மெரினா விமர்சனம் – மெரினா சினிமா
விமர்சனம்
மெரினா திரைப்பட விமர்சனம்
மெரினா சினிமா எதிர்பார்ப்பு :
பசங்க சூப்பஹிட் கொடுத்து அவார்டு குமித்த பாண்டிராஜ்
விஜய் டிவியின் கல கல ஹோஸ்ட் சிவ கார்த்திகேயன்
களவாணியில் பாய்ஸை களவாண்ட ஓவியா
இவங்க மூணு பேர் காம்பினேஷனில் வரும் படம்.
மெரினா திரைப்பட டீம் :
கதை , திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு : பாண்டிராஜ்
இசை : கிரிஷ்
கேமரா : விஜய்
மெரினா திரைப்படம் நடிக நடிகையர் :
சிவ கார்த்திகேயன்
ஓவியா
ஜெயப்பிரகாஷ்
பாண்டியன்
கௌதம் புருஷோத்
கௌரவ வேடம் :
அமீர் , பிரகாஷ் ராஜ், சசிகுமார்,ஸ்நேஹா, விக்ரம், விமல்
மெரினா சினிமா கதை :
பீச்சோர சிறுவர்களின் அன்றாட வாழ்க்கை . பீச்சில் சுற்றும் வித்தைக்காரன், குதிரைக்காரன், பிச்சைக்காரன் , இத்யாதி ப்ள்ஸ் லவ்வர்ஸ் சிவகார்த்திகேயன் ஓவியா. இதுதான் கதைக்களம். வித்தியாசமான கதைக்களம். வச்சு பின்னியிருக்கலாம். ஆனா?
நடிப்பு :
சிவகார்த்திகேயன் : முதல் படம். டிவியில் கல கல வென வருபவர் இதில் லகலகவென கொஞ்சம் பயத்தோடே சுற்றுகிறார். கொஞ்சம் கேப் கிடைத்தால் சிரிப்பு வராத ஜோக் சொல்லி கடுப்பேத்துறார் யுவர் ஆனர் ! ஓவியாவை லவ்வி கடைசியில் அவர் கொடுக்கும் லாலி பாப்பை வாயில் வைத்துக் கொள்ளும் பேக்கு ரோல் ! அதை இவ்வளவு அசட்டையாய் அவர் செய்ய, பேக்கு அவரா நாமா புரியல !
ஓவியா : குட்டி களவாணியில லட்சணமா இருந்துது. இதுலயும் தான் . ஹி ஹி. அழகா வந்து லவ் பண்ணி கடைசியில் சிவாவை விட்டுட்டு வேறொரு ஆள கை புடிக்குது. அதுக்குண்டான கேரக்டரைசேஷன்.. ஹு ஹூம்.
ஜெயப்பிரகாஷ் : மனிதன் எந்த ரோலிலும் சோடை போக மாட்டார். இதிலும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்.
பசங்க : பின்னுறாய்ங்க ! குட்டிப்பசங்க நடிப்புல ஒண்ணும் குறை வைக்கல !
இசை :
கிரிஷ் வணக்கம் சென்னையில் கலக்குகிறார். நண்பன் பாட்டில் விஜய் பிரகாஷ் குரல் அருமை !
கேமரா :
கடலும் கடல் சார்ந்த இடமும் கேமராவில் பளீச்சென்று வர விஜய் உழைத்திருக்கிறார். அது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது
இயக்கம் :
அவார்டு வின்னர் பாண்டிராஜ் இந்த முறை சொதப்பியிருக்கிறார். ஏதோ நாலு சின்னப் பசங்க லைஃபை சொல்ல வந்துட்டு அதுலயும் கன்ஃப்யூஸ் ஆகி மெசேஜ் சொல்லப் போய் அப்புறம் யதார்த்தம் என்ற பேரில் லவ்வர்சை பிரித்து … பாண்டிராஜ் சார், அடுத்த முறை கொஞ்சம் நிதானமாய் ஸ்க்ரீன் ப்ளே எழுதுங்க. பசங்க படத்துல இருக்குற ஃப்ளோ இதுல மருந்துக்கு கூட இல்லையே. அதுவும் லவ்ஸ் காட்டுறேன்னு டிஃப்ன் பாக்ஸ்க்குள்ள டிஃப்ன் பாக்ஸ்னு அருதப் பழைய சீன எல்லாம் வச்சு ஏன் சார், கொடும படுத்துறீங்க ?
பார்க்கலாமா ? :
அதவிட அந்த டைமுல சென்னக்காரங்க பீச்சுக்கு போங்கப்பா.. நல்ல மெரீனா பார்க்கலாம் !
ஃபைனல் வெர்டிக்ட் :
மெரீனா – பீச் சுண்டல் ஆனா ஆறிப் போச்சு !
——————————————————–
ஆங்கிலத்தில் மெரினா விமர்சனம் படிக்க









சமீபத்திய பின்னூட்டங்கள்