/* ]]> */
Aug 292012
 

மாத ராசி பலன் செப்டம்பர் 2012

Monthly-Forecast-month-rasi-palan மாத ராசி பலன் செப்டம்பர் 2012

Monthly-Forecast-month-rasi-palan மாத ராசி பலன் செப்டம்பர் 2012

செப்டம்பர் மாத ராசி பலன்

மேஷம்:

உங்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. தம்பதியரிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். புத்திரர் அமைதி இழப்பர். தயக்கத்துடனேயே எதிலும் ஈடுபட்டு குழப்பமடைவர். எதிரிகளின் கேலிப்பேச்சு உங்களை எதுவும் செய்யாது. நன்கு யோசித்து செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றில் பெரிய மாற்றம் எதுவும் செய்யவேண்டாம். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் போட்டியை சமாளித்து  நல்ல லாபம் ஈட்டும் நேரம் இது. பணியாளர்களுக்கு அலுவலகத்தில் கிடைக்கவேண்டிய சலுகைகள் தடையின்றிக் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கனவருடன் சச்சரவில் ஈடுபடுவர். பணிபுரியும் பெண்கள் மேலதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடப்பர். அரசியல்வாதிகளால் எதிரிகளால் துன்புறுவர். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் தங்கள் இலக்கை அடைவர்.

ரிஷபம்:

இந்த மாதம் இங்கள் மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். புத்திரர்கள் ஒழுக்கத்துடன் நடப்பதோடு கல்வியிலும் முன்னேறுவர். வீடு வாகனத்தில் வேண்டிய மாற்றங்களை செய்யலாம். தம்பதியர் கருத்து வேற்றுமை நீங்கி மகிழ்வுறுவர். நண்பர்கள் உதவியாக இருப்பர். குடும்ப வருமானம் திருப்தியாக இருக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்கி  லாபம் காண்பர். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவதோடு சக பணியாளர்களின் ஆதரவையும் பெறுவர். குடும்ப்த்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் ப்வேச்சை மதித்து நடப்பர். வேலைக்குச் செல்லும் பெண்கள் கையிலிருக்கும் வேலைகளை முடிப்பர். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்:

ஆடம்பரச் செலவு செய்து சிரமப்படுவீர்கள். புத்திரர்களின் ஆரோக்கியம் கெடும். சொத்தை அடமானம் வைக்கும்போது நம்பகத் தன்மையுள்ளவர்களிடம்  தொடர்புகொள்வது ந்ல்லது. தம்பதியர் ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் செயல்படுவர். அரசாங்கத்திலிருந்து நல்ல சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று கவர்ச்சிகரமான முயற்சிகளில் ஈடுபட்டு பணியாளர்கள் சக பணியாளர் மத்தியில் செல்வாக்கு பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் பெருமையைப் பாராட்டுவர். செலவுக்குத் தேவையான பணவரவு கிடைப்பதால், குடும்பத்தை சீராக நடத்திச் செல்வர். பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை அடைவ்ர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். விவசாயிகளுக்கு, விவசாய்த்திலும் கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் காண்பர். மாணவர்கள் கவனமாக படித்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
கடகம்:

உங்கள் ஆரோக்கியத்தை  சீராக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவது நல்லது. . புத்திரர்கள் கெட்ட சகவாசத்தால் சீரழிவர். ஆனால் அவர்களின் ஆரோக்கியம் பலமாகவே இருக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்வளிக்கும். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் எதிரிகள் உங்களை ஏமாற்ற நினைத்து ஏமாந்து போவார்கள். நீங்கள் திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களை செய்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். புதிய வாடிக்கயாளர்களின் வருகையால், லாபம் பெருகும். பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணி இலக்கை எட்டுவர். குடும்பப் பெண்கள் கணவரின் விருப்பபடி நடந்து குடும்ப அமைதியைக் காப்பர். பணிக்குசெல்லும் பெண்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். பதவி உயர்வையும் பெறுவர். அரசியல்வாதிகள் தங்கள் தகுதிக்கு மீறிய பதவியைப் பெறுவார்கல். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதோடு பெற்றோரின் அரவணைப்பையும் பெறுவர்.

சிம்மம்:

ஆரோக்கியம் நலிவடையும். உங்கள் தைரியம் குறையும். விடாமுயற்சி மட்டுமே வெற்றியளிக்கும் குடும்ப வர
வருமானத்துக்கு குறைவிருக்காது. புத்திரர் பிடிவாத குணத்தை விட்டொழித்து  உங்கள் சொல்படி நடப்பர். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டை வாடகைக்கு விடும் முன்பு நன்கு யோசித்து  நம்பகமானவர்களிடம் விடுவது நல்லது. தம்பதியர் ஒற்றுமையுடன்  நடந்து குடும்பத்தை சிறக்கச் செய்வார்கள். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைத்து  சமயத்தில் கை கொடுக்கும். தொழிலதிபர்கள் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உற்பத்தியிப் பெருக்குவர். வாடிக்கயாளர்களைப் பெருக்கி லாபம் காண்பர். பணியாளர்கள்சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவர். குடும்பப் பெண்களுக்கு குடும்பத்துக்கு தேவையான வருமானம் கிடைக்கும். பணி புரியும் பெண்கள்  பணியிடத்தில் சிறப்புறுவர். சக பணியாளர் மத்தியில் செல்வாக்கு பெறுவர். அரசியல்வாதிகளுக்கு ஆதரவாளர்களின் பலம் கூடும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். கா;ல்நடை வளர்ப்பிலும் லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள்.

கன்னி:

உடல்நலத்தைப் பேணவேண்டியது அவசியம். சரியான சிகிச்சை சில சமயம் தேவைப்படும். கட்டுப்பாடான உணவுமுறை அவசியம். சரியான சிந்தனையுடன் தைரியத்துடன் செயல்படுவதால் புகழும் வெற்றியும் கிடைக்கும். தவிர்க்க இயலாத ஆடம்பரச் செலவு வந்து சேரும்.  உங்கள் தீர்க்க சிந்தனையை பாராட்டும்  வி.ஐ.பி. ஒருவரின் அறிமுகமும் கிடைக்கும். திருட்டு பயம் உண்டு என்பதால், வீடு உள்ளிட்ட சொத்துக்களுக்கு தகுந்த பாதுகாப்பு செய்யவேண்டியது அவசியம். தம்பதியர் ஒற்றுமைக்கு பாதிப்பில்லை. நண்பர்களின் உதவி உண்டு. தொழிலதிபர்கள் கூடுதல் மேற்பார்வையோடு ,அளவான மூலதனத்தில் லாபம் காண்பர். போட்டொயை சரிசெய்ய  விலையைக் க்றைக்கவேண்டியிருப்பதால், லாபம் சற்று முறையும். பணியாளர்கள் குடும்பப் பிரச்சினைகளால், பணியில் சரிவ்ர கவனம் செலுத்த இயலாது. குடும்பப் பெண்கள் கணவருக்குத் தெரியாமல் உறவினர்களிடம் எந்த டீலிங்கிலும் ஈடுபடக்கூடாது.  சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், உற்பத்தித் தரம் உயரும்.  அரசியல்வாதிகள் அதிகார தோரணையில் எவரையும் உதாசீனம் செய்தால், நற்பெயர் கெட்டுவிடும் வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு நல்ல மகசூலும் உபரி வருமானமும் உண்டு. மாணவர்கள் நல்ல முறயில் தேர்ச்சி பெறுவர்.

துலாம்:

உடல்நலம் ஒத்துழைப்பு தராது. தியானம் செய்வது நல்லது. யாருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதியைத் தரக்கூடாது. நன்கு யோசித்துச் செய்யும் செயல்களால் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். புத்திரர்களால் பெறுமை கிடைக்கும். தம்பதியர் தியாக மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். வாகனம் இயக்குவதில் நிதானம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்ககூடாது.  அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத வகையில் சொத்து வந்து சேரும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தில் புதிய தொழிற்கருவிகள் வாங்குவர். பொருள் உற்பத்தியிலும், விற்பனையிலும் சாதிக்க முடியும். குடும்பப் பெண்களுக்கு குடும்பத் தேவைக்கான பணம் கிடைப்பதில் சிரமம் இருக்காது. பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெறுவர். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெற முடியும். விவசாயிகளுக்கு விவசாயக் கடன் கிடைக்கும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவர்.

விருச்சிகம்:

உடல்நலக் குறைவு வரலாம். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ள தயக்கம் கூடாது.  பிறர் பார்வையில் படும்படி அதிக செலவு செய்ய வேண்டாம். எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும். நல்லவர்களின் உதவி கிடைக்கும். புத்திரர்கள் படிப்பு வேலை வாய்ப்பில் நல்ல நிலையை அடைவர். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கணவன் -மனைவி பாசத்துடன் நடந்துகொள்வர். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அதிக கொள்முதல் செய்யும் அளவுக்கு வியாபாரமும்  உற்பத்தியும் சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் ஆர்வத்துடன் உழைப்பதால், பணி இலக்கை அடைவர். அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். குடும்பப் பெண்கள் சேமிப்புப் பணத்தை குடும்பத் தேவைக்கு பயன்படுத்துவர். கணவரின் உறவினர்களிடத்தில் நற்பெயர் பெறுவர். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களின் உதவியால், பணி இலக்கை அடைவர். அரசியல்வாதிகள் ஏழைகளுக்கு உதவி செய்து வாக்கு வங்கியைப் பெருக்கிக்கொள்வர். விவசாயிகளுக்கு தேவையான விவசாயக் கடன் கிடைக்கும். மாணவர்கல் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவர்.

தனுசு:

உடல்நலம் பலம் பெறும். எதிரிகள் பலமிழந்து போவர். புத்திரர்கள் உங்கள் சொல்படி நடப்பர். பூர்வீக சொத்தில் எதிர்பாராத வருமானம் வரும். தம்பதியரிடம் கருத்து வேறுபாடு தோன்றும். ஆனாலும், குடும்பத்தை நடத்திச் செல்வர். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் தொழிலாளர்களால் ஏற்படும் பிரச்சினைகளை நிர்வாகத் திறமையால் சமாளிப்பார்கள். போட்டியை உத்தேசித்து சலுகை விலையில் விற்பனை செய்யவேண்டியிருக்கும். பணியாளர்கள் குழப்பமான சிந்தனைகளால் பணி இலக்கை எட்டமுடியாமல் தவிப்பர். குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாட்டால், குடும்பத்தைக் கஷ்டப்பட்டு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்கி உற்பத்தியை மேம்படுத்த பாடுபடுவர். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டமான வழியில் பதவிப் பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் சராசரி மகசூல் பெறுவர். மாணவர்கள் கூடுதல் நேரம் செலவழித்துப் படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

மகரம்:

உடல் நலம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்கள் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். இதுவரை தாமதமான பணிகளை இப்போது செய்து முடிப்பீர்கள். சமூகப்பணியில்  ஆர்வம் இருந்தாலும் ஈடுபட நேரம் இருக்காது. சொந்தப்பணிக்கே நேரம் போதாது. பூர்வீகச் சொத்திலிருந்து ஓரளவுக்கு வருமானம் வரும். புத்திரர்கள் ஆடம்பரப் பொருளகளை வாங்கித் தரும்படி கேட்பர். நெருப்பு, கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். வீடு வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு செய்யவேண்டி வரும். தம்பதியர் ஈகோ பிரச்சினையால், கருத்து வேருபடுவர். தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பணிகளை இந்த மாதம் ஒத்திவைப்பது நல்லது. லாபம் சுமாராகத்தான் இருக்கும். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச் செலவு அடிகரிக்கும். பணிபௌரியும் பெண்கள்பணிகளை நிறைவேற்றி முடிப்பர். அரசியல்வாதிகள் பொது விஷயங்கலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. விவசாய்களுக்கு சுமாரான மகசூல்தான். கால்நடை வாங்குவதை ஒத்திவைக்கவேண்டும். மாணவர்கள்க்கு படிப்பில் கவனமும் விளையாட்டில் பாதுகாப்பும் அவசியம்.

கும்பம்:

உடல்நலக் குறைவு ஏற்படலாம். தேவையான ஓய்வு அவசியம். எந்த புதிய செயல்களிலும் ஈடுபடவேண்டாம். நல்லவர் போல் நடித்து சிலர் உங்களை ஏமாற்றுவர். வீடு வாகனத்தில் அறிமுகமில்லாத எவருக்கும் இடம்தரக்கூடாது.  பேச்சில் நிதானம் தேவை. புத்திரர்கள் பிடிவாத குணத்தினால் உங்களுக்கு ஏறுக்கு மாறாக நடப்பர். தம்பதியர் குடும்பநிலையறிந்து விட்டுக்கொடுத்து நடப்பர். தொழிலபர்களுக்கு எதிராக தொழிலாளர்கள் நடந்து கொள்வதால் சமாளிக்க முடியாமல் சிரமம் ஏற்படும். தொழிலில் அளவாக மூலதனம் இடுவ்து ந;ல்லது. குடும்பப் பெண்கள் தற்போதைய கஷ்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல், கணவரின் கடந்தகால அன்பை நினைவில் கொண்டு குடும்பத்தை நடத்திக்கொண்டு போவது மட்டுமே தற்போதைய நிலைமைக்கு நல்லது. பணிபுரியும் பெண்கள் இலக்கை எட்ட முடியாமல் சிரமப்படுவர். அரசியல்வாதிகள் வம்பு விவகாரங்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.  விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் படிப்பில் சுமாரான தேர்ச்சி அடைவர்.

மீனம் :

உடல்நலம் சிறக்கும். உங்கள் நடை,உடை, பாவனைகளில் புதுப் பொலிவு ஏற்படும். புத்திரர்களின் நடத்தையில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். அவர்களின் முன்னேற்றம் திருப்தியளிக்கும். புதியவர்களின் நட்பும் சமூக அந்தஸ்தும் கிடைக்கும். வீடு வானத்தில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளலாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். கடன் வசூலாகும். எதிரிகளின் தொல்லை ஒழியும். தம்பதியரிடையே அன்பு மிளிரும். நெருங்கிய நண்பருக்கு உதவி செய்வீர்கள். வீட்டின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதால், வியாபாரத்தைப் பெருக்குவர். வியாபாரிகள் அதிக சரக்கு கொள்முதல் செய்வதால், விற்பனையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு.  பணியாளர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். குடும்பப் பெண்கள் குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலையைக் கொண்டுவருவர். பணிபுரியும் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி புதிய பொறுப்புகளை ஏற்பர். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல லாபம் ஈட்டுவர். அரசியல்வாதிகளுக்கு வெகுந்ளாக எதிர்பார்த்த பதவி, பொறுப்புகள் எளிதாகக் கிடைக்கும். விவசாயிகலுக்கு நல்ல மகசூல் கிடைக்கும் கால்நடை வளர்ப்பிலும் நல்ல வருமானம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சாதனை நிகழ்த்துவர்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>