/* ]]> */
Feb 232012
 

மாற்றான் படத்தில் டபுள் ரோல் சூர்யா

மாற்றான் சூர்யா

மாற்றான் சூர்யா

‘மாற்றான்’ படத்தில் நடிகர் சூர்யா ட்வின்ஸாக நடிக்கிறார். ஹீரோவும் இவரே. ; வில்லனும் இவரே. இரண்டு சூர்யாக்களும் சூடாக மோதிக்கொள்ளும் காட்சி அமைக்கப்பட்டிருக்காம். இது சிம்ரனுக்காக இரண்டு அஜீத்கள்  ‘வாலி’ மோதிக்கொள்வதுபோல் இருக்குமாம்.

சித்தி நடிகை பெப்ஸி-தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்சினைக்கு தோதாக ஒரு அபாயச் சங்கை ஊதியிருக்கிறார். “ பெரிய திரை அளவுக்கு சின்னத் துறையில் சம்பளம் கொடுக்க முடியாது. எங்களுக்கு ஏழு பிரிவு தொழிலாளர்கள் இருந்தால் போதும். அவர்களை வச்சு புது அமைப்பு ஏற்படுத்திக்கிறோம். யாராவது பிரச்சினை செய்வதென்றால் அவர்கள்  கோர்ட்டுக்குப் போகலாம். “ என்று கூறி வருகிறாராம், சித்தி. அவரது இந்தக் கருத்துக்கு ஏகப்பட்ட ஆதரவாம்.

‘ ஃபோர் ஃபிரேம்ஸ் ‘ கல்யாணங்கள்  சினிமா வட்டாரத்தில் பிரபலம். அப்படிப்பட்ட அந்த கல்யாணத்துக்கு வந்த ரஜினிகாந்த், ‘ லேட்டாயிடுச்சா?’ என்று கேட்டபடியே இன்னோவா காரிலிருந்து இறங்கினார். வேஷ்டி சட்டையில் இருந்த அவர், முன் வரிசையில் போய் தனியாக அமர்ந்தார். அங்கு வந்த சூர்யா, அவரை அன்போடு அழைத்துச் சென்று தன் தந்தை சிவகுமார் அருகில் அமர வைத்தார். சிவகுமாரும் ரஜினிகாந்த்தும் அந்தக்கால நினைவுகளில் மூழ்கி ¾ மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘கமல்’ படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறதாம். இவர் ஒருகாலத்தில் ஜாக்கிசான் படத்தை இந்தியா முழுவதும் திரையிட்டவர் என்பதால், இவரது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க, அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம், ஜாக்கிசான். ‘தசாவதாரம்’ தொட்ட உறவு, எனலாம்.

 ஒடிசல் இசையமைப்பாளர் ஒரே பாடலில் உலகப் புகழ் பெற்றவர். அவர் இப்போது, பாடகி நடிகையின் பார்வையில் விழுந்திருக்கிறாராம். “ உன்னைவிட அவங்க எவ்வளவோ பெரியவங்க. ! உஷாரா இருந்துக்க! என்று வெடவெட ஹீரோ கடுகடுத்தாராம். உடனே, “ என்னை விடுங்க. உங்க கதை எப்படி?”என்று பதிலுக்கு ஒடிசல் கேட்க , அந்த இடமே கலகல்த்து விட்டதாம்.

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>