்:

நரசிம்மரை வழிப்படுவதால், தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கன்னி:

வெகுநாள் தாமதமான செயல் ஒன்று அதிர்ஷ்டவசமாக நிறைவேறும். விவசாயிகளுக்கு சுமாரான வருமானம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் வரும் வருமானம் வீட்டு செலவுக்கு கை கொடுக்கும். தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உற்பத்தித்தரத்தை உயர்த்த பாடுபடுவர். வியாபாரிகள் சந்தைப் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். சக தொழிலதிபர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள் தாமதமாகிவிட்ட பணிகளை முடிக்க வேகம் காட்டுவர். பணி இலக்கை அடைய சிரமப்பட நேரும். எந்திரங்களைக் கையாளும்போது எச்சரிக்கை தேவை. வேலைக்குச் செல்லும் பெண்கள் பணிச் சுமையில் திணறுவர். குடும்பப் பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். வீட்டுச் செலவுக்கு தாராளமாகப் பணம் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் அளவான மூலதனத்தையும் , நிறைந்த உழைப்பையும் போடுவர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற அதிகம் செலவழிப்பர். கடினமான உழைப்பு உங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொடுக்கும். உங்களைப் பற்றி தவறான கருத்து கொண்டிருந்தவர்கள் இப்போது மனம் கனிந்து பாராட்டுவர். வீடு வாகன வசதிக்கு குறைவிருக்காது. தாயின் மனம் கோணாமல் நடப்பீர்கள். புத்திரர்கள் சோம்பலாக இருந்து காரியத்தைக் கோட்டை விடுவர். உங்களுடைய கனிவான அணுகுமுறை அவர்களை நல்வழிப்படுத்தும். பூர்வீகச் சொத்தின் பேரில் கடன் வாங்குவீர்கள். சில தீய மனிதர்கள் உங்களைப் புகழ்ந்து பேசி காரியம் சாதித்துக்கொள்ள முயல்வர். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்:

ஆஞ்சநேயரை வழிபடுவதால் மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

துலாம்:

குடும்பப் பெண்கள் கணவரின் அன்பும் தாராள பண வசதியும் கிடைக்கப் பெறுவர். ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். பணி புரியும் பெண்கள் கடுமையாக உழைத்து விற்பனை இலக்கை அடைவர். சுய தொழில் புரியும் பெண்கள் புதிய உத்திகளை பிரயோகித்து விற்பனையை அதிகரிப்பர். சேமிக்கும் அளவு லாபம் காண்பர். அரசியல்வாதிகள் மக்கள் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அவர்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல், விளைபொருளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பில் வேகத்தைக் காட்டி நல்ல பலன் காண்பர். தொழிலதிபர்கள் கூடுதல் முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவர். உற்பத்தி உயரும். சந்தைபபோட்டி குறைவதால் வியாபாரிகளுக்கு விற்பனை பெருகி வருமானம் உயரும். பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணியில் சிறந்து விளங்குவர். வீடு, வாகன வளர்ச்சி திருப்தியாக இருக்கும். பூர்வீக சொத்தில் வருகிற வருமானம் கூடும். புத்திரர்கள் சுறுசுறுப்போடு செயல்பட்டு படிப்பில் ஜொலிப்பார்கள். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். வயிறு சம்பந்தமான தொல்லை உண்டாகும்.எதிரிகளால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. தம்பதியர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் நடந்துகொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பர். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பரிகாரம்:

சனி பகவானை வழிபடுவதால், வாழ்வில் தொல்லை நீங்கி சுபம் பெருகும்.

விருச்சிகம்;

வருமானம் சீராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் வெற்றியைக் கொடுக்கும். ஆரோக்கியம் சிறக்கும் எதிரிகளால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. தம்பதியர் கருத்து வேறுபாடு கொள்வர். மூன்றாவது மனிதர்கள் தலையிட்டு தம்பதியரர் சேர முடியாமல் செய்து விடுவர். அறிமுகமில்லாத பெண்களிடம் பழகவேண்டாம். தொழிலதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். விற்பனையை அதிகரிக்க கடினமாக உழைத்து விற்பனையை அதிகரிப்பர். வெளியூர்ப் பயணம் அவசியமானால் மட்டுமே ஈடுபடவேண்டும். பணியாளர்கள் பணியிடத்தில் சுமுகநிலை காண்பார்கள். சம்பள உயர்வு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவார்கள். அலுவலகத்த்ல் சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு செலவுக்குத் தேவையான ப்ணம் கிடைக்கும். மற்றவர் முன்னிலையில் கணவரைப் பற்றி குறைவாகப் பேசினால் பிரச்சினை ஏற்படும். சுய தொழில் செய்யும் பெண்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு  மூலதனத்தை அதிகரிப்பர்.  விற்பனையைப் பெருக்கி ஆதாயம் காண்பர். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவர். விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். சகோதரர்கள் உதவி செய்வார்கள். வீடு, வாகனவகையில் பராமரிப்பு செலவு கூடும். தாய்வழி உறவினர்களுடன் நன்கு உறவாடுவீர்கள். புத்திரர்கள் எதிலும் அலட்சியம் காட்டி உங்களை சிரமத்துக்குள்ளாக்குவர். அவர்களை வழிநடத்த பெரு முயற்சியில் ஈடுபடுவீர்கள். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. சிரமங்களைத் தவிர்க்க எதிலும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

பரிகரம்:

லட்சுமியை வழிபடுவதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு:

புதிய முயற்சிகள் வெற்றி தரும்.  நாவன்மையால் தக்கபடி பேசி நன்மையடைவீர்கள். முழுமையான தாயன்பை அனுபவித்து மகிழ்வீர்கள். புத்திரர்கள் உங்கள் சொலலை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியக் குறைவு ஏற்டும்.மருத்துவசெலவு உண்டாகும். வழக்கு விவகாரத்தில் தாமதநிலை உண்டாகும். வாகனம் ஓட்டும்போது கவனம் தே. வை. உறவினர் உதவி கிட்டும். தம்பதியர் மனம் ஒன்றி வாழ்வர். தொழிலாளர்கள் உற்பத்தியைச் சீராக்க செய்யும் நடைமுறை சீர்திருத்தங்களால், நடைமுறைச் செலவு அதிகரிக்கும். வியாபாரத்திலும் அதிக போட்டி இருந்தாலும் லாபம் குறையாது. வெளியூர்ப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை அடைய முடியாமல் தவிப்பர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை அக்கறையுடன் பின்பற்றுவர். குடும்பப் பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி காணும் வகையில் கணவரைப் பெருமைப்படுத்தி நடந்துகொள்வர். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் கிடைக்கும். சுயதொழில்புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் மிகுதியான உழைப்போடு லாபகரமாக தொழிலை நடத்திச் செல்வர். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளர்களைச் சமாளிப்பதிலேயே நேரம் செலவாகும். விவசாயிகளுக்கு மிதமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருப்பார்கள்.

பரிகாரம்:

வினாயகரை வழிபடுவதால், வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறும்.

மகரம்:

பணி புரியும் பெண்கள் கையிலிருக்கும் நிலுவைப் பணிகளை முடித்து நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு மற்றும் சலுகைப் பயன்கள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நற்பெயர் பெறும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்வர். ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் நிதி உதவி பெற்று அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவர். கணவர் மற்றும் தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் மென்மையான முறையில் நடப்பது நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோர், ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவர். தொழிலதிபர்கள் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை சீராக்குவர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய நடைமுறையைப் பின்பற்றி வாடிக்கையாளரிடம் நன்மதிப்பு பெறுவர். விற்பனை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியில் காட்டும் ஆர்வம் பதவி உயர்வைப் பெற்றுத் தரும். பொதுவாக அனைத்து விஷயங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கிப் போவீர்கள். வீடு,வாகனத்தில் கிடைக்கிற வசதியைப் பயன்படுத்திக்கொள்வீர்கள். புத்திரர்கள் நல்லவர்களுடன் நட்பு கொள்வதோடு படிப்பு, செயல்திறனில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும் வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானம் உயரும். எதிரிகள் உங்களை அவமானப்படுத்த அலைவார்கள் . நீங்கள் பொறுமையோடு சமாளித்துவிடுவீர்கள். உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவுமுறையைப் பின்பற்றுவது நல்லது. அரசு சம்பந்தமான விஷயங்களில் மிதமான அணுகுமுறை நலல்து. தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்ப நல்லுறவை மேம்படுத்துவர். தெய்வ வழிபாடு, பெரியோரின் ஆசியினால், மனதில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்:

சாஸ்தாவை வழிபடுவதால் வருமானம் பன்மடங்கு உயரும்.

கும்பம்:

தொழிலதிபர்கள் தடைகளைத் தகர்த்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர்,. பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகள் போட்டியை சமாளித்து விற்பனையை உயர்த்தி லாபத்தைப் பெருக்குவர். வாடிக்கையாளர்கள் பெருகுவதால் வருமானம் பெருகும். சக வியாபாரிகளிடம் அளவோடு பழகுவது நல்லது. பணியாளர்கள் உற்சாகமுடன் பணியாற்றி பணி இலககினை முடிப்பர். சம்பள உயர்வு, சலுகைப் பயன் எளிதில் கிடைக்கும். பணி புரியும் பெண்கள் சக பணியாளர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பர். நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். குடும்பப் பெண்கள் உறவினர் வீட்டு  நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வர். குடும்பச் செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த அனைத்தையும் கிடைக்கப் பெறுவார்கள். ஆதரவாளர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகளின் விலை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளைர்ப்பில் வருமானம் கூடும். மாணவர்கள் கவனமுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். வீடு, வாகனத்தில் தேவைப்படும் ரிப்பேர், வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புத்திரர் அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். சிலசமயம் உங்களை எதிர்க்கவும் தயங்கமாட்டார்கள். கோபத்தில் அனல் கக்குவார்கள். பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். அரசு தொடர்பான அலுவல்களில் அனுகூலம் பெறுவதில் காலதாமதம் ஆகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரியின் செயல்கள் பலமிழந்து போகும். உறவினர்கள் மதிப்பு காட்டி உபசரித்து உறவாடுவர். தம்பதியர் அன்புடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். நண்பர்கள் சந்திப்பினால் நன்மை உண்டாகும். சகோதரர்களுக்கு மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும்.  அஷ்டமச் சனியால் அனுபவித்த தொல்லைகளுக்கு விடிவு கிடைக்கும். உங்களுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.

பரிகாரம்:

கிருஷ்ணரை வழிபடுவதால் எதிர்பார்ப்பு அனைத்தும் நல்லவிதமாக நிறைவேறும்.

மீனம்:

தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து பொருள் உற்பத்தியை அதிகரிப்பர். தொழிற்கருவிகள் புதிதாக வாங்குவீர்கள்.மூலதனத்தை அதிகப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வர். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து விற்பனையும் பண வரவும் கூடும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் முன் பயணத்தின் அவசியம் உணர்ந்து அதனை மேற்கொள்ளவேண்டும். பணியாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து நிர்வாகத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். எதிர்பாத்த சலுகைகளை நிர்வாகம் வழங்கும். சக பணியாளர்களிடம் அதிக நெருக்கம் காட்ட்க்கூடாது. பணிபுரியும் பெண்கள் கவனமுடன் செயல்பட்டு பணி இலக்கைப் பூர்த்தி செய்வர். தாமதமான பதவி உயர்வு தற்போது கிடைக்கும். குடும்பப் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்தோஷம் காண்பர். எதிர்கால வளர்ச்சி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர். ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் வளர்ச்சி காண்பர். சகதொழில் சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களுக்காக அதிக பணம் செலவழிப்பர். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூல் கிடைக்கும். புதிய கால்நடை வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியரின் பாராட்டைப் பெறுவர். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவர். வீடு வாகன வகையில் தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறி நம்பிக்கை பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் தேவையான புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பழைய கடனை அடைப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். நண்பர்களின் உதவி முக்கிய தருணங்களில் கிடைக்கும். வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தாராள பணச் செலவில் குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வருமானம் சிறப்பாக அமையும்.

பரிகாரம்:

பைரவரை வழிபடுவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>